Thursday, March 31, 2011

01 04 2011 thokuppu

http://kavithaisasikala2000.blogspot.com/

எண்ணத்தில் வந்த கவிதை எல்லாம்
புன்னகைக்கும் பொய்யோடு!!
இல்லாததை சேர்த்து சொல்லி அழகாக்கும்!!
கார்முகில் குளிர்ந்து மழையாக
வருவதுபோல !!
-------------------------

பூ வொன்று பூத்தது!!
மொட்டுக்கள் யாவும்
இதழ் விரித்துச் சிரித்து
மணம் வீசி வாழ்த்து சொல்லுதாம்!!
------------------------------

நீ வரும் வரை காத்திருந்து
நனைவேன்!!மழையே!!
உன் ஜோடி பெண்ணோ?
அவளோடு சேர்ந்து நனைய ஆசை !!
அனுப்பேன்!!
---------------------------

விழியால் வருடி
விரலால்தீண்ட மாட்டாயா?
விலகி சென்று என்ன கண்டாய்!!
நீ தொடுவாய் என்றால் நானும் சிலையாய்
நிற்பேனே!!
------------------------

தாயின் கருவில் உயிராகஉதித்து ,
பிறந்து .. மழலையாக.. சகோதரியாக..
தோழியாக.. இல்லறம் காணும் மனைவியாக..
கணவனுடன் மகிழ்ந்து தாயாகி ....மாமியாகி ...
எத்தனை... கோலங்கள் போடுகிறாய் பெண்ணே!
----------------------

இதயத்தை திறந்து வைத்தேன் ..அதில்
இனிமையை கொட்டி வைத்தேன்!!
கடுமையை குறைத்து விட்டேன் !
என் கவலை குறைந்ததடி தோழி !!
உதயத்தை தேடுகிறேன் !! அவன்
உள்ளத்தை நாடுகிறேன் !!
கவிதைகள் பெருகுதடி !! என்
கற்பனை விரியுதடி ..தோழி!!
காணவும் முடியவில்லை ! பேசவோ துணிவும் இல்லை !
என் நிலை எடுத்துரைக்க யாரும் இல்லை! ! யாரும் இல்லை!!
என்னவன் மனம் அறிவேன் !! அதில் நான் உண்டு …
பேசி களிக்க மனம் துடித்தாலும்
தயக்கம் தான் கொல்லுதடி தோழி!!
இதயத்தை திறந்து வைத்தேன்..அதில்
இனிமையை சேர்த்து வைத்தேன்!!
படுத்தாலும் தூக்கம் இல்லை!!
உணவு எடுக்க மனமும் இல்லை!!
“திமிர் அழகி ” என்றானே !! கோபமா ? சாபமா ?
அமாவாசைக்கு மாடிக்கு போகாதே !!
பௌர்ணமி வந்ததோ என மக்கள் ஏமாந்து போவார்கள் என்றானே!! என்னை பார்த்து!!
நல்ல செயலும் சிந்தனையும் தான்
உண்மை அழகு .. புரியாதா ???
---------------------------------

பிறந்த குழந்தையின்,
உடலுக்கு உயிரையும்,
மனதிற்கு அன்பையும்,
தன் ரத்தத்தை பாலாக்கி
இரு "தனம்" தந்தாய்!!
பண்பையும் படிப்பையும் உணவோடு
சேர்த்து தந்தாய் .. தருகிறாய்!
ஊன்றுகோலாய் இருந்து,
வெற்றி கிட்ட சொல்லி தருகிறாய் !!
பலன் ஏதும் வேண்டாது நீ இருக்க
படித்து பட்டம் வாங்கி கை நிறைய
சம்பாதித்தும் உனக்கு என்ன செய்வேன் அம்மா?
உனக்கு சமம் கடவுளும் இல்லை !!
-------------------------------

சிருமுகிலாய் சிகை ஆட –அதில்
சிறு முல்லை சிரித்தாட …
சிறு பொட்டும் சேர்ந்தாட
கண்களிலே கயல் ஆட
முன் அழகில் இரு முயலாட ..
அவள் சிற்றிடையும் சேர்ந்தாட
முகம் பார்த்து மூவுலகும் ஆட
இள நகையில் நான் ஆட
தளுக்கி மினுக்கி தளிராக
தங்க சிலை வந்தாளே !!
கண்டதும் எனை மறந்தேன் ! இழந்தேன் !!
ஆடும் மனம் அவள் பின்னால் ..
எனை கொன்றாள் தன்னாலே !!
என்ன சொல்வேன் ? என்ன செய்வேன் ?
---------------------------

எங்கும் கவிதை...எதிலும் கவிதை
என் சொற்பூக்கள் நெஞ்சில் பதிந்து
மனதில் நிறைந்து ... லயித்து
கருத்தில் புதைந்து... படிக்கும்போது
கிடைக்கும் ஓசைதான்
என் எழுத்தோசை!!
--------------------------------

தேவதை எங்கே என் தேவதை எங்கே?
கண்களை மூடினாலும் நீ!!
கனவிலும் நீ! விழித்து
காணும் பொருள் எல்லாம் நீ!
தேவதை எங்கே என் தேவதை எங்கே?
மனமும் உடலும் குளுர்ச்சியாக்குவது நீ!
என் உயிராகி உறவாகி நின்றவளே!!
நீ பேசாத ஒவ்வொரு நொடியும் நரகமாக ...
என் உலகே நீ தானே!
தேவதை எங்கே என் தேவதை எங்கே? எங்கே ?
என் ஆன்மா மௌனமாய் ...உன் நினைவோ சுனாமியாய்!!
மண்புழுவாய்த் துடிக்கும் என் மனம் "மணம்" நாடுதே!!
நிர்மல மனம் ....நிம்மதி இன்றி மரண வலி இது தானோ?
----------------------
படுக்க மட்டும் பெண் இல்லை !!
பிள்ளை பெரும் மிசின் இல்லை பெண்!!
டௌரி கேட்டு கேவலபடுத்தும் ஆண் வர்க்கம் ...
அதற்க்கு துணை போகும் அம்மா வர்க்கம்!!
பணம் சேர்க்கும் மனசுக்கு திருமணம் எதுக்கு?
காதலிக்க ஒருத்தி!! கல்யாணம் செய்ய ஒருத்தி!!
இளம் மனம் ஏலம் போகிறதே!!
என்று திருந்தும் இந்த மனம்?
இன்று மனைவி...நாளை தாய் ..பின் மாமியார்..
.பெண்ணுக்கு பெண் தான் எதிரி!!
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று அழியும் இந்த பெண் அடிமை மோகம்?
------------------------------------------
பெண்களின் பார்வைக்கு அர்த்தம் புரிந்தால்
ஆண்கள் வேலை மிச்சமாகி விடும் !! ம்ம்ம் …
ஆண்களின் பேச்சும் பார்வையும் நேர்மையா?
அதிகம் இல்லை !!?? பெண் மனம் படும் பாடு
யாருக்கு புரியும் ??
குணா குன்றாம் ஆண்கள்…ஐயோ ….!!
இருமனம் ஒன்றினால் தான் அன்பு , நட்பு , காதல்
எல்லாம் ?? கனவுகள் இல்லாத கண்களும் இல்லை....
உறவுகள் இல்லாத உயிரும் இல்லை...
பிரிவுகள் இல்லாத உறவுகள் இல்லை...
இதயமும் இல்லை...!!!!
உன்னிடம் சொல்ல முடியவில்லை
என் காதலை...என்ன செய்வேன்??
புரியாமல் பெண்ணை பேசி என்ன பயன் ?
மல்லிகை மணக்கவில்லை !! நீ என்னிடம்
இருந்தால் காகித பூவும் மணக்குமே!!
----------------------------------------------

Saturday, March 19, 2011

ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் மின்னும் கண்கள்!!...படுத்துறங்கும் உன் மனமே !!!!

ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் மின்னும் கண்கள்!!
இதயம் இழந்தேன்!! ஒளிர் நிலவாய்...குளிர் நிலவாய் நீ வந்தாய்!!

உன் ஏவுகணை கண்களில் வீழ்ந்தேன்!!
எழவில்லை....என் ஜன்னல் அழகியே !!

-----------------------

வந்தேன் காதலுடன் ..உன்னை பார்க்க

கண்டேன் உன்னை கைக் குழந்தையுடன் ?!

வடிந்தது கண்ணீர் இல்லை ரத்தம்!!

சத்தமின்றி மனதிற்குள் யுத்தம் !!.

வாழும் நாள் முழுவதும் உன்னோடு ...
இருக்க நினைத்தேனே!!

பணம் சேர்க்க பயணம் செய்தேன்!!

சேர்த்து வந்தேன்!! சேர்த்து வந்தேன்!!

என்னவளே!! சொல்லாமல் சென்ற

என் குற்றம் புரிய வர ....

நடை பிணமானேன் இன்று!!

ஆயிரம் கதை பேசும் உன் கண்கள் எங்கே??

பூமி பிளந்து- உயிரோடு சமாதி ஆக வேண்டும்

நான் இங்கே!! நான் இங்கே!!

----------------------------------------

உன்னை பிரிந்தேன்!! நரகத்தில் வாழ்கிறேன்!!

உன்னை நினைத்து நாளும் சாகிறேன்!!

காதல் இனிக்கும் கரும்பா? எரிக்கும் நெருப்பா ?
காதல் அமிர்தமா? நஞ்சா?
காதல் தென்றலா? புயலா? புதிரா??

தெரியவில்லை!!...

எதையும் ஆக்கும் சக்தி பெண்ணுக்குத்தானே!

உன் காதல் வரம் தந்து விடு!!

----------------------------------------

உயிருக்குள் மனித இனம் அழகு!!அதற்குள் பெண் அழகு!!

பெண்ணுக்குள் நீ அழகு!!
உனக்குள் எல்லாமே அழகு!! அழகு!!.

----------------------------------

சாரி சொல்ல வேண்டாம்!! சரியும் சொல்ல வேண்டாம்!!
பார்வை ஒன்றே போதும்!! ஆயிரம் கதை அது பேசுமே!!
நன்றி சொல்ல வேண்டாம்!! நகைத்தால் அது போதுமே!!

எனக்குள் நீயும் உனக்குள் நானும் சேர்ந்தபின்னே ....

சொல்லித்தெரிய வேண்டாமே!! உடல் இன்றி உயிரா?

உன்னிடம் இதயத்தை தந்துவிட்டு...தனிமையில் வாடுகிறேன்!!

நினைவெல்லாம் நீ இருக்க..பனி நிலவும் பாகற்காய் ஆனதென்ன?

மதி இழந்தேன் ரதியே!!

சொல் இழந்தேன் நிலவே!!

காக்க வைத்து கதவை சாத்தும் காதலியே!

காதலை வரமாக கொடு!!

மனதில் என்னை வைத்து

வெளியில் அறியாதது போல்

நடக்கும் மாமயிலே!! எனக்குள் நீயும் உனக்குள் நானும் சேர்ந்தபின்னே ....நடிப்பெதற்க்கு? இதயத்தை கடனாக கொடு!!

என்னை உன்னிடம் தொலைத்தேன்!!

தேடி சொல்லிவிடு!! எங்கே இருக்கிறேன்?

அவளுக்கு ரோஜா பூ கொடுத்தேன்!!

வெட்கத்தில் என்னவள் சிரித்து சிவக்க

ரோஜா நிறம் தோற்றது!!

அருகே வரவிடாத நீ

உன்னை சேர்ந்த என் காதலை

என்ன செய்வாய்?

துடிப்பதை விட உன் நடிப்பை ரசிக்க

அதிக நேரமாகிறது என் இதயத்திற்கு!!

என் தொலை பேசியில் சத்தம் தான் வருகிறது !!

உன் முத்தம் அல்ல!! நேரில் தாயேன்!!

குறைந்தா போவாய்?

வெயிலில் வெளியே போகாதே அன்பே!!

உன் நிழலை யாரும் மிதிக்க வேண்டாமே!!

நீ என் உலகமா? நீ மட்டுமே என் உலகமா?

எதுசரி?? நீயே சொல் அன்பான ராட்சசியே!!

காதல் எது? உடல் இருந்தும் உணர்வு இல்லாத நான்

எப்படி சொல்வேன்? காதலித்து விட்டேனே!!

கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!
எடுத்தவர் கொடுப்பதில்லை!!

மறைத்தவர் தருவதில்லை !!
நீதி என்றும் சாகாது !!

கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!

நீதியும் நெருப்பும் ஒன்றானால் …
நெருங்கிடும்போதே சுட்டு விடும் !!

சுட்டாலும் தங்கத்தின் நிறம் போமோ?
தொட்டாலும் மலர்களின் மணம் போமோ?
கற்றவர் கலங்குதல் அழகாமோ?

கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!

நாவுக்கும் மனதுக்கும் உறவுண்டா ?
சொல்லுக்கும் செயலுக்கும் உறவுண்டா ?
சுற்றமும் சுகமும் நீராமோ ?

இருப்பதர்க்கெல்லாம் பொருள் உண்டு
வருவதில் வெற்றி நமக்கு உண்டு
இரவுக்கு பின்னே பகல் உண்டு
நீதியும் ஒரு நாள் நமக்கு உண்டு !!
கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!

பசிகளில் ஆயிரம் வகை உண்டு
பார்ப்போம் அதற்கும் முடிவுண்டு

வந்ததில் எல்லாம் பொருளுண்டு
வருவதில் வெற்றியும் வரலாமே !!
கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!

காணும் பொருள் எல்லாம் நீயாக..

எண்ணமெல்லாம் முத்தாக!!

நீங்காத நினைவாக நீ தானே!!

திரும்பும் திசை எல்லாம் நீயாகவே!!

என் மனம் பித்தானதோ?

நான் உனக்கு கொடுத்த பூ கீழே !?

தடுக்கி விழுந்தேன்!!? ஓ!! பூவும் கல்லானதோ?

சுமப்பதிலும் சுகம் கண்டாள்!! பரிமாறி பசி மறந்தாள்!!

பாசத்தின் சாட்சியடா!! நடமாடும் வேள்வியடா !!

மனசு போற்றும் மகராசி!! எங்கள் தலை வணங்கும் அவள் ஆட்சி!!

அம்மா! அம்மா!! அம்மா!! இறையும் அவளுக்கு ஈடில்லையடா!!

தொலைவினில் அவள் முகம் பார்த்தேன்!!

தடுமாறி தொலைந்தேன் நானே!!

அவள் பேசும் தருணமெல்லாம் இனிப்பு மழை!!

என் இதயம் நீராய் கரைந்திட

"ஈர்த்தவள்" மனதினுள் சென்றாள்!! அங்கு நின்றாள்!!

நீருக்குள்ளே நின்றாலும் நீதி சாவதில்லை!!

நிலத்தடியில் நிறுத்தினாலும் நினைவு போவதில்லை!!
வீசும் காற்று விளக்கணைக்கும்!! வெண்ணிலவை தொட்டிடுமா?

நிலம் நனைக்கும் மழையாலே வானம் ஈரமாவதுண்டா??

முக்கு முட்ட தின்னு மருந்துக்கடையில் நின்னு

வாழவில்லை கண்ணே!!எனது கையை நம்பி

உன்னை தொட்டேன் பெண்ணே!!

எனக்கு நீயும் உனக்கு நானும் விதியடி!!

உனக்கு கீழே உலகடி!! எனக்கு மதி நீ தான்!!

நீ சொல்ல ஏழுலகும் பிடித்துவரும்

மன பலம் வருமே!! வாடி என் தங்கமே!!

காற்றாட போனாலும் கதை பேசி போவோம் வா!!

என் இதயக்குட்டை சேர்ந்தவளே!!

கண்ணாலே கலகம் செஞ்சு உன் காலடியில் சேர்த்துவிட்டாய்!!

புது வசந்தம் தேடும் பூவே வா!! உன் வாசம் எங்கிருந்து??

"விதி" ஆற்றில் மிதக்கும் துரும்பாக நானிருக்க..என்

"மதி" இழுத்த கரும்பே!! மங்கலமாய் வா வா வா

அருகிருக்கும் தண்டவாளம் தொடுவதில்லை நம்மை போல!!

வானிருந்து மழை வரலாம்!! வானுக்கு சொந்தமில்லை!!

பூமியில் மழை விழலாம்!! பூமியில் நிலைப்பதில்லை!!

இதுபோல இருந்தது போதும்!!

இடைவெளி இல்லாத நிலை வரணும்!!

உன் மடியில் தலை சாய்த்து தூங்க வேணும்!

மனமிரங்கி சரி சொல்வாய்!! வாழ்வேனே!!

அருகிருக்கும் தண்டவாளம் தொடுவதில்லை

நம்மை போல!!

ஹாய் !! உன்னை நினைத்தேன் என்றேன் !!

நினைப்பதற்கு முன் மறந்தாயோ என வெடித்தாள்..விலகினாள்!!

நீ அழகு என்றேன்!!

யாரோடு ஒப்பிட்டாய்.. என சீறினாள்!! சிணுங்கினாள்!!

என்மீது தப்பில்லை தவறில்லை என்றாலும்

கோபித்து விலகி நின்றால் தான் அன்பு அதிகமாகும் என்பாள்!!

வீம்புக்கு பெயர் பிணக்கோ? வம்புக்கு பெயர் அணங்கோ?

ஐயோ!! என்ன செய்வேன்? எப்படித்தான் சமாளிப்பேன்?

தேவதை நான் இங்கு வந்தேன்! இந்த

மாப்பிள்ளை கை பற்றிட வந்தது வேளை!! சுபவேளை!!

பூச்சூடவும் புகழ் சேர்க்கவும் தேவதை நான் இங்கு வந்தேன்!

மாப்பிள்ளை கை பற்றிட வந்தது வேளை!! சுபவேளை!!

இது நல்ல ஜோடி என தேவாதி தேவரும் சூழ்ந்து நலம் பாட
மூன்று முடி போட என் வாழ்வு தான் நலமானது!! வளமானது!!

மன நிறைவானது!!

தேவதை நான் இங்கு வந்தேன்! இந்த

மாப்பிள்ளை கை பற்றிட வந்தது வேளை!! சுபவேளை!!

என்னவரை கண்டபோது அவர் குறைகள் தெரியவில்லை!!

அவர் இல்லாதபோது அவர் குற்றம் குறைகள் மட்டும்

விண் தொடும் மாயமென்ன?

-

தாய் தந்தை கணவன் மனைவி பிள்ளைகள்

நலம் காக்க நல்ல வழியில் அயராது முயன்று சேர்த்து

அன்போடு பகிர்ந்து உண்பதுதானே இல்லறம்?

இதில் ஆண் என்ன? பெண் என்ன? பாகுபாடு?

விட்டுக்கொடுத்து புரிந்து நடந்தால் முதுமையாகி

சாகும் வரை காதல் தொடருமே!!

--

அன்பு காட்ட நீ அன்பு காட்ட அன்பு காட்ட

அடிமைகொள்ளும் அகம்பாவம் ஓடிவிடும்!!

என்பு போர்த்திய சதை தோலும் எத்தனை நாள்?

அழகென்று நம்பும் புற கவர்ச்சி எத்தனை நாள்?

கணவன் மனைவி என ஆகுமுன்னே "ஆசை வலை"

ஆட்டுவித்தால்......தடம் மாறி போகுமோ மனம்?

ஈரினமும் ஈர்க்கலாம்!! எது சரி அவர் மனம் தானறியும்!!

அறிவியலின் வளர்ச்சி அதை "ஆன" வழி பயன் படுத்த

அஞ்சாமல் துணிந்து நின்றால் "நிறைவு" என்றும் வந்திடுமோ?

உனக்கு நீயே நீதிபதி!! உண்மை என்றும் உன் உள்ளம் அறியும்!!

தவறென்றால் உடன்படாது !! இடித்துரைக்கும்!!

மீறி சென்றால் படுத்துறங்கும் உன் மனமே !!!!

Tuesday, March 15, 2011

இனிய வாழ்வு மலரட்டும்!!!

அறிவியலில் உயர்ந்தோம்! ஆற்றலில் உயர்ந்தோம்!
அறிவில் உயர்நதோமா? தாழ்ந்தோமா?
மனித நேயம் மண் மூடி போகவா 
பிறந்தோம்..வளர்ந்தோம் படித்தோம்????
அந்த காலம் தொட்டு பெண்ணை அழகென்று 
வர்ணித்தே அடிமை ஆக்கி 
ஆண்கள் சிகரம் தொட்டார்கள் !! 
பெண்ணாகி தாரமாகி தாயுமாகி நின்ற
பெண்களே பண பேயாகி வரதட்சணை
கேட்டார்கள்.. கேட்கிறார்கள்!!
பெண்ணுக்கு பெண்ணே எதிரியா?
பண்பும் பாசமும் பாதாளத்தில்!!
பெண்ணாசை பொன்னாசை பேராசை ஆகி
கலங்கி   அழும் நிலை யாருக்கு?
பெண்களுக்கு சிறப்பா இது? ஏது?
சிந்திக்க மனம் இல்லையா?
ஆதிக்கம் அழிந்து அன்பு பெருகுமா?
சீரிய வாழ்வு சிரிதாகலாமா?
இளம் உள்ளம் உணரட்டும்!!
இனிய வாழ்வு மலரட்டும்!!!

Monday, March 14, 2011

மணமகளாய் மருமகளாய் வா நீ !!

மணமகளாய் மருமகளாய் வா நீ !!
உன் வலது காலை எடுத்து வைத்து வா நீ !!
உள்ளம் பெருக்கி வீடு உயர்த்த வா நீ !!
எங்கள் இதய வாசல் திறந்து இருக்கு வா நீ !!
நிலை பெருக்கும் நினைவு என்றும் மனதில் வேண்டுமே !!
நல்ல குழந்தை செல்வம் உன்னாலே வரவாகுமே !!
பொன் பொருளும் புக l என்றும் உன்னை சேருமே !!
ஆது பார்த்து எங்கள் மனம் நிறைந்து ஆடுமே !!

மணமகளாய்  மருமகளாய்  வா  நீ !!
உன்  வலது  காலை  எடுத்து  வைத்து  வா  நீ!!
திரு  மகளாய்   எங்கள்  வீடு  வந்த  செல்வமே !!
கற்றவர்கள்  வாழ்த்து  சொல்லி  வழி  காட்டுவார் !!
பிறந்தவீடும்  புகுந்த  வீடும்  உன் பெருமை  பேசணும் !!
புது  மனமும்  புது  உறவும்  சேர  வேண்டுமே !!!
மணமகளாய்  மருமகளாய் வா நீ!!
உன் வலது காலை எடுத்து வைத்து வா நீ!!
தங்க  நகை  வைர  நகை தேவை  இல்லையே !!
புன்னகைத்து  புது நிலவாய்  வலம்  வருவாயே !!
சுகமான  சுமை  சேர்த்து  வாழ்ந்திருப்பாயே !!
பாசமுடன்  பழகும்  உன்னால் … பசியும்  வராதே !!
மணமகளாய் மருமகளாய் வா நீ!!
உன் வலது காலை எடுத்து வைத்து வா நீ!!
ஏழு  உலகும்  போற்ற  நீயும்  வாழ்க !!
எங்கள் குல   விளக்கே !! என்றும்  நீ வாழ்க!!
மனை  மக்கள்  மாட்சியோடு  வாழ்க!!
இறுதிவரை  இன்பம்  கண்டு  வாழ்க!! வாழ்க!!
மணமகளாய்  மருமகளாய் வா நீ!!
உன் வலது காலை எடுத்து வைத்து வா நீ!!

Saturday, March 12, 2011

ஒரு கவிதை சொல்லு!! 13.3.2011

ஒரு கவிதை சொல்லு!! 13.3.2011

வீழ்த்தும் கணைகள் அவமானம்!!அதை வீழ்த்தி
வெல்வது நம் வாழ்வுக்கு வருமானம்! அதுவும் உரம் தானே!!
அடைபட்ட கதவுக்கு முன் அழலாமா?
ஆயிரம் கதவுகள் திறந்திருக்கு!!
தேவையும் குறிக்கோளும் மாறலாம்!!
தன்னம்பிக்கை கொண்டு முனைப்போடு முயன்றால் வெற்றி வரும்!!
திறமையோடு கடந்து விடு! நட்பே!! உன் வழி உன் கையில்!!
----------------------

ஒற்றை செல்லில் உயிர் கொடுத்து என்னை ஆளாக்கினாய் தாயே!!
மற்ற எதையும் நாடவில்லையே நீ! என் அம்மா!!ஏன் அம்மா??
உலகில் உயர்ந்த உறவும் நீ!! சிறந்த தோழியும் நீ!!
உன் மடியில் உயிர் விட வேண்டும் அம்மா!!
தாய் ஆகும் போது உன் போல் சிறக்க முடியுமா?????
---------------------

அந்தி மாலை நேரமது !!
அகிலமும் இருண்டிருக்க
இளமஞ்சள் ஒளி பட்டு
அந்திநேர ஆதவனாய் ஜொலித்து
அவள் வந்தாள் என்னருகே!!
தீண்ட துடித்தது என் மனம்!!
வெண்ணிற ஆடையிலே வெட்கி
மறையும் வெண்ணிலவோ?
உணர்வின்றி நான் உறங்குகிறேன்!! ஐயோ!!
---------------------------------------
அவள் : ஒரு கவிதை சொல்லு!!
அவன் : என் கவிதையே நீ தானே!!
---------------------------
வாயாடும் நான் மௌனமாக...
ஊமை வாயன் உளறி விட்டான் !!
இந்த மாற்றம் காதலினால்!!
---------------------------
சிதறா வாழ்வு வேண்டி தேங்காய் உடைப்பார் ஒரு பக்கம்!!
அதை பொறுக்கி வாழும் மனம் ஒரு பக்கம்!!
சிதறியது எது? காயா? வாழ்வா?
------------------------------
திருமணவிருந்து!! சாப்பிட மனம் இல்லை!!ஏனா ?
என் காதலிக்கு திருமணம்!!
-------------------

Wednesday, February 23, 2011

உலவுதே என் மனமே!! அள்ள துடிக்குதடி!!

கண்ணுடன் கலந்ததும் பரவசம்தான்! கலவரம்தான் !!
தன நிலை மறந்து உலவுதே என் மனமே!!
அறியா குழந்தை பருவம் நீங்கி ஆவலுடன்
உன்னை அறிய வந்தேனே!!
நிலவின் ஒலியினில் வீசும் தென்றலில் அலைகளின் இடையே
படகில் சென்று தன்னை மறந்து நாம் செல்வோமா?
தனி உலகம் காண்போமா? அது நமதல்லவா?
குவலயம் முழுதும் குதுகலமே..உன்னுடன் சேர்ந்த பின்னே உறவே!!
உன் கண்ணுடன் கலந்ததும் பரவசம்தான்! கலவரம்தான் !!
தன நிலை மறந்து உலவுதே என் மனமே!!
-----------------------
நாடி உன்னை சரணடைந்தேன் அம்மா புதுகாளி!!
வேண்டியதை செய்து உவக்கும் "உன்" காலடியே தஞ்சம் அம்மா!!
பட்ட துயர் போதும் இனி தொடராமல் தடுத்து விடு !!
எங்கும் எதிலும் நீ ஆனால் என் உயிரும் உனதன்றோ?
எது வரினும் நான் எது செய்யினும் அது உன்னருளே!
என் தேவை நீ அறிவாய்!! எனை கேட்க வைக்காதே!!
நாடி உன்னை சரணடைந்தேன் அம்மா புதுகாளி!!
வேண்டியதை செய்து உவக்கும் "உன்" காலடியே தஞ்சம் அம்மா!!
உறங்கும் மனம் எழுப்பி விடு!! உற்ற வழி காட்டி விடு!!
என்னை உணர வைத்து உன்னில் கரைத்து விடு!!
நான் எக்குற்றம் புரிந்தாலும் மறந்தென்னை ஏற்று விடு!!
நாடி உன்னை சரணடைந்தேன் அம்மா புதுகாளி!!
வேண்டியதை செய்து உவக்கும் "உன்" காலடியே தஞ்சம் அம்மா!!

அன்பையும் காதல் என்பார்! ஆசைமனம் காதல் என்பார்!!
இன்பம் அதே காதல் என்பார்!!
இசையும் உள்ளம் காதல் என்பார்!!
உடல்பசியும் காதலாமோ? உளம் தேடல் காதலாமோ?
உணர்வு நாடல் காதலாமோ ?
உயிர் உள்ளவரை உறவு வேண்டல் காதலாமோ?
நட்பும் காதலாமோ? களவு மனம் காதலாமோ?
உடல் அழகில் ஆரம்பித்து உணர்ந்து கூடல் காதலாமோ?
இன கவர்ச்சி இரு பக்கம்!!
ஆணும் பெண்ணும் இன்றி வாழ்வு இல்லை!!
மனம் கவர்ந்தால் அது காதல் ஆமோ?
எது காதல்? எது காதல்? எது காதல்?
விளக்கை தேடும் விட்டில் என வீழ்ந்து அழுதல் வீண் அன்றோ?
தன்னை அடக்க முடியாமல் தவிக்கும் இந்த இளமை வேகம்...
கொண்டதே கோலம்! வந்ததே வாழ்வு!!
சிந்திக்க மறந்து ஐந்து அறிவாய் வாழ்வு ஒடிந்து போனாரே!!
காதலிதா? காதலிதா? காதலிதா?முக அழகா ? புன்சிரிப்பழகா ? பேச்சழகா ? குரல் அழகா? கண் அழகா?
சங்கு கழுத்து அழகா? முட்டும் முன் அழகா? இடை அழகா?
தண்டு கால் அழகா? உடை அழகா? உடுத்தும் விதம் அழகா?
அறிவு அழகா? அது தரும் ஆற்றல் தான் அழகா?
குணம் அழகா? அன்பு அழகா? பண்பு அழகா?
செயல் அழகா? செய்முறை அழகா?
அன்பறிவு ஆற்றலுடன் திட்டமிட்டு முயன்று முன்னேறல் அழகா?
எது அழகு? எது அழகு? சொல் நட்பே!!சிந்தா மனமுடன் சிந்தனை செய்து
பொறுமைக்கு பெருமை சேர்த்து
தாய்மை என்றும் எளிமை என
வாய்மையோடு வாஞ்சையோடு
வாழ்ந்திருக்கும் அம்மா!! உனக்கு இணை எது? ஏது?ஆணவம் அகற்றி ஆசை விலக்கி பண்பை வளர்த்து
படிப்பை தொடந்து உண்மையாய் நின்று உறுதியாய் உழைத்து
அன்போடு யாவர்க்கும் அன்னமிட்டு
சொல்லாலும் செயலாலும் ஒன்றாகி உடல் வலிமை பேணி வர
உயர்வும் நிம்மதியும் என்றும் உன் பக்கம்!!
அயராது முயன்றால் !!!

ஆசைக்கும் அழகுக்கும் மலர் தொடுத்தார்!!
அன்பு கொண்ட பெண்ணும் மலர் என்றார்!!
சூடி எறிவது மலர் ஆனால் ஆதிக்க ஆண்மகன்
தான் அடைந்த பெண்ணையும் மறுப்பானோ?
மன்னவன் என்னவன் என்றாளே!!மனதுக்குள் அழுவதற்கோ !?
பற்பல மலர்கள் பாந்தமாய் வாசம் தர ...
பெண்ணும் அதுபோல் என எண்ணலாமோ?
மனம் போல் வாழும் மன்மத மனம் "மணம்"
என்ற போர்வையிலே சிதைக்கலாமோ?
மனைவி அன்றோ?
காலம் கடந்து "குணம்" கண்ட பெண்ணும் கொதித்து எழாமல்
குமைந்து இழப்பது அவள் வாழ்வு தானே!! குல விளக்கோ?
அமைதியும் ஆற்றலும் இழந்து பொய் நகை முகம் கொண்டாளே!!
போலி வாழ்க்கை !! பொய் அன்பு!!அதை காதல் என வீழ்ந்தாளே!
காதல் மணம் மோதலுடன் வாழுதிங்கே!!
பணம் பரிசு பகட்டு என்று பட்டறிந்து அழுவதோ
புண்பட்ட காதல் மனம்??
உண்மை அன்பு காதல் என்றால்
அதற்கு ஏன் "காதலர் தினம்"??
சாகும் வரை இணைந்து வாழ்வதுதான் காதல் !!
உன்மத்த மோகம் எல்லாம் காதல் ஆமோ????
உணராது போனால்...உள்ளவரை துன்பம் தானே!!
ஆசைக்கும் அழகுக்கும் மலர் தொடுத்தார்!!
அன்பு கொண்ட பெண்ணும் மலர் என்றார்!!"கண்ணோடு கலந்திருந்தால் கண்ணீரோடு விட்டிருப்பேன் என் உயிரோடு நீ கலந்திருப்பதால் உன்னை பிரிவது எப்படி கண்ணே!!."
கட்டி அணைத்து தலை முதல் கால் வரை என் முத்தத்தால் நனைத்து வருடி பகல் இரவு பாராமல் உள்ளமும் உடலும் கலந்து
எனக்கு நீ உனக்கு நான் என உலா வருவோம் வா கண்ணே!!
சிரிக்கும் சிங்காரி!!சங்கு கழுத்தும் குத்தும் முன் அழகும்
அழகு சின்ன இடையும் பித்தம் ஏற்றுதடி!! வாழை தண்டு கால் அழகும்
வடிவும் உன்னை அள்ள துடிக்குதடி!!
-----------------------------------

Thursday, February 17, 2011

நீரோட்ட கனவுகள் ஊர்கோலம்!!

நீரோட்ட கனவுகள்  ஊர்கோலம்!!தினம் தினம்!!
தேனில் நனைந்தது என் உள்ளம்!!
மாலை சூடும் நேரம் காண நாடும்!!
மங்கள வாழ்த்தொலி கீதம் வேண்டும்!!
மணமகளாய் நான் இருக்க வேண்டும் !!
மனம் நாடும் மணாளன் வேண்டும்!!
மடி சாய்ந்து "இனம்" காக்க வேண்டும்!!
நீரோட்ட கனவுகள்  ஊர்கோலம்!!தினம் தினம்!!
ஆயிரம் நிறங்கள் ஜாலம்!!
வான வில்லும் என் வீட்டில் கோலமிடும்!!
விண்மீன்கள் வெளிச்சம் தரும்!!
பாடும் பறவைகள் தாளமிடும்!!
பூமரங்கள் பூக்கள் பொழியும் !!
என் திருமண நாளை எண்ணி எண்ணி
நீரோட்ட கனவுகள்  ஊர்கோலம்!!தினம் தினம்!!
மடை திறந்து தாவும் நதியலையாய் என் மனம்!!
மனம் திறந்து கூவும் சிறு குயில்தான்  நான்!!
காலம் கனியட்டும்!!கதவுகள் திறக்கட்டும்!!
நேற்று என்பது  நிழல்களில் நாடகம்!
இன்றோ   நிஜங்களின் தரிசனம்!!
வருங்காலம் வசந்த காலம்!!வரட்டும் வரட்டும்!!
நீரோட்ட கனவுகள்  ஊர்கோலம்!!தினம் தினம்!!

நமசிவாயமே!! 17 2 2011

அன்பே சதம் என்றும் அது ஒன்றே சிவம் என்றும்
அகிலம் உணர வைத்த நாமம் நமசிவாயமே!!
ஆசையோடு ஆணவம் அகல "அகம்" உணர்த்தும்
நாமம் நமசிவாயமே!!
இளமையும் வளமையும் கல்வியும் கடமையும் கனிவும் பணிவும் வளர்த்திடு நாமம் நமசிவாயமே!!
உணர்ச்சியும் புணர்ச்சியும் உன்னத வாழ்வும்
உணர்த்தும் நாமம் நமசிவாயமே!!
ஊழும் வினையும் ஊக்கமும் ஆக்கமும் உணர்த்தும்
நாமம் நமசிவாயமே!!
ஈகையும் இயல்பாய் எண்ணம் சேர்த்திடும்
ஈசன் நாமம் நமசிவாயமே!!

எல்லாம் கடந்து எனது அறுத்து எளிதில் உணரா மனமாய் நிற்பதும் நமசிவாயமே!!
ஏகமாகி பாகமாகி போகமாகி யோகமாகி யாகமாகி
யாதும் ஆன நாமம் நமசிவாயமே!!
ஐயம் தவிர்த்து ஐந்தும் உணர்த்தி தன்னை உணர செய்திடும்
நாமம் நமசிவாயமே!!
ஒன்றாகி பலவாகி அகமாகி புறமாகி வாழ்வுமாகி நின்ற
பெரும் உறவும் நமசிவாயமே!!
ஓம் என்று ஓத ஒன்பது வாசலும் ஒடுங்கும்
நவகோள் நாடும் நாமம் நமசிவாயமே!!
அவ்வைக்கு தமிழ் அருளி யாவர்க்கும் அவுசதமாய்
அன்பு மனம் கொண்டருளும் நாமம் நமசிவாயமே!!
ஆணவ கன்ம மாயை எனும் "ஆயுதம்" தான் எல்லா குறையும் மேவசெய்து தன்னை மறக்க செய்யும் என உறைந்ததும் நாமம் நமசிவாயமே!!

Sunday, February 13, 2011

நிலவை காதலித்தேன் !!

நிலவை காதலித்தேன் !! தேய்ந்து மறைந்தது ஒரு நாள்!!
தென்றலை காதலித்தேன்!! புயல் ஆனது!!
நதியை காதலித்தேன்!! கொஞ்சம் கொஞ்சமாக வற்றியது!!
பூவை காதலித்து சூடினேன்..வாடியது!!
என்ன செய்ய?? எனக்கு காதலிக்க தெரியவில்லையா?
வெறியோடு உழைக்க தொடங்கினேன்!!
உழைப்பின் மீது காதல் வர ..நட்பு வட்டம் பெருகி
உலகம் புரிகிறது!!
அழகு ரசிக்க..  பலம் ருசிக்க..
காற்று சுவாசிக்க
நட்பு நேசிக்க
நீ.!!!. நான் காதலிக்க!!... 

காதல் காவியம் 14 02 2011 என் காலம் ஓடும்!!

அவள் :
நீ இன்றி வாழ்வது லேசில்லை !! கண் முடி படித்தாலும்
கனவெல்லாம் நீ தானே கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!
தூங்காமல் நாள் எல்லாம் பாழாக .....
உன் நினைவு மட்டும் என்னை சிதைக்கிறதே!!
நீ இன்றி வாழ்வது லேசில்லை !! கண் முடி படித்தாலும்
கனவெல்லாம் நீ தானே கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!
உடல் சேர்ந்து உளம் காணும் உன்னத திருமணம் தான் எப்போது??
நம் மனம் சேர்ந்து "திருமணம்" காண
உறவெலாம் வருமே! வாழ்த்துமே !!
நீ இன்றி வாழ்வது லேசில்லை !! கண் முடி படித்தாலும்
கனவெல்லாம் நீ தானே கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!
அவன்:
உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனே!!
பெண்ணே! உன்னை பார்த்ததும் என்னை இழந்தேனே !!
தேனாட்டம் இனிக்கும் உன் இதழும் கள்ளாய் போனதோ?
போதை ஏறி என் சொல்லும் ஆடுதே!!
அப்படி இப்படி இடுப்பை ஆட்டி என்னை கொல்லாதே!
குனிஞ்சு நிமிர்ந்து "குளிர்ச்சி" காட்டுற!!
என் மனமும் உடலும் குளிர்ந்து போனதே!!
நீ இன்றி வாழ்வது லேசில்லை !! கண் மூடி படுத்தாலும்
கனவெல்லாம் நீ தானே கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!
நம் கண்ணுக்குள் நெஞ்சுக்குள் மாற்றம்!!
கனவில் காதலில் ஏற்றம்!!
சொந்தமாக நீ வந்து விட்டால் கொஞ்சி மகிழ்வேனே !!
உடலில் உணர்வில் ஏக்கம் !! இதான் காதலா?
100 ஆண்டுகள் வாழ்வோமே நாமே!!
நீ இன்றி வாழ்வது லேசில்லை !! கண் முடி படித்தாலும்
கனவெல்லாம் நீ தானே கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!
அவனும் இல்லை அவளும் இல்லை ஆனால்
காதல் காவியமாய் நிற்கிறது தாஜ் மஹால் !!
காதலுக்கு மரியாதை !! காதலர் தினத்துக்கு இன்னொரு மறையா நினைவு!!
நாமும்  இன்னொரு காதல் காவியம் படைப்போம் வா வா!!

---------------
உனை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்!!
உன் விழி பார்த்து என் காலம் ஓடும்!!
ஆயிரம் நினைவோடு கனவோடு என் மனம் ஆட
பாயிரம் பல்லாயிரம் கல்யாண ராகம் பாட
உலகம் உறங்க தூங்காமல் என் மனம் மட்டும் வாட
நீ இன்றி நான் இல்லை!! இதை என்று உணர்வாய் நீயே??
உனை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்!!
உன் விழி பார்த்து என் காலம் ஓடும்!!
மனம் நினைக்க சுகம் வந்தது!!
உன் கவி என்றும் எனக்கு பூபாளம்!!
என் ராகம் என்றும் சோகம் அல்ல!!
மணி ஓசையாய் உனை பாடுவேன்!!
என்னை சுற்றும் ஆவியடி நீ!!
காதல் சோதனை !! என் மனதில் வேதனை!!
அன்பு பூ மாலை சூடி நிழலாக உன் வாழ்வெல்லாம் தொடர்வேன் உன் நாமம் என் மந்திரம் !! உணராயோ தோழி !!
உனை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்!!
உன் விழி பார்த்து என் காலம் ஓடும்!!
ஆசைகள் கோடி அனுதினம் பெருக... நிறைவேற
அருள் தா என் தேவி என் அருகமர்ந்து !!
இரு மனம் வேண்டாம் ! மயங்காமல் ஏங்காமல்
ஒரு மனமாய் என் உயிர் கலப்பாய்!!
உன் தேவை முடிக்க மண்ணுக்கு மழை என வருவேனே!!
விண்ணெல்லாம் சுற்றி வருவோம்!! வா! வா!!
மேற்கில் உதயம் வராது !! நீ இன்றி எனக்கு வாழ்வு அமையாது !!
உனை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்!!
உன் விழி பார்த்து என் காலம் ஓடும்!!
கை கோர்த்து வாழும் நாள் வரை இணைவோம் !!இணைவோம்!!
உன்னவனாய் உன் மடியில் உயிர் விடுவேன்!!அதுவரை
உனை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்!!
உன் விழி பார்த்து என் காலம் ஓடும்!!
------------------------

உடலும் உயிரும் இயங்க மனம் பிறந்தது !!
மனம் என்றும் நம் உயிரின் அலை!!
வாழ்வின் இன்பங்கள் யாவும் முழு வேகத்தில்
முடிக்க முயலும் நம் இளமை மனம்!!
உரியவரிடம் உதவி பெற்றாலும் ஏற்காமல் தடுமாறும் மனம்!!
தன்னை மதிப்பதில்லை அது அங்கீகாரம் இல்லை என ஏங்கும்!!
தாயின் காலடி தான் சொர்க்கம்!!தாய்க்கு பின் தாரமா?
தாரம் வந்தபின் தாய் ஓரமா? எது உண்மை??
தாயை போற்ற தந்தையை பேண நலம் மேவும் ...
சங்கட பாம்புகள் துரத்தினாலும்!!
மற்றவரை நாடி மனம் சலித்து ..கஷ்டங்களில் வீழ்ந்து..
முன்னேற முயல்வோம்!!
--------------------------
நட்பு என்றும் வழிகாட்டி...
இன்பமா? துன்பமா? தயக்கமா?
உண்மை நட்பு தோள் கொடுக்கும் !!
தேர்ந்து நட்பை எடு!!
எதையும் எதிர்பாராதது நட்பு!!
புகழ் ...வெறுப்பு கடந்து சுயநலம் காணாதது நட்பு!!
தலைக்கனம் இல்லாதது நட்பு
குழந்தையாக .. இளம் பெண்ணாக,
இளமை குறும்புக்கு ..நட்பு!!
முதுமையிலும் மனம் விட்டு பேசிட உறவாக...உறு துணையாக ..
மனிதனாக்குவதும் எல்லாம் உணரவைப்பதும் நட்பு!!,
உயர்த்துவதும் ..சிரித்து, அலுத்து, அழுது..அடம் பிடித்து ..உடன் இருந்து உயிர் காக்கும் நட்பு!!துன்பமும் இன்பமும் பெரிதல்ல உண்மை நட்பு இருக்கும் வரை !!
உணர்ந்து விடு நட்பின் பெருமை! அருமை!!
----------------------------------
கொல்லாதே அழகே!! என் கண்ணை கிள்ளாதே!!
மெல்லிடை..மேலழகு மின்னலாய் வந்து கொல்லுகிறாய்!!
மேகத்தை மெத்தையிட்டு பனித்துளி நீ நீராட சேர்த்து வைத்து..
நாம் கை கோர்த்து வெண்ணிலவில் வீடு கட்டி குடி புகுவோம் தொல்லை இன்றி!! வா அன்பே!!
ஆகைய உயரம் அம்மா அன்பு!! அடுத்தது நீதானே!!
அரைத்த மாவை அரிக்காமல் கலப்பு இல்லா கற்பனையில் புதிய வடிவம் சேர்த்து..காலமும் நேரமும் வாய்ப்பும் பார்த்து வழமை சேர்ப்போம் !! பொலிவான புதுமை காண்போம்!! வாழ்வது ஒரு முறை!! வாழ்த்தட்டும் தலைமுறை!! என்னவளே!!வா! வா!!
-------------------------
sasikala
kavithaisasikala2000@gmail.com

Monday, January 31, 2011

31.01.2011

http://kavithaisasikala2000.blogspot.com/

தனிமையில் நான் !! உன் நினைவோடு!!
தவிப்பதும்.. துடிப்பதும்...உன்னை எண்ணி எண்ணி !!
நீயின்றி உயிர் கரைகிறேன்!! உணர்வின்றி உலவுகிறேன்!!
கண்ணீர் தான் எனக்கு பரிசோ??
மெழுகாய் கரைந்து உயிர் ஏங்குதே!!
என்னவளாய் வந்து நில்லாயோ?? நான் இறக்கும் வரை
உனக்கு துணை நான் எனக்கு துணை நீ !!
என்று இணைவோம் ?? இதயம் திறந்து விடு !!
இல்வாழ்க்கை தந்து விடு!! காத்திருப்பேன்!! காத்திருப்பேன்!!
-------------------------

பிரிந்து இருக்கும் குடும்பம்
புரியாத உறவுகள் ...அறிந்து
கொள்ள முடியாத நட்புகள்!!??
இது இல்லாத வாழ்க்கை ஏது??
இல்லாத ஒன்றை தேடி நிலைத்து
நிற்க ..வாழ முடியாத நாம்
கவலை படுவதில் அர்த்தம் இல்லை!!
நம் கடமை செய்வோம் மடமை தவிர்த்து !!
இறந்தும் புகழோடு வாழ இயன்றதை செய்வோம்!!
வாழ்வோம்!! வளர்வோம்!!
----------------------------

யாராயினும் நிழல் கருப்பு.!!.
ரத்தம் சிவப்பு!!
வண்ணம் அல்ல வாழ்க்கை!
எண்ணம் தான் சிறப்பாக்கும்..சீரழிக்கும்!!
எண்ணம் வளர்ப்போம்!! வா நட்பே!!
------------------------

Saturday, January 29, 2011

சிந்தனைக்கு …..

சிந்தனைக்கு …..
-----------------
பணம் இருப்பவன் சொல்வதெல்லாம் வேதம் !!
கட்டி கொடுத்த சோறா ? சொல்லிக் கொடுத்த வார்த்தையா ?
இது நிலைக்குமா ?

புகழ்ந்து புகழ்ந்து பேசினாலும் “வாழ்நாள் ” வளராது !!
இகழ்ந்து இகழ்ந்து சாடினாலும் நம் வாழ்வு கெட்டு போகாது !!

சுகமும் துக்கமும் ஒரு சக்கரம் !! மேலும் கீழும் போகும் வரும் !!
நிழலாக நாம் செய்த பாவம் மட்டும் நம்மோடு !!
கனவில் கண்ட உணவை சாப்பிட முடியுமா ?

நான் எழுதும் ஒவ்வொரு வரியும் சிந்திக்க வைக்க வேண்டும் !! அது போதும் எனக்கு !! என் மனம் நிறையும் !!!

ஆசை எது ? பொறாமை எது? கோபம் எது??
கடும் சொல் எது? இதை எல்லாம் உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு விட முயல்வோம் !!
பகை வளர்க்கும் இதனால் என்ன லாபம் ??
எவ்வளவு நாள் வாழ்ந்தோம் ? வாழ்வோம் ?? இது முக்கியமா ?
எப்படி வாழ்ந்தோம்?? இது முக்கியமா? சொல்லு நட்பே!!
சொல் மனம் திறந்து !!

பிறர் கஷ்டம் நமக்கு ஆறுதல் தருமா ? முட்டாளா நாம் ???

முடிந்ததை விடாமல் முயற்சியோடு செய்வோம் !!
முடியாது என சொல்லாமல் !!

பார்த்து உணர்ந்த அனுபவமும் ஒரு வகை கல்விதான் !!
ஏமாந்து சஞ்சலத்தில் சலிப்பில் உணர்வதும் ஒரு
அனுபவக் கல்விதான்!!
sasikala
kavithaisasikala2000@gmail.com

Friday, January 28, 2011

thoughts 28 01 2011

வயலுக்கு களைகள் கேடு !!
மனிதனுக்கு ஆசைகள் கேடு !!
துருவே இரும்பை அரிக்கும்!!
தப்பான செயல்தான் மனிதை அழிக்கும்!!
நாம் செல்ல வேண்டிய வழியை முதலில்
அறிய வேண்டும்!! முயல்வோமே!!
----------------------------

பெண் தேவதைகளே..வளர்ந்த கண்களே
ஆள் பாதி!! ஆடை பாதி !! உங்கள் பார்வையில் வீழ்வது ஆண்தானே!!
அசத்தும் அங்கம் தெரிய குறைந்த உடைகள் !!
சுடியும் ஜீன்சும் கை இல்லா டாப்சும்...
எடுப்பாய் இடுப்பு!! திமிரும் முன்னழகு!!
கண்களுக்கு விருந்து வைத்துவிட்டு காதலுக்கு கதவடைப்பு
செய்வது நியாயமா!! ஆண்கள் என்ன பாவம் செய்தோம்??
பழுதடைந்த நெஞ்சமுடன் பரிதவித்து காத்து நிற்போம்!!
----------------------
 
கண்ணே!! காகிதத்தில் உன்னை எழுதிய கவிதை
கரையானுக்கு!!
என் கையில் உன் பெயர்!!நான் இறக்கும் போது மண்ணோடு..!!
கண்ணே!!நீ காட்சி பொருள் அல்ல !!
தோன்றிய இடத்தில் எழுதி வைக்க!
என் உயிரோடு கலந்து நிற்கும் நீ
நான்
இறக்கும் வரையாவது என்னோடு இருப்பாயே!!
அது போதும்..அது போதும்!!
------------------------
 
பிறர் கேலி செய்தபோது முறைத்து..
பார்க்காதது போல் செல்கிறாய் !! தடயமின்றி..
ஆனால் என் இதயம் மட்டும் எக்ஸ்பிரஸ் வேகத்தில்
துடிக்கிறதே ...அது ஏன்? உன்னிடம் என் இதயம் இருப்பதாலா!!
சொல்லிவிட்டு போயேன் !!கல் மனது கடன்காரி!!
--------------
வெளித்தோற்றத்தில் வரும் காதல் சில நாளே!!
உள் மனதில் குடிகொண்ட காதல் சாகும் வரை தொடரும் !
மோகத்தில் வளர்ந்து முத்தத்தில் தொடர்ந்து..
கணவன் மனைவி என தொடர்ந்து..வாழும் காதல்!!
---------------------
 
பசியோடு வந்தவர் பசியாறி போவார்!!
பகையோடு வந்தவர் உறவோடு சேர மாட்டார்!!
அன்புக்கு தலை வணங்குவோம் !! அதிகாரத்திற்கு அல்ல !!
சிங்கம் என்றும் சிங்கம் தான் !! அறிவை வளர்ப்போம்!!
ஆறுதல் தருவோம்!! ஆதிக்கம் அல்ல !!
இணைந்து நிற்போம் நட்போடு!!
இறந்த பின்பும் புகழோடு வாழ இப்போதே முயல்வோம் !!
வாரீர் தோழர்களே!! தோழிகளே!!
----------------
நால்வேதம் அறிந்து ஓதும் அறிஞரோடு
நவமோடு ஐம்புலனும் தானடக்கி
நன்மை நாடும் மனதோடு தான்
செய்யும் செயல் யாவும் சிறந்திட
முயல்வோர் தம் மூளையாக நடம் புரியும் நா மகளே!!
நீ எனை நீங்காதிரு!! உன் பாதம் அடைக்கலமே !!
------------------------
 
விண்ணில் விளையாடும் நிலவோ? வருடும் தென்றலோ?
கள்ளிருக்கும் இதழோ? என் உள்ளிருக்கும் உயிரோ ?
உன் விழி மலரோ? எழில் நளினமோ ? காதல் மழையோ ?
உறவென நீ வாராயோ? சிறகென என் நெஞ்சம் பறக்க ..
எனதாசைகள் என்றும் உன்னிடமே !!
என் வாழ்க்கை என்றும் உனதுதான்!
உரைக்க ஏதும் இல்லை என்னிடமே!!
என்றும் பவுர்ணமிதான் நீ வந்து விட்டால்!!
உனக்காக சேமிக்கும் முத்தங்களை...என்று வாங்க வருவாய்??
இப்படியே..வர மாட்டாயா? ஏங்குதடி என் உள்ளம்!!
--------------------------
 
என்பு தோல் ஊணொடு நரம்பும் செவ்விள நீரும் காற்றும்
பண்பு இல மனமும் தேவை தேவை என தேடி தேடி சேர்த்ததெல்லாம்
நமன் வருங்கால் நமை நாடுமோ? இதை எல்லாம் எண்ணி துணிந்து ஏற்றம் கண்டு அன்போடு அன்னம் பிறர்ர்க்கு அளித்து அமைதி கொள் மனமே!!
-------------------
என் பேச்சு எல்லாம் இசை!!
நடந்தாலும் இசை...
அசைந்தாலும் இசை!!
விழித்தாலும் இசை! விழுந்தாலும் இசை!!
பேச்சு எல்லாம் இசை ...என்றானே...எதற்கு?
இசைவதற்கா??
தலை முதல் கால்வரை எல்லாமே அழகு..அழகு
என சொன்னானே!! அதுவும் பொய்தானே!! அழகு நிலைக்குமா?
நிலையா ஒன்றை அழகு என்றால் அது நிஜமா??
பாசமா? வேசமா? ஆசையா? ஆர்வமா? என்னை அறிந்து கொள்ளும் வேகமா? இது விவேகமா?
----------------
உன் அழகு நீ நிற்கும் போது காட்டும் கண்ணாடி உருவம் அல்ல!!
உணர்ச்சி கவி நான் சொல்வேன் மலை அளவு !! நீ தரும் இம்சைகளை!!
--------------------
மகளே!! ஒரே நாளில் பிறந்து மலர்ந்து மனம் பரப்பி
சிகைக்கும் சீருக்கும் சிறப்பளிக்கும் மலர் என்ன சொல்கிறது??
போராடி போராடி முன்னேறு!! புகழ் சேர்த்து விண் ஏறு !!
நம்பி செய்தால் நலம் வருமே!!
தூங்கி வழிந்தால் துயர் மிகுமே!!
துணிந்து விடு!! பணிந்து நட!! பாரெல்லாம் உன் பக்கம் வரும் !!
தாயின் கதகதப்பில் இருக்கும் குழந்தை போல்
உன் நினைவின் கதகதப்பில்
வாழ்கிறேன் என்றும்..என் மகளே!!
--------------------------
ஆவணி மாசம் அக்கா பொண்ணு தாவணி போட்டா தகதகன்னு!!
ஏணி போட்டு ஏறிபுட்டா பரணி மேல!!
இறக்கி விட ஏங்குதடா என் மனமே!!
மேலிருந்து ஒரு சாக்கு மூட்டை எடுத்து போட்டா என் மேல தான் ..
அதிலிருந்த மொளகா விதை கொட்டி போச்சுடா!!
ஆசை வச்சு அண்ணாந்து நின்னேன்!!ஐயோ!! கண்ணெல்லாம் எரியுதடா!!
கலைவாணி பய புள்ள!! கண்டுக்காம போறாடா!!
இவள கட்டிக்க மனசு வச்சேன்!! ரெண்டு வருஷம் சுத்தி சுத்தி வந்தேன்..
என்ன ஏமாத்தி பூவாலா?? என் மனசு வேகுதடா!!
குச்சி கட்டி கூட நின்னேன்!!குறும்புக்காரி மண்டையிலே கொட்டி புட்டா!!மச்சு வீடு கட்டி உள்ளே அவளோடு குடித்தனம் செய்ய ஆசை பட்டேன்!!
மாமான்னு சொன்னாளே!! என் மனச புடிங்கிட்டாலே !!
எம்மக பத்தரை மாத்து தங்கம்னு அக்கா சொன்னா!!
அதான் ஒரசி பாக்க வந்தேண்டா!!
கண்ணுக்கு மொளகா வித தூவிட்டாலே!!
ஆவணி மாசம் அக்கா பொண்ணு தாவணி போட்டா தகதகன்னு!!
இழுத்து வச்சு முத்தம் தர வந்தேனே!! கண்டுக்காம போறாளே!போறாளே!
-------------------------------
 
இரு மனமும் இரு உடலும் உறவாகி
ஒன்று ஆகும் ஓர் நாளே திருமணம்!!
நட்போடு சுற்றம் எல்லாம் சேர்ந்து வாழ்த்துரைக்க
பெற்றோரின் பெருங்கனவும் திருமணம்!!
வளர்த்து எடுத்து ...வாழ்க்கை பாதை
தொகுத்து அளித்து களிக்கும் பெற்ற
இருமனம் !!அந்தநாளே திருமணம்!!
இரு மனதின் சங்கமம்!! அதற்கான
"கனி" தினம் தான் திருமணம்!!
எங்கோ பிறந்து..எங்கோ வளர்ந்து
உடலோடு ..உள்ளம் சேர்க்கும்
உல்லாச உயர் தினம்!!
தனக்கு என்று தமக்கு என்று
"தனி உலகம்" வார்க்கும் அந்த
மன தினம்!! மண தினம் !!
திருமணம்!!திருமணம்!!
-------
உதிரத்தை உணவாக்கி ஊட்டி தினம் வளர்த்த அன்னை!!
கல்வி..கேள்வி சிறந்திடவே காலமெல்லாம் "வேள்வி" கண்ட பாசமிகு தந்தை!!
வளர்ந்து " வருமானம்" பார்த்த பின்னே ...
தனக்கென்று தனி கணக்கு!!
பாசமும் பங்காச்சு !! நினைவாச்சு!!
கண்டபோது...தனி பேச்சு!!
இருக்கமுடன் இடைவெளியும் பெரிதாக ...
மடை உடைந்த வெள்ளமென மனக் கவலை
பெற்றோருக்கு!!
இதுதான் விதிப்பயனோ?????
-----------

அடிக்கரும்பு எனக்கு என்றும் என்னவளே நீ தானே !!............
சொல்லாடி...சொல்லாடி 2+1 சுவை சேர்த்தான்!!
இடிக்கரும்பும் இன்பம் தான் ...இழுத்தெடுத்தாள் !!
இன்பம் சேர்க்கும் காலம் இது!!
விலகாதே!! விலகாதே!!
ஒருவருக்குள் ஒருவராகி ....ஒவ்வொரு நாளும்
போராட்டம்! போராட்டம்!! தேரோட்டம்!!
தெவிட்டாத "தேன்" ஆட்டம்!!
தன் வீடு!! தன் குடும்பம் !! தனி மகிழ்ச்சி!!
தன் பிள்ளை !! அவர் வளர்ச்சி!! அது என்றும் மனக்குளிர்ச்சி!!

Friday, January 21, 2011

முகமூடி!! 21.01.2011

முகமூடி!!
---------
அம்மா தன குழந்தைகளை கண்டிக்க காட்டும்
கோபம் ஒரு முகமூடி!!
தனக்கு வேண்டியதை வாங்கிவிட வரும் குழந்தை
கொஞ்சி கெஞ்சல் முகமூடி!! அது அறியாமல் தாங்கி நிற்கும் முகமூடி !!
திருமணத்தில் அள்ளிகொட்டி ஆர்ப்பரிக்கும்
வறட்டு கௌரவமும் முகமூடி !!
BP ..SUGAR.. இருப்பவர்கள் உண்ணாமல் தட்டி களிப்பதும் முகமூடி!!
வாங்க காசு இன்றி வாய் திறந்து ஏங்கி நிற்கும் ஏழைக்கு வறுமை என்றும் முகமூடி!
தன் குலம் விளங்க வளம் சேர்க்க வாய்ப்பு தரும் அரசியலும் முகமூடி !!
ஓட்டளிக்க காசு வாங்கும் குடிமக்கள் "மனக்குறைகள்" என்றும் முகமூடி!!
படிக்காமல் பாஸ் பண்ண முயல்வோர்க்கு பல வழிகள் முகமூடி!!
விலை நிலங்கள் குறைந்துவிட உணவுப்  பொருளுக்கு  "விலை ஏற்றம்" முகமூடி!!
கோவிலுக்குள்  பக்கம்  வரும்  பெண்ணை  இடிக்க  ஆண்கள்  போடும்  பக்தி  வேஷம்  முகமூடி!!
காமத்திற்கு காதல் என்னும் முகமூடி!!ஆண் என்ன..? பெண் என்ன?
காம களியாட்ட சந்நியாசி தளிராக போட்டு உலவும்
" காவி" என்றும் முகமூடி!!
வயது வந்த பெண்கள் வீட்டில் இருக்க..
அம்மா என்றும் விலகி போதல் முகமூடி!!
தன மன ஆசைக்கும் அவள் வைத்த வேட்டு!!
வெளித்தெரியா குமுறலோடு உலவி வரும்
அப்பா அடக்க முடியா ஆசையுடன் ...!!??
"அன்பு" என்றும் இவர்களுக்கு முகமூடி!!
இதை எல்லாம் பார்த்தான் இறைவன்!! கல்லாகி போனான்!!
வேண்டி நிற்கும் பக்தர்க்கு எல்லாம் எந்த தெய்வம் தந்ததடி தோழி??
வேண்டுதலும் "முறையாய்" இருந்தால் மூடிய "இறை" கண்ணும் திறவாதோ?  பாராதோ? இந்த "இறுக்க மனம்" இறைவனுக்கும் முகமூடியோ ?? சொல்லடி ..தோழி...!!
SASIKALA
21.01.2011

Wednesday, January 19, 2011

சரியா நட்பே!!

நம் வாழ்க்கை!! அது மிக சிறந்த வாய்ப்பு!!
வாழ்வதி பொறுத்து.. வாழும் நிலையை பொறுத்து...அதன் மதிப்பு கூடும்..குறையும்!! எப்படி வாழ்வது? உணர்வது அவரவர் கடமை தானே!!
--------------------
 பகுத்து அறிந்து தன்னை நம்பும் கலங்காத மன ஊக்கமும்
செய்வதை செய்ய வேண்டிய நேரத்தில் வேகமாக உழைத்து
முன்னேறும் எண்ணம் இன்றி எதையும் சாதிக்க முடியுமா?
மாற்றம் எப்போது வரும்? ஒழுக்கம், குணத்தை பொறுத்து புகழும் வளரும் ..நிலைக்கும்..சரியா நட்பே!!

பாடி வந்தது ...தேடி வந்தது three 19 01 2011

இந்த ரோஜா மலர் பாடி வந்தது ...தேடி வந்தது
இந்த ரோஜா மலர் ராஜாவை  தேடி வந்தது !!
தை பிறந்தாச்சு !! பரிசம் போட வா மச்சான்!!
என் நெஞ்சுக்குள்ளே தினமும் ராக்கெட்டு !!
நீ  பாதி  நான்  பாதி ஆக்கிபுட்ட ...
இப்போ நாம சிவன் ஜாதி மச்சான்!!
வாழ வைக்க வந்தவனே!!என் நெஞ்செல்லாம் நிரஞ்சவனே!!
என் உடல் நடுங்க..மனம் பறக்க ..
மாடு பிடி ஆட்டமாக நீயும் நானும்..
கனவிதுவோ...காணாமல் பிதற்றுகின்றேன்!!

மலர்ந்த முகமும் குளிர்ந்த பார்வையும்
உணரும் ஞானமும் சிறந்த சொல்லும்
பரந்த நோக்கமும் அகலாது இருக்க
அருள் சேய் அருவே! குருவே !
என்னுள் உரை ..ஆணை !!!

நல்லாரும் நயந்தாரும் நன்மை சொல்ல வல்லாரும் வளர்தாரும் எல்லாரும் நீயே!!
என்னுடையது என்பது எதுவும் இல்லை!!
ஆணவ கர்ம மாயை ஐம் புலன் அதனின் சேர்க்கை..நன்று தீது என்று வேறு எங்கும்
இல்லை !! உணர்வு உருவாகி உள்ளம் செம்மை பேரின் நீயே நானாய் நானே நீயாய்
மாறுதல் எக்காலம் ?காதல்
உன்னிடம் அழகில்லை என்றால் என்ன
உன் பார்வையில் அழகிருக்கும்,
உன் பேச்சில் அழகிருக்கும்,
உன் அறிவில் அழகிருக்கும்,
உன் நடையில் அழகிருக்கும்,
உன் பண்பில் அழகிருக்கும்,
உன் பணிவில் அழகிருக்கும்,
உன் பாசத்தில் அழகிருக்கும்,
உன் நேசத்தில் அழகிருக்கும்,
உன் காதலில் அழகிருக்கும்,
உன் அன்பில் அழகிருக்கும்,

இதில் வராத காதல்....
அழகில் வந்தால்,அது காதலில்லை!!

உன்னுடன் பழகிய சிறிது நாட்களில்
நீ ஏன் போனாய்?நட்பில் என்றும் வரிசை கிடையாது .....சகித்து கொள்!!!வேறு வழி இல்லை
பொய் யாகிலும் எனக்கென சொல்
நீ தான் முதல் நட்பு என்று
அது போதும்
என் கண்ணீர் காய்ந்து விடும் !!! உன்னை உணர்ந்தாயா? உட்பகை அறிந்தாயா?
"தான் என தருக்கி நில்லாதார் யார்? ஆனவும் அதுவே !
நன்றும் தீதும் நும் செயல் கர்மம் ! நில்லா உலகில் நிலைப்பது எது? புரியா
வாழ்க்கை "மாயை" தானே? தனக்கென சேர்த்து தன்னுடன் கொண்டு சென்றார்
உண்டோ? ஐம்புலன் ஆட்சி ...அனைவர்க்கும் வீழ்ச்சி !! உணர்ந்தவர் மீள்வரோ?
ஒன்பது வாசல் மூடுமோ? ஆளுமோ? ஏலுமோ? உணர்சியும் புணர்ச்சியும் உலகத்து
இயற்கை இயற்கை !எது சரி? உணர்வது உன் கடன்!!!!
வயசுக்குள் வுன்முறை....வருவதும் போவதும் யார் அறிவார்?
பிரேமானந்தா.!?நித்யானந்தா ?! அந்நாளில் விச்வாமித்திர!!!...
யாருக்கு இல்லை மூவாசை??? காவிக்குள் கலங்கும் மனம்!!!!! உணர்வுகள் உந்த
உள்ளதெல்லாம் போச்சே !!!சந்திரனில் சதிர் ஆட்டம் !!விஞ்ஞான உயர் ஆட்டம்
!! இதுவும் இங்கே ...!!! எது சதம்? ஏன்? எதற்கு? எடுத்து உரைப்பார்
யாரும் உண்டோ?
மனம் பட்ட காயம் மாறாது ...உடை அல்ல மாற்றுதற்கு .....இளமை உள்ளம் உணரட்டும் !!!

வழுக்கையும் நரையும் மூப்பும் பல் இழப்பும் BP, Sugar ம்
வாழ்வு முடிவு வரும் ..என்ற .எச்சரிக்கையோ?
நில்லா உடலை நிலை என்று எண்ணாதே மனமே!!
நாணயம், நேர்மை, இரக்கம், கருணை வளர்ந்து
வாழ்ந்து பார்க்க ஆசை வருமோ??
தமக்கென சேர்த்தது எங்கே ??
அளவோடு..நியாயம்..தர்மம் என பகிர்ந்து அனுபக்க மனம் வருமா?
செத்தாரை போல் திரி என்றான் பட்டினத்தான்!!
ஒன்பது வாசல் தோல் உடலை சதம் என நாம் அலைய
கழுகு தமதென்று சுற்றுவதோ??
எத்தனையோ நாள் சேர்ந்து நம் பெற்றோர் எடுத்த
அழகு சரீரம் இது !!
இருப்பது பொய்...போவது மெய்..உணராயோ??
காது அற்ற ஊசியும் வாறது கான் கடை வெளிக்கே!!
உணர்ந்து விடு...உன்னை உணர்ந்துவிடு..மனமே!!

"காதலின் தீண்டலால் ஒவ்வொருவரும் கவிஞராகிறோம்."

- பிளாட்டோ

"நான் அழகாக இருப்பதால் நீ காதலித்தாயா அல்லது நீ காதலித்ததால் நான்
அழகானேனா?"

- சிண்டரெல்லா

"காதலுக்கு காரணம் உண்டு. ஆனால், அந்தக் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாது."

- பிலாசே பாஸ்கல்

"காதல்... பெண்ணுக்கு வாழ்க்கை வரலாறு; ஆணுக்கு ஓர் அத்தியாயம்."

- ஜெர்மியின் டி ஸ்டீல்

"காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் மட்டுமே வாழ்க்கையின் ஒரே மகிழ்ச்சி!"

- ஜார்ஜ் சாண்ட்

"காதலர்களின் உதடுகளில் ஆன்மாவைச் சந்திக்கிறது ஆன்மா"
- ஷெல்லி

"போரைப் போன்றது காதல். தொடங்குவது சுலபம்; முடிப்பது கடினம்"
- யாரோ

என் கணவரை சந்திப்பதற்கு முன்பு நான் காதலில் விழுந்ததே இல்லை; ஆயினும் சில
முறை நுழைந்திருக்கிறேன்.

- ரிடா ருட்னர்

காதலுக்கு கண்ணில்லை; அந்தக் கண்ணை திறப்பது திருமணம்!
- பவுலின் தாம்ஸன்

"உண்மையான காதல் கதைகளுக்கு முடிவுகளே கிடையாது."
- ரிச்சர்ட் பாச்

அறிவோடு அழகோடு புதுமை யோடு

பதினாறு செல்வங்கள் தை நாளில் சேரட்டும்!!

முனைப்போடு முயலும் முறையான முயற்சி எல்லாம்

வெற்றியில் ஆடட்டும் !!

விட்டு கொடுத்து..ஒருவரை மற்றவர் புரிந்து..

இணைந்து ..இன்பமுடன் "நட்பு " என்றும் சிறக்கட்டும்!!

குறுகிய மனம் விரியட்டும்!!குற்றங்கள் குறையட்டும்!!

பொன்னாக ..பொலிவாக பொங்கல் முதல்

நிறைவான வாழ்வு என்றும் நிம்மதியை சேர்க்கட்டும்!!

இரும்பு மனம் இளகட்டும்!!கரும்பாக இனிக்கட்டும்!!

வளமோடு நலமோடு அன்போடு அருளோடு

பண்போடு பலகாலம் வாழ்திருக்க தை திருநாள் மலரட்டும்!!

பெண்களின் பெருமை விண் முட்ட பெருகட்டும்!!

வீடுயர நாடுயரும் !!நாடுயர நலம் பெருகும்!!

மனம் உணர்ந்து வாழ்க !! வாழ்க !!

சங்கரன் பொங்கல் சரியான பாதை வகுக்கட்டும்!!

வாழ்க!! வாழ்க!!

------------------------------
--------------------------

பழையன கழித்து புதியன புகுத்தி "போகி" கண்டு

தை தை தை தை என தை மகள் வந்தாள்!!

உவந்து உழுது ஊருக்கே சோறு போடும் உழவர்தம் திருநாள்!!

சேறு ஆடி நடந்து உழைத்து களைத்த கால்நடைக்கும் திருநாள்!!

காதலும் வீரமும் காளையர்க்கே!!

காலை அடக்கி வீரம் கட்டும் வீரர்க்கும் ஓர் நாள்!!

புதுப்பானை..புத்தரிசி.. பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி

ஊரோடு உறவோடு மனையோடு மக்களோடு மகிழ்ந்திருக்கும்

மங்கையர்க்கும் ஓர் நாள்!!

அரசு ஊழியர் அகம் மகிழ ஒரு மாத ஊதியம் அரசு தரும் இன்ப திருநாள்!!

சங்கரன் இன்றி எப்பயிர் வளரும் ??

நன்றி சொல்ல நாமெல்லாம் ஓர்நாள் சேர்ந்து கொண்டாடும்

"சங்கரன் பொங்கல்" திருநாள்!!

உலகளந்த தமிழ் வளர்த்த உத்தம தமிழனுக்கு

பெருமை சேர்த்த தமிழர் தம் திருநாள்!! பொங்கல் தானே!!

அன்புடன் என்றும் ....

சசிகலா
kavithaisasikala2000@gmail.com
-------------------------------
கடலின் ஆழம் ! ஊமையின் கனவு !! ஆகாய விரிவு!! மகளிர் மனம்!!
அறுதி இட்டு கண்டவர் உண்டோ? தீயினுள் சென்றது சாம்பல்!!
நல்வினையும் தீவினையும் வேறு வேறு எதுவும் வேண்டாதவருக்கு !!
நரை..திரை ..மூப்பு எல்லாம் நாறும் நம் உடல் அதற்கே!!
மூன்றும் ஐந்தும் நவமும் ஆட்டுவிக்க ...தன்னை உணர்ந்தவர்
யாரும் இன்று உண்டோ?
உடல்..பொறி..மனம் கடந்து "தன்னை உணரும்" ...உண்மை
உணரும் காலமும் வருமோ??
இவ்வுலகில் ஜனித்தன யாவும் சிவம் எனில் ஆண் பெண் பேதம் ஏது?
பக்குவமே பரமன் !!மன பக்குவமே பரமன்!! தேர்ந்து தெளிந்து விடு!!
சிவம் ஆகு!!
--------------------------------

அடர் பிடரி சிங்கம் !அழகு மயில் கொஞ்சும்!
யானைக்கு தந்தம் !! காளைக்கு திமில்!
குயிலுக்கு குரல்! சேவல் கூவி விடியும் உலகு!
அழகாக ஆண் இருக்க ...பெண் என்றும் குலம் பெருக்க....

சோம்பேறி இனம் என்றும் ஆண்தானே !!
உண்டுறங்கி ஆண் சிங்கம்!!
வேட்டை ஆடி வருவதென்றும் பெண் சிங்கம்!!
பேணி வளர்க்கும் "மனம்" என்றும் பெண் தானே!! தாய்மை தானே!!
உணர்ந்து போற்றும் மனமில்லா ஆரறிவே! ஆண் மகனே!
"அழகில்ல" பெண்களை என் தொடர்ந்தாய்??
வர்ணிக்க வார்த்தை இல்லை என சொன்னதும் நீ தானே!!
ஆண் என்ன? பெண் என்ன? இரு மனம் இணைந்தால் தான் வாழ்க்கை!! விலங்கும் அப்படியே!!
புரியாமல் பேசிவிட்டு காது வரை சிரிப்பதென்ன??

வம்பாடி சேர்த்து அணைக்க வந்து நின்றேன் பெண்ணே! கண்ணே!
குலம் காக்கும் பேரினம்தான்..பெண்மை !! அன்பே!
நீ இன்றி நான் இல்லை!!

போதும்... போதும் ...வார்த்தையாலே சாடி விட்டு ...
வழிவதென்ன? வண்டலூரா?!!
பெண் இன்றி ஆண் இல்லை...ஏன்? எதுவுமில்லை!!!

ஹி! ஹி! ஹி! ஹி! ஹி! ஹி!
வம்பு வேண்டாம் வா கண்ணே!!
----------------------------
மாமன் மாமி ....உனக்கு தாய் தந்தை ஆகணும்!!
அது உன் வீடு! உன் குடும்பம்!!
அவுங்க பொண்ணு நீ ஆகணும் !!
அறியாக் குழந்தை என வளர்த்தோம் !!
அன்பு என்றும் உண்டு ..உணர்வாய் !!
உன் தாய் உனக்கு முதல் தோழி கண்ணே !!
தயங்காமல் சொல்லிவிடு முன்னே!!
எது சரியோ செய்து விடு!!அரவணைத்து அன்னமிடு!!
தயங்காமல் விட்டு கொடு!!! தாய் ஆகு ...தாயாகு !!
தனி சிறப்பு அது தானே!!
உன் கணவன் மனம் அறிந்து நடந்து விடு!!
உன் வாழ்வின் முதல் படிதான் "திருமணம்"!!
இணைந்து என்றும் கழிக்கத்தான் இரு மனம் !!
உணர்ந்து ஒன்றாய் ஆன பின்னே கனி மனம் !!
மரணம் வரை தொடர்ந்து வரும் "காதல் " தினம்!!
வாழ்க என்றும் அன்போடு!! வளம் பெருக்கி நட்போடு!!
--------------------------
உயிரோடு பிறந்தது மரிக்கும்!!
அறிவினில் பிறந்தது நிலைக்கும்!!
புதிதாய் வளர்வது அறிவியல் முயற்சி !!
நிலை இல்லா உலகில் அவை எல்லாம்
நிலைத்து நிற்பதென்ன?
மலைத்து.....மனம் மறக்க மறுப்பதென்ன ??
நேற்று---முடிந்த ஒன்று...
நாளை---நம் கையில் இல்லை!!
இன்று -- வாழும் சொர்க்கம் !!!
நிஜமும் கலையும் நம் நிலையை உயர்த்தும்!!
பழையன கழித்து புதியன புகுத்து!!
நிலைப்பது புகழே!! நீ உழைப்பது அழகே!!
-------------------------------
உலகெல்லாம் சுற்றும் !! உன்னதம் கக்கும்!!
உறவும் கூட்டும்!...முறிக்கும்!!?
வளமும் சேர்க்கும்...வாழ்த்தும் சொல்லும்!!
இன்பமும் துன்பமும் தரும்..!!!
ஆற்றலும் அருளும் !!!விண்ணும் சேர்க்கும்..
.மண்ணும் தள்ளும் !!!
ஒற்றை சிறகான "எங்கள் நாவே"!!!

தனக்கென சேர்த்தது எங்கே ? சேர்த்து மகிழ்ந்த உறவு எங்கே ??
பல்சுவை கண்ட உடலுமெங்கே ? உடன் வருமோ? உயிர் போன பின்னே?? வீடு வரை
உறவு!வாசலோடு மனைவி!
காடு வரை பிள்ளை!! உயிர் உடலுக்க? மனதுக்கா?
உருவம் இல்லா "உயிர் தான்" மனமா? எது உண்மை?
பிறந்தோம் ....இறப்போம் .....மீண்டும் பிறப்போமா??
நினைக்கும் மனம் எங்கே? உயிர் எங்கே??
சசிகலா----------------------
மண்ணில் பிறந்ததெல்லாம் மைந்தர் தாம்
விண் செல்லும் நாள் வரையில்!!
கண்ணில் கண்டதெல்லாம் சொந்தம்தான்
காடு செல்லும் நாள் வரையில்!!
வேறு என்று வெறுப்போமா ?
"குப்பை" குழந்தை தனை??!!!
சேர்த்து எடுத்து வளர்க்கும்
மனம் விண் தொடுமே!!!
குழந்தை தினம் கொஞ்சிடுமே!!
ஈடாய் ஏதும் எஞ்சிடுமோ?
--------------------------------------

சின்னஞ்சிறு கிளியே!! சிங்கார பூங்குயிலே!!
பொங்கும் சிரிப்பழகே! காந்த கண் அழகே!!
ஏழிசை சொல்லழகே !! முத்தே! முழு மதியே!!
கரம் பற்றி அணைத்திடவோ? முத்தாடி மகிழ்ந்திடவோ?
கனி இதழ் தேன் பருகி...காலமெல்லாம் உன் மடியில்
கண்னயர்வேன்!! அப்பா என அழைத்து ஆசை முத்தம் தாராயோ?
அம்மா அருகிருக்க அனைத்தும் மறந்தாயோ? என் நெஞ்சில் மிதித்தென்னை மழை என
உமிழ்நீர் பொழிவாயே !!
உலகம் மறந்தேனே என் கண்ணே!!
-------------------------------

“ஹார்ட் அட்டக்க்ன என்ன தெரியுமா?
ஒரு அழகான பொண்ணு உன்ன பார்த்த -உன் blood heat ஆகும்.
அவள் சிரித்தால் - உன் bp increace ஆகும்.
அவள் உன் பக்கதுல வந்தால் -உன் heart beat raise ஆகும்,
face வேர்க்கும் , நாக்கு உலர்ந்து போகும்.
அவள் தன்னோட அழகான lipச open பண்ணி……
“Anna , Ghandi Parkuku எந்த busla போகணும்னு
கேக்கும்போது உன் heartla “Dum” nu ஒரு satham கேக்கும்பார் ,
அதுக்குபேர் தான் heart attack.
-------------------------

சொர்க்கம் எனும் இடத்தில் நான் உன்னை சந்திக்காவிட்டால் அந்த இடம்
சொர்கமாக இருக்க முடியாது.....

எங்கோ பிறந்த உரமும், நிலமும், கலக்கின்றன வேளாண்மையில்...
எங்கோ பிறந்த நதிகள், கலக்கின்றன கடலில்...........
எங்கோ பிறந்த தங்கமும், பித்தளையும், கலக்கின்றன நகைகளில்...
எங்கோ பிறந்த பட்டும், நூலும், கலக்கின்றன புடவைகளில்...
எங்கோ பிறந்த கவிஞனும், தமிழும், கலக்கின்றன கவிதைகளில்...
எங்கோ பிறந்த நானும், நீயும், கலக்கின்றோம் நம் திருமணத்தில்...
----------------------------------------------
தென்றலே ஜாதியை மிக மேடையில் - உன் நாட்டியம் அரங்கேறும் ;
ரகசிய வாழ்கையை ரசிக்க வைக்கும் ;
மாதத்தில் ஒரு முறை மட்டும் முகம் காட்டிவிட்டு
முறையாகுமா.......வெண்ணிலவே ......
--------------------------------

உன் நிழலும் உனக்கு முன்னே !! உணர்ந்து விடு! "உயர்வுப்பாதை முயன்று எடு!!
நிழலாக நினைவுகள் உறங்காது!? உயிர் உள்ள வரை...
சில்லென்று இருப்பதும் சீறிசுனாமியாய் சினப்பதும் கடல் தான்!?

தனக்கு என தனி கூடு ...தானே கட்டும் இளம் குருவி!!
உனக்கு என சேர்த்து விடு...!!இல்லை எனில் உன்னை விட உயர்ந்து விடும் இளம் குருவி!!!

இலக்கு நோக்கி எங்கிருந்தோ மாறாமல் வரும் பறவை இனம்..இணை தேடி ..குளம்
பெருக்கி குதுகலமாய் சிலகாலம்!!!
சென்று...மீண்டும் வந்து...தொடர் கதைதான் !! இதை உணராமல் "பறவைகள்"
அழகென்று அகம் மகிழும் ஆரறிவே ..வேடந்தாங்களில்..
----------------------------

ஆண் என்றும் பெண் என்றும் இரு சாதி !!
இவ்வெண்ணம் வளர்ந்தாலே நீதி !!
மனித நேயம் ! மனிதன் மனிதனாக வாழ நம் முன்னோர் கண்ட முன்மொழிவுதான் "சாதி சமயம்!!
அடித்து சாதல் அறிவீனம்!
சாடிக்களித்தால் மதிஈனம் !!
நல்லதை ஏற்று அல்லதை நீக்கு!
உள்ளதை சொல்லி நல்லதை பேருக்கு..
வெட்டி சண்டை ...வீண் பேச்சு !!
விண்ணை தொடுமோ உன் பேச்சு?
அன்பாய் சொல்லி அரவணைப்போம்!
அனைவரும் ஒன்றே..!!!
மனம் வளர்ப்போம் வா!!
-----------------------------------

காதல் போதனை....வேதனையா? பூசித்த பூக்கள் சிரிக்க ...யாசித்தேன்...காதல்
வரம்... ? உன்னை பார்த்ததும் காணாமல் போகிறேனே ஏன்? கருத்து அழிந்ததா ஏன்
காதல்? ஏன் கவிதைக்கு கரு...தந்து விட்டாய்..
முத்தம் குடுத்தா குத்தாது ...
அரும்பு மீசை குறும்பு ஆகும்...அதிக மீசை முகம் குத்தும்...!!
மீசையில் வீரம் வராது!!..ஆண்மை மனதில் இருக்கும் ...மீசை அடையாளம் தான்..!!
மீசை இல்லா ஆணும் அழகு தான்..என்னைபோல !!
முத்தம் குடுத்தா குத்தாது .....
-------------------------------

"காதல்"
"காதல்"

காற்று வரத்தான் ஜன்னல் !! வானமாக நீ நிலவாக நான்!!
வான வில்லாக வந்தால் கைகோர்த்து நீ !! கனவில் தான்....
மழை என் கண்களில்...
"புயல்" வந்து ஜன்னல் உடைய.. முகாரியில் நான்...
"காதல்" கவிதையா? காவியமா? நீ தானே என் எழுத்தின் கரு!!
காற்றில் பறக்கும் சருகு அல்ல என் காதல்!!
இன்னொரு தாஜ் மகால்!!!
மனம் "பிரிந்து" உயிர் வாழ்தல் வேண்டுமோ? ஏலுமோ?
இனம் பழிக்க சேர்ந்தோம். குலம் சிறக்க வாழ்வோம் வா!!

ஊர எல்லாம் ஒளி .. இருட்டின் மிச்சமோடு நிலவாக மனம்.!!...
இரவுக்கு இருட்டும் இருட்டுக்கு இரவும் துணை..
மேகம் எல்லாம் தாகமாக..
மின்னல் கண்களில் களவு...
இடி ஒலியால் நிலவுக்குள் தீக்கோளம் !!
மனசாயம் வெளுத்ததோ? மண் மேல் மழை !!
மருண்ட மேகம் வெகுண்டு ஓடும்...காதலோ அதற்க்கு?

----------------------------------
வாழ்க்கை!!

அவன் : முழு மதியே! மனம் அமர்ந்த ரதியே! உன் கரு விழிகள் கவர்ந்து இழுக்க
"முன்னழகில்" மூர்ச்சை ஆனேன்..சிங்கார சிரிப்பழகி! அலுக்காத நடை அழகி
!!ஆசையோடு அள்ளி தினம் உன் மலர் "தனம்" வருடி..இதழ் தேன் பருகி வீணை என
உன் உடல் மீட்டி ...அழுந்த அணைத்து "அடி" வருடி -நகமாடி ..இதழ் பதித்து
..நாவாலே தேன் குடித்து .."இன்ப நிலை" ஏற வைத்து... ஏற வைத்து.....

காதல் என்பது தனித்த முடிவல்ல..!
குலையா மனமும் குலைந்ததடி...
அசையா மனமும் அசைந்ததடி !!
சொந்த பந்த நட்பு எல்லாம்
தூர நின்று சிரிக்குதடி.. காதலியே!
உன் பாதமெல்லாம் முத்தமிட துடிக்குதடி ...
கொள்ளாமல் கொஞ்சம் கொஞ்சமாய் வாட்டுகிறாய்..
காதல் என்பது தனித்த முடிவல்ல..
முடிவெடுத்து முழக்கி விடு..இளமையிலும் " கிழவனாக"
காத்திருக்கிறேன்......
தூக்கம் வராது ...ஏதேனும் படிப்பேன்..உனை மறக்க...
அதிலும் நீயா?
கண்களுக்கு ஓய்வு தூக்கம் ..கனவிலும் நீ வந்தால் உன்னை மறப்பது எப்போ? மரணம் தான்!!

என் இலக்கு நீ! இலக்கியமும் நீ !!
"இலக்கு இல்லா" வாழ்வினிலே...
இணை இல்லா துணை ஆவோம் !!!
ஈடேற்ற வருவாயோ?

நீ விரும்பி நின்றால் - என்னை நீ விரும்பி நின்றால்..
இமயமும் எனக்கு அடுத்த வீடு !!
பாராமுகமாய் நீ சென்றால் --விலகி சென்றால்
அடுத்த வீடும் எனக்கு அயல் நாடே!!

நாம் எந்தவித எதிர் பார்ப்பும் இன்றி அடுத்தவர் சந்தோசத்திற்காக விட்டு
கொடுத்து அன்போடு செய்யும் நல்ல செயல்களினால் வரும் புகழ்
நிலைக்கும்....அன்பே கடவுள்..அன்புதான் நிலைக்கும்..!!!

விநாயகர் சதுர்த்தி !!

அப்பமொடு அவல் பொறி கடலை அன்போடு உனக்களிப்பேன் ஐங்கரனே ஏற்று அருள்வாய் !!

அறம் பொருள் வீடு இன்பம்..அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
அறிந்து உயரும் அறிவு அருள்வாய் !!

முழு மனதாய் உன்னை நினைக்க மூலவனே முன் நிற்பாய்
உறவாக !!

பிடி மண்ணில் ஆலருகு மஞ்சளுடன் அழகிலா மலரும் சேர்த்து வேழமே வருக என்போம் !!

நல்வினை தீ வினை செய்வினை..எவ்வினை ஆயினும் இடர் படா நிலை அருள் நிர்மலனே !!.

.
ஆணவ கர்ம மாயை அணுகா வண்ணம் தடுப்பாய் ஆனை முகா!!
வானாகி மண்ணாகி வளிஆகி ஒளியாகி யாவுமான வாரணனே !
நின் சீர் அடி போற்றி நிற்போம் !!

அண்டமெலாம் பிண்டத்தில் நிற்க ஆறு அறிவை மறந்து விட்டோம் !!அது அதுவாய்
அழுந்தி ஆசை வழி சென்று விட்டோம் ...அலைந்தோம்!! மீள வில்லை !!??

ஊண் உள்ளே உயிர் இருக்க ..எனக்குள்ளே நீ இருக்க எது என் செய்யும்?
கல்வியோடு தனமருள்வாய்...மங்காத புகழ் அருள்வாய்
என் சிறு மனமும் நீ அறிவாய் "சேர்ப்பன சேர்த்து எனை சிவம் ஆக்கு....சிறு
குறையும் மறந்து விடு சீர் எல்லாம் சேர்த்து விடு!!
ஏழை அன்பை ஏற்று விடு!! எம்மோடு நின்று விடு..!!
சரணம் சரணமையா!!
-----------------------

உன்னை கொல்ல....உன் முயற்சி...!!! மெல்ல சாகும் என் முயற்சி..
புகையில் இல்லை புது கவர்ச்சி...விட்டால் உனக்கு தனி கவர்ச்சி...விட்டு
விடு !! அம்மா சொன்னா தெரியாம குடிப்பான் ! சிஸ்டர் சொன்னா தெரியாம
குடிப்பான் ! காதலி சொன்னா அந்த நேரமாவது...விடுவான்

வானம் பார்த்த பூமியாக வறண்டு விட்ட என் மனம்...
நீலம் பூத்த நினைவோடு தூங்க வில்லை தினம்!!?? தாமரையோ கன்னங்கள்?
தடுமாறும் எண்ணங்கள் .. என்
மனதெல்லாம் வண்ணங்கள் !!
தூங்காத உள்ளங்கள் ...
துணையாக புகை வளையங்கள் !!
புரியாமல் பேசுவதோ? மௌன மொழி..மயக்கும் விழி..
காலம் முழுதும் உன் மடியில்
நான் இருந்தால் ...புகை எதற்கு?
-------------------------

மனம் !!
குன்றும் ஏறும்..குழியும் தள்ளும் ..குரங்காய் திரியும் ..
காதலும் பேசும் ..கருத்தும் கேட்கும்..
விரும்பி சேரும் வெறுத்தும் ஒதுங்கும்..
ஆழ்ந்து உணரும்..அனுபவும் சேர்க்கும்..
நன்றும் தீதும் "பட்டு" உணரும்...
அடங்கிடில் "இறை" தான் !!
அரிதாம் அடங்கல் !!!??
மனம் தான் இதுவே..
----------------------

இயற்கை!

விரும்பியது.. தேடியது...
கிடைக்காதபோது...கவலை !! மட்டும் சொந்தமாக !!!
எதிர் கொள்ளும் வாய்ப்பு கிட்டினால்
அதை ஏற்போமா? மாட்டோமா?
ஏற்பது தான் வாழ்க்கை!

Hot Chat இல் Heat ஆகி ..Short cut இல் சுகம் தேடும்
girls ம் guys ம் ஏன் அழ வேண்டும் orkut இருக்கையிலே ...
Homo வும் lesbo வும் வானவில்லாய் வளம் வருதே !!!
வாத்சாய.....காம சூத்திர ..பிம்பமருள் website ம் பெருகி போச்சே!!??
கேலி கிண்டலோடு SMS ம் நாடு இரவு பேச்சுமென
friendship ம் வளரலாச்சே.. boy friend கூப்பிட்டால்
girl friend டிஸ்கோதே வரும் நாளில் BLUE FILM ம்
பெருகி போச்சே!! BEST FRIEND அருகி போச்சே ....
மோக போகம் வேகமாக வளர்க்கலாச்சே...??
இளம் வயதே எங்கே செல்கிறோம்?
இதுவா வளர்ச்சி...?????

கண் குத்தும் தனம் அழகா ?
கரு வளர்க்கும் குழி அழகா?
மயக்கு மொழி நாயகனே! உனக்கு அழகோ?
உறவாகி "சுமை" கொடுத்து ஓடுவதோ?
பேதலித்து வாடுவதோ பெண் இனமே?
சமத்துவம் தான் !! "எரி தணலில் சேர்ந்த பின்னே ....
ஆம் சமத்துவம் தான்!!!???

மக்கள் முன் என் நிலை உயர்த்த ஆசை !!
மீறிய சக்தி எல்லாம் என்னுள் அடக்க ஆசை !!
முற்றும் துறந்த முனிவர் இல்லை !
முன் நின்று ஏற்கும் குருவும் இல்லை!.
வரும் செல்வம் ஏற்பது ஒன்றே தலை முறைக்கும் ஆசை !!
அரசியலோ மருந்தகமோ கல்வியோ மருத்துவரோ தொழிலோ எதுவாயினும் ஊடுருவி
நிற்பது என்றும் பணத்தாசை !!
ஆறு அறிவின் ஆற்றல் எல்லாம் மூவாசை.. பேராசை !!!!
சேர்த்தது எல்லாம் நிலைப்பதில்லை!!
சேர்த்தவரும் நிலைப்பதில்லை!!
ஏன் இந்த ஆசை ? எதற்கு இந்த ஆசை ??

கொஞ்ச நாள் கருவறையில்....மிஞ்சும் நாள் எது வரையில்?
நல்லதும் கெட்டதும் நாள் எல்லாம் நமை சுற்றி ..!?
புத்தன் காந்தி எல்லோரும் ஆவோமா? உண்மை எது வென இப்போது தேடுகிறேன் !!!
நட்போடு நலம் நாடும் உள்ளம் எல்லாம் எத்தனை நாள்??

முழு மதியோ? ஆயிரமாய் முத்தங்கள் அடுக்கி விட ஆசை.
கொஞ்சு மொழியோ? கொவ்வை இதழ் தேன் பருக ஆசை !
ஆடு நடை எழிலோ? அங்கமெல்லாம் முத்த மழை பொழிய ஆசை !
பிஞ்சு கரம் பற்றி நாள் எல்லாம் எச்சில் மழை தனிலே எந்நாளும் நனைந்து
இருக்க ஆசை !! குழலும் இல்லை யாழும் இல்லை
குழந்தை நீ இருக்க வேறு என்ன வேணும் எனக்கு இங்கே?

ஆய கலைகள் யாவும் என் அறிவினில் சேர
தூய மலர் உரை மாதே ! சேய் எனை நீங்காது இரு!!!
நயமுடன் செய்த பிழை நால்வரை மறந்த பிழை
ஐவரால் வந்தபிழை ஆறு அறிவு ஆற்றும் பிழை
மீளும் வகை அறியோம் !! அருளோடு ஆட்கொண்டு
உள் உணர்ந்து உய்யும் வழி தந்து அருள்வாய் தாயே!!!

ninaivukal 2 19 01 2011