Saturday, March 12, 2011

ஒரு கவிதை சொல்லு!! 13.3.2011

ஒரு கவிதை சொல்லு!! 13.3.2011

வீழ்த்தும் கணைகள் அவமானம்!!அதை வீழ்த்தி
வெல்வது நம் வாழ்வுக்கு வருமானம்! அதுவும் உரம் தானே!!
அடைபட்ட கதவுக்கு முன் அழலாமா?
ஆயிரம் கதவுகள் திறந்திருக்கு!!
தேவையும் குறிக்கோளும் மாறலாம்!!
தன்னம்பிக்கை கொண்டு முனைப்போடு முயன்றால் வெற்றி வரும்!!
திறமையோடு கடந்து விடு! நட்பே!! உன் வழி உன் கையில்!!
----------------------

ஒற்றை செல்லில் உயிர் கொடுத்து என்னை ஆளாக்கினாய் தாயே!!
மற்ற எதையும் நாடவில்லையே நீ! என் அம்மா!!ஏன் அம்மா??
உலகில் உயர்ந்த உறவும் நீ!! சிறந்த தோழியும் நீ!!
உன் மடியில் உயிர் விட வேண்டும் அம்மா!!
தாய் ஆகும் போது உன் போல் சிறக்க முடியுமா?????
---------------------

அந்தி மாலை நேரமது !!
அகிலமும் இருண்டிருக்க
இளமஞ்சள் ஒளி பட்டு
அந்திநேர ஆதவனாய் ஜொலித்து
அவள் வந்தாள் என்னருகே!!
தீண்ட துடித்தது என் மனம்!!
வெண்ணிற ஆடையிலே வெட்கி
மறையும் வெண்ணிலவோ?
உணர்வின்றி நான் உறங்குகிறேன்!! ஐயோ!!
---------------------------------------
அவள் : ஒரு கவிதை சொல்லு!!
அவன் : என் கவிதையே நீ தானே!!
---------------------------
வாயாடும் நான் மௌனமாக...
ஊமை வாயன் உளறி விட்டான் !!
இந்த மாற்றம் காதலினால்!!
---------------------------
சிதறா வாழ்வு வேண்டி தேங்காய் உடைப்பார் ஒரு பக்கம்!!
அதை பொறுக்கி வாழும் மனம் ஒரு பக்கம்!!
சிதறியது எது? காயா? வாழ்வா?
------------------------------
திருமணவிருந்து!! சாப்பிட மனம் இல்லை!!ஏனா ?
என் காதலிக்கு திருமணம்!!
-------------------

1 comment:

  1. அருமையாக இருக்கிறது சசிகலா:):):)

    ReplyDelete