Wednesday, December 29, 2010

மீட்பரே!! 29 12 2010, வழுக்கையும் நரையும்....

மீட்பரே!!
தங்கள் மந்தையில் இருந்து ஆடுகள் தமக்கும்..தம் குடும்பத்தாருக்கும்
என செல்வம் சேர்க்க போகாத வழி சென்று...தன்னால் ஆனதெல்லாம் செய்து...
நிலைக்காது என உணர்ந்தும்..உணராமலும்...சேர்த்து ...
மீளும் வகை அறியாது சென்று விட்டன...செல்கின்றன...
இயேசுவே!! தங்களின் பரிசுத்தம் அவர்களின் ரத்தத்தில் சென்று அவர்களை தன்னை உணர செய்து மேலும் மேலும் குற்றம் புரியாவண்ணம் காத்து ரட்சிப்பது தங்கள் கடன் ஆகும்...ஆமென்!!
எம்மதமும் சம்மதம்!! எல்லோரும் ஒன்றே!!ஏற்று அருள்வீர்!!
தடுத்து ஆட்கொண்டு ஆசீர்வதியும்!!...இளைப்பாறுதல் தருவீர்...ஆண்டவரே!! அன்போடு அன்னமிட்டு அனைவரும் ஒற்றுமையாய் உணர்ந்து உயர்ந்து வாழ அருள்வீர்...ஆமென்!!
--------------------

வழுக்கையும் நரையும் மூப்பும் பல் இழப்பும் BP, Sugar ம்
வாழ்வு முடிவு வரும் ..என்ற .எச்சரிக்கையோ?
நில்லா உடலை நிலை என்று எண்ணாதே மனமே!!
நாணயம், நேர்மை, இரக்கம், கருணை வளர்ந்து
வாழ்ந்து பார்க்க ஆசை வருமோ??
தமக்கென சேர்த்தது எங்கே ??
அளவோடு..நியாயம்..தர்மம் என பகிர்ந்து அனுபக்க மனம் வருமா?
செத்தாரை போல் திரி என்றான் பட்டினத்தான்!!
ஒன்பது வாசல் தோல் உடலை சதம் என நாம் அலைய
கழுகு தமதென்று சுற்றுவதோ??
எத்தனையோ நாள் சேர்ந்து நம் பெற்றோர் எடுத்த
அழகு சரீரம் இது !!
இருப்பது பொய்...போவது மெய்..உணராயோ??
காது அற்ற ஊசியும் வாறது கான் கடை வெளிக்கே!!
உணர்ந்து விடு...உன்னை உணர்ந்துவிடு..மனமே!!
----------------------------------

புள்ளிமான்கள் சிங்கங்களை
சிறை வைக்கும் அற்புத காடு காதல்!!

கிருஸ்துமஸ்!!

கிருஸ்துமஸ்!!


மீட்பரே!!

தங்கள் மந்தையில் இருந்து ஆடுகள் தமக்கும்..தம் குடும்பத்தாருக்கும்

என செல்வம் சேர்க்க போகாத வழி சென்று...தன்னால் ஆனதெல்லாம் செய்து...

நிலைக்காது என உணர்ந்தும்..உணராமலும்...சேர்த்து ...

மீளும் வகை அறியாது சென்று விட்டன...செல்கின்றன...

இயேசுவே!! தங்களின் பரிசுத்தம் அவர்களின் ரத்தத்தில் சென்று அவர்களை தன்னை
உணர செய்து மேலும் மேலும் குற்றம் புரியாவண்ணம் காத்து ரட்சிப்பது தங்கள்
கடன் ஆகும்...ஆமென்!!

எம்மதமும் சம்மதம்!! எல்லோரும் ஒன்றே!!ஏற்று அருள்வீர்!!

தடுத்து ஆட்கொண்டு ஆசீர்வதியும்!!...இளைப்பாறுதல் தருவீர்...ஆண்டவரே!!
அன்போடு அன்னமிட்டு அனைவரும் ஒற்றுமையாய் உணர்ந்து உயர்ந்து வாழ
அருள்வீர்...ஆமென்!!

-----------------------------------



வழுக்கையும் நரையும் மூப்பும் பல் இழப்பும் BP, Sugar ம்

வாழ்வு முடிவு வரும் ..என்ற .எச்சரிக்கையோ?

நில்லா உடலை நிலை என்று எண்ணாதே மனமே!!

நாணயம், நேர்மை, இரக்கம், கருணை வளர்ந்து

வாழ்ந்து பார்க்க ஆசை வருமோ??

தமக்கென சேர்த்தது எங்கே ??

அளவோடு..நியாயம்..தர்மம் என பகிர்ந்து அனுபக்க மனம் வருமா?

செத்தாரை போல் திரி என்றான் பட்டினத்தான்!!

ஒன்பது வாசல் தோல் உடலை சதம் என நாம் அலைய

கழுகு தமதென்று சுற்றுவதோ??

எத்தனையோ நாள் சேர்ந்து நம் பெற்றோர் எடுத்த

அழகு சரீரம் இது !!

இருப்பது பொய்...போவது மெய்..உணராயோ??

காது அற்ற ஊசியும் வாறது கான் கடை வெளிக்கே!!

உணர்ந்து விடு...உன்னை உணர்ந்துவிடு..மனமே!!

-----------------------------

கோழியா நான்?? ஏக்கம் தான் நிலையா?

அவள் வருவாள் என
வழி மேல் விழி வைத்து வயசு போச்சு!!
முட்டை இல்லாமல் அடைகாக்கும்
முட்டாள் கோழியா நான்!!
--------------------
ஏக்கம் தான் நிலையா?


இறந்தால் தான் இரக்கம் கூட வரும் !!
குழப்பங்கள் குதூகலமாய்......வலம் வர
காயங்களில் ...எரிதணல்..சுற்றம் வீச..
கடவுளும் கல்லோ!! ... மூடனோ!!
என் இதயத்தில் ... ரத்தம் !! சுண்டியதேன்?
பிடித்தது கிடைக்கவில்லை!!
ம்ம்ம்ம்... என் வாழ்க்கை எனக்கு பிடிக்காமல் போனது
ஏக்கம் தான் நிலையா?

அண்டங்கள் எல்லாம் நம் பிண்டத்தின் உள்ளே !!

அண்டங்கள் எல்லாம் நம் பிண்டத்தின் உள்ளே !!
மின்மினியே!! புன்னகை கூத்தாட..சொந்தங்கள் அருகிருக்க
சோகமின்றி சாதனை காண முயன்று நில்!!
நேற்று --அது ஓட்டை பானை--எதுவும் நில்லாது...
நாளை --அது மதில்மேல் பூனை!!மாறலாம்!!
இன்று நிஜம்!! முன்னேறு !!மனித குணம் மாறாது நீ வாழ்க !
பாசத்தை பரிமாறி அன்புக்கு அடிமை ஆகி
பெண்ணாக பெருமை சேர்த்து வாழ்க வாழ்க!!
sasikala
kavithaisasikala2000@gmail.com
29.12.2010

Tuesday, December 14, 2010

மாமா மாமா வா மாமா !!

மாமா மாமா வா மாமா !!
மசக்கை ஆக்கிவிட்டு போ மாமா...என்னை
மசக்கை ஆக்கிவிட்டு போ மாமா!!
தந்தானே தான தன்னே தந்தானா தான தன்னே தந்தானா
புழு பூச்சி காணலியே!! சொல்லிகாட்டி கொல்லுவாங்க மாமா!!
மலடி பட்டம் கட்டி வைத்து மயங்க விட ஆசையா ?
அவன் :
தங்கை தம்பி கல்யாணம் தலைக்குமேல நிக்குதடி
அத முடிச்சு ..நம்ம குடும்பம் பெருக்குவோமடி!!
அது ஒன்னே வேலை எனக்கு ..மறக்கமாட்டேன்டி!! ..
அவள் : என்ன பேச்சு பேசுற ..மக்கு மாமா??
காலத்திலே செய்யாத "வெள்ளாமை" இருந்தென்ன லாபம்??
பேசாதே..போய் விடு.. உனக்கு எதுக்கு கல்யாணம்..
மனைவி மக்கள் எல்லாம்??
அவன் :
இடி வார்த்தை வேண்டாமடி !!
என் மனசு புரியவில்லை ..போடி!!
தாய் ஆகும் தகுதி உனக்கு உண்டு..
தவிக்கும் மனசு எனக்கு உண்டு!!
கடமைக்காக காத்திருக்கேன்!! கவலாதே கண்ணே!!
இது மட்டும் கடமை இல்லையா ..வெட்டி பேச்சு ...வீண் வார்த்தை..
எனக்குதானே..உனக்கென்ன??
மாமா மாமா வா மாமா !!
மசக்கை ஆக்கிவிட்டு போ மாமா...என்னை
மசக்கை ஆக்கிவிட்டு போ மாமா!!

Sunday, December 12, 2010

எனக்கான பாதை எது ?

எனக்கான பாதை எது ?
இருளா? ஒளியா? எது அதிகம்?
எனக்கான பாதை எது?
என் மனதிற்குள் வலிகள் அதிகம்!!ஆதிக்கம் அதிகம்!!
வலிக்கு மருந்து இல்லை!!
நானாக அமைக்கவில்லை !!
தானாக வந்ததா? தெரியவில்லையே!
யாரை நம்பி நான் ? என்னை நம்பி யார்?
யாரை அழைப்பது? இது எனக்கான பாதை!!
வாழ்ந்து முடிக்க வேண்டும் !! வலிய மனதோடு!!
எனது வழியில் உறுதியோடு!!உண்மையோடு!!
-------------------------
உயிரும் உயிரும் ஒன்றாகி உருகும் நேரம் இது !!
ஆசை ..பசித்திருக்க...சூடும் எண்ணம் இல்லையா?
இதழும் இதழும் பாடும் பாடல் எது?
உரிமையில் பழகி ..தவிப்பது தொடர் கதையா??
உன் குறும்புகள் வளர...எனை மறந்தேன்!!
பகலிலும் கனவு..!! உன் நினைவினில் நாளும் போகுதடா!!
தந்தன தந்தன தாளம் வருமா?
இருபதில் தொடங்கி அறுபதில் வளரும் நம் காதலடா!!
கண்மூடி தூங்கினாலும் தீயாக நீ!!
பெண் இன்றி ஏது வாழ்க்கை?? எல்லாம் பெண்தானே!!
புரியாதா!!??
என்காதலை நான் பாடவா?
நெஞ்சினில் ஆயிரம் தாளம்!!
உயிரும் உயிரும் ஒன்றாகி உருகும் நேரம் இது !!
அருகில் வந்து என்னை அள்ளிக்கொள்ள ஆசை இல்லையா ??
உன் நினைவில் உலகே வெறுக்குதடா!!
------------------------------------

நாளும் மறந்தேன்!! உன்னை தேடி அலைந்தேன்!!
நினைவெல்லாம் நீயாக!!
உன் அன்பை ரசித்து...சொல்லை ரசித்து
செயல் எல்லாம் ரசித்து ..ரசித்து..என்னை மறந்தேன்!!
காலிலே சிறகு இல்லை..பறந்துவர..
உயிர் தீயை உணர்ந்தேன்!! என் உருகும் உள்ளம் நீ
உணரவில்லை !!
முத்தமிட துடிக்கும் உதடும் உலருதே!!
கனவுகள் சுமந்த இமைகள் ..
உன் கையேடு கை சேர காத்து நிற்க ..
மனம் வாழும் மல்லிகையே வா!! வா!!
தென்றலாகி எனை தாலாட்ட வா! வா!!
உன் மடியில் எனை மறப்பேன் நானே!!
கற்பனையில் நான் சஞ்சரிக்க...
ஒப்பனையில் நீ இருக்க...
நாளும் மறந்தேன்!!பெண்ணே!
இன்னும் விடியவில்லை!! கனவுதானோ ??
---------------------------------
நான் பார்த்தவுடன்..இதயத்தில் நுழைந்து விட்டாய்!!
நீ பார்த்தவுடன்...என் இதயம் காணவில்லை!!
கொடுத்துவிடு!! மனதில் நிலைத்துவிடு!!
உன் பெயரும் தெரியாது..!! கவிதையோ நீ !!??
நீயும் என் கவிதையும் என்றும் கற்பனையில்!!
----------------------------------------

Friday, December 10, 2010

நாளும் மறந்தேன்!!உருகும் நேரம் இது !!

நாளும் மறந்தேன்!! உன்னை தேடி அலைந்தேன்!!
நினைவெல்லாம் நீயாக!!
உன் அன்பை ரசித்து...சொல்லை ரசித்து
செயல் எல்லாம் ரசித்து ..ரசித்து..என்னை மறந்தேன்!!
காலிலே சிறகு இல்லை..பறந்துவர..
உயிர் தீயை உணர்ந்தேன்!! என் உருகும் உள்ளம் நீ
உணரவில்லை !!
முத்தமிட துடிக்கும் உதடும் உலருதே!!
கனவுகள் சுமந்த இமைகள் ..
உன் கையேடு கை சேர காத்து நிற்க ..
மனம் வாழும் மல்லிகையே வா!! வா!!
தென்றலாகி எனை தாலாட்ட வா! வா!!
உன் மடியில் எனை மறப்பேன் நானே!!
கற்பனையில் நான் சஞ்சரிக்க...
ஒப்பனையில் நீ இருக்க...
நாளும் மறந்தேன்!!பெண்ணே!
இன்னும் விடியவில்லை!! கனவுதானோ ??
-----------------------------

உயிரும் உயிரும் ஒன்றாகி உருகும் நேரம் இது !!
ஆசை ..பசித்திருக்க...சூடும் எண்ணம் இல்லையா?
இதழும் இதழும் பாடும் பாடல் எது?
உரிமையில் பழகி ..தவிப்பது தொடர் கதையா??
உன் குறும்புகள் வளர...எனை மறந்தேன்!!
பகலிலும் கனவு..!! உன் நினைவினில் நாளும் போகுதடா!!
தந்தன தந்தன தாளம் வருமா?
இருபதில் தொடங்கி அறுபதில் வளரும் நம் காதலடா!!
கண்மூடி தூங்கினாலும் தீயாக நீ!!
பெண் இன்றி ஏது வாழ்க்கை?? எல்லாம் பெண்தானே!!
புரியாதா!!??
என்காதலை நான் பாடவா?
நெஞ்சினில் ஆயிரம் தாளம்!!
உயிரும் உயிரும் ஒன்றாகி உருகும் நேரம் இது !!
அருகில் வந்து என்னை அள்ளிக்கொள்ள ஆசை இல்லையா ??
உன் நினைவில் உலகே வெறுக்குதடா!!


I am Kavithai.Sasikala, MSC, PGDCஉருகும் நேரமA, DTT,(M.PHIL), http://kavithaisasikala2000.blogspot.com/ wish to have your firendship.accept.
kavithaisasikala2000@gmail.com

Wednesday, December 8, 2010

" கருணா நதி !!

ஆயிரம் பேரொளி அபிநயம் !!
அரும்தமிழ் காவலன் கண்டான்.!
'தஞ்சை பெருங்கோவில்" ஆயிரம் ஆண்டு காப்பியம் ஆனது !!!
காவியம் ஆனது! கவிகள் உள்ளவரை "கலைஞர்" உண்டு!!
இல்லை! இல்லை !! தமிழ் உள்ளவரை "தலைமகன்' உண்டு!
அகிலம் புகழ "ஆயுள் முதல்வன்" வாழ்வான் !!வாழ்வான் !!
எங்கள் "முதல்வன்" என்றும் வாழ்க!!
நடக்கும் நாயகன் நலமுடன் வாழ்க!!
முத்தான மு. க. சத்தான காவியம்!!
மக்கள் மனதில் நீங்கா ஓவியம்!!
ஆயிரம் தலைமுறை வாழ்த்தும்!!! வணங்கும் !!
கருணாநிதி!! இல்லை இல்லை !! " கருணா நதி !!
கங்கை என வற்றாது....அவன் புகழே!!

சிவம் ஆகு!!

கடலின் ஆழம் ! ஊமையின் கனவு !! ஆகாய விரிவு!! மகளிர் மனம்!!
அறுதி இட்டு கண்டவர் உண்டோ? தீயினுள் சென்றது சாம்பல்!!
நல்வினையும் தீவினையும் வேறு வேறு எதுவும் வேண்டாதவருக்கு !!
நரை..திரை ..மூப்பு எல்லாம் நாறும் நம் உடல் அதற்கே!!
மூன்றும் ஐந்தும் நவமும் ஆட்டுவிக்க ...தன்னை உணர்ந்தவர்
யாரும் இன்று உண்டோ?
உடல்..பொறி..மனம் கடந்து "தன்னை உணரும்" ...உண்மை
உணரும் காலமும் வருமோ??
இவ்வுலகில் ஜனித்தன யாவும் சிவம் எனில் ஆண் பெண் பேதம் ஏது?
பக்குவமே பரமன் !!மன பக்குவமே பரமன்!! தேர்ந்து தெளிந்து விடு!!
சிவம் ஆகு!!

துதி மனமே!!

அருளும் பொருளும் ஞானமும் வேண்டி
ஏழ்மை துக்கம் அச்சம் நீங்க
ஆசை கொண்ட பொருள் கிட்டாவிடினும்
கிட்டி இழந்தாலும் வரும் சோகம் அகல

வெந்ததை தின்று விதி வந்தால் மாள்வோம் எண்ணம் மாற்றி
சத்வ ராஜா தமஸ் ஆன நவ துர்க்கை மகாலக்ஷ்மியை துதி மனமே!!

கடலின் ஆழம்!!

கடலின் ஆழம் ! ஊமையின் கனவு !! ஆகாய விரிவு!! மகளிர் மனம்!!
அறுதி இட்டு கண்டவர் உண்டோ?
தீயினுள் சென்றது சாம்பல்!!
நல்வினையும் தீவினையும் வேறு வேறு
எதுவும் வேண்டாதவருக்கு !!
நரை..திரை ..மூப்பு எல்லாம்
நாறும் நம் உடல் அதற்கே!!
மூன்றும் ஐந்தும் நவமும் ஆட்டுவிக்க ...
தன்னை உணர்ந்தவர்  யாரும் இன்று உண்டோ?
உடல்..பொறி..மனம் கடந்து "தன்னை உணரும்" ..
உண்மை உணரும் காலமும் வருமோ??
இவ்வுலகில் ஜனித்தன யாவும் சிவம் எனில்
ஆண் பெண் பேதம் ஏது?
பக்குவமே பரமன் !!மன பக்குவமே பரமன்!!
தேர்ந்து தெளிந்து விடு!! சிவம் ஆகு!!

I am Kavithai.Sasikala, MSC, PGDCA, DTT,(M.PHIL),
http://kavithaisasikala2000.blogspot.com/ wish to have your firendship.accept.
you are requested to join in my community
SASIKALA

Monday, December 6, 2010

திருமணம்!! அடிக்கரும்பு!!

இரு மனமும் இரு உடலும் உறவாகி
ஒன்று ஆகும் ஓர் நாளே திருமணம்!!
நட்போடு சுற்றம் எல்லாம் சேர்ந்து வாழ்த்துரைக்க
பெற்றோரின் பெருங்கனவும் திருமணம்!!
வளர்த்து எடுத்து ...வாழ்க்கை பாதை
தொகுத்து அளித்து களிக்கும் பெற்ற
இருமனம் !!அந்தநாளே திருமணம்!!
இரு மனதின் சங்கமம்!! அதற்கான
"கனி" தினம் தான் திருமணம்!!
எங்கோ பிறந்து..எங்கோ வளர்ந்து
உடலோடு ..உள்ளம் சேர்க்கும்
உல்லாச உயர் தினம்!!
தனக்கு என்று தமக்கு என்று
"தனி உலகம்" வார்க்கும் அந்த
மன தினம்!! மண தினம் !!
திருமணம்!!திருமணம்!! -------
உதிரத்தை உணவாக்கி ஊட்டி தினம் வளர்த்த அன்னை!!
கல்வி..கேள்வி சிறந்திடவே காலமெல்லாம் "வேள்வி" கண்ட பாசமிகு தந்தை!!
வளர்ந்து " வருமானம்" பார்த்த பின்னே ...
தனக்கென்று தனி கணக்கு!!
பாசமும் பங்காச்சு !! நினைவாச்சு!!
கண்டபோது...தனி பேச்சு!!
இருக்கமுடன் இடைவெளியும் பெரிதாக ...
மடை உடைந்த வெள்ளமென மனக் கவலை
பெற்றோருக்கு!!
இதுதான் விதிப்பயனோ?????
-----------




அடிக்கரும்பு எனக்கு என்றும் என்னவளே நீ தானே !!............
சொல்லாடி...சொல்லாடி 2+1 சுவை சேர்த்தான்!!
இடிக்கரும்பும் இன்பம் தான் ...இழுத்தெடுத்தாள் !!
இன்பம் சேர்க்கும் காலம் இது!!
விலகாதே!! விலகாதே!!
ஒருவருக்குள் ஒருவராகி ....ஒவ்வொரு நாளும்
போராட்டம்! போராட்டம்!! தேரோட்டம்!!
தெவிட்டாத "தேன்" ஆட்டம்!!
தன் வீடு!! தன் குடும்பம் !! தனி மகிழ்ச்சி!!
தன் பிள்ளை !! அவர் வளர்ச்சி!! அது என்றும் மனக்குளிர்ச்சி!!

Sunday, December 5, 2010

கணினி! ! தண்ணீரைத் தேடி.....

தண்ணீரைத் தேடி ஆழத்திற்கு போகிறோம் !
வீணாக்குவதை விட்டுவிட்டால் வீடு எல்லாம்
தழைத்திருக்கும் !! நில நீரும் பெருகி நிற்கும்!!
----------------------------------

கணினி வந்தபின்
உலகமே என் விரல் நுனியில் !!
ஆனால் நாற்காலியில் சிறைபடுகிறது
உன் வாழ்கை!! உணர்வது எப்போது ?

---ஜெய கௌரி

அன்பான அண்ணனே!! ஆருயிர் ஆசானே!!
இன்னல்களுக்கு ஈடு கொடுத்தாய் உன்
எண்ணங்களை !! உற்றார் உறவினர் ஊ ர் அறிய ஒதுக்கினர் !
எதிர்காலம் இனி ஏகாந்தம்தான் அதில் ஐயமில்லை !
ஒப்பற்ற செல்வங்களினால் ஓங்கட்டும் உன் புகழ் தானே!!
---ஜெய கௌரி
உன் சித்திரம் பேசுதம்மா !!என் சிந்தை மயக்குதம்மா !!
பேசாயோ? மொபைல் எடுத்து பேசாயோ?
ஆடி நிற்கும் அழகே!!பாட்டி களித்த பரிசே!!வா! வா!
வண்ணத்தமிழ் கலையே!! துள்ளி துள்ளி நீ வா! வா!!
ஓடி விளையாட வா! ஆலையின் கரும்பு ஆனேன்!!
அன்பாலே உடல் மெலிந்தேன்!!
கண்ணே நீ வாராயோ! என் கவலையை தீராயோ!!
கல்வி தரும் வாணி!! கல்லோ உன் மனம் கல்லோ!?!

----------------------------

தண்ணீரைத் தேடி ஆழத்திற்கு போகிறோம் !
வீணாக்குவதை விட்டுவிட்டால் வீடு எல்லாம்
தழைத்திருக்கும் !! நில நீரும் பெருகி நிற்கும்!!
--------------------------
கணினி வந்தபின்
உலகமே என் விரல் நுனியில் !!
ஆனால் நாற்காலியில் சிறைபடுகிறது
உன் வாழ்கை!! உணர்வது எப்போது ?
------------------------------


Friday, December 3, 2010

எனை என்ன செய்தாய் ஆறுமுகா?

எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
ஆறு தாய் வளர்த்த சிவன் மகனே!
தந்தையும் சிலம்பாட வரும் அழகே!!
உன் புகழ் பாட உருவெடுத்தேன்!
மருளாது ஒருமனமாய் கவி எழுத
தனி தமிழ் தருவாய்!! நீ
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
அம்மையப்பன் ஆசியுடன்
அழகு மயில் ஏறி ஆடி வந்தாய் !
ஞான பழமாக நீ உயர்ந்தாய்!
தகப்பன் சாமி என பெயர் எடுத்தாய்!!
குன்று ஏறி ஆண்டிஎன தனித்து நின்றாய்!
சரவணபவ குக ஷண்முகா வா!
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
அறுபடை வீடேறி ஆளுகிறாய்!
கூர் வடிவேல் எடுத்து ஆணவ மலை பொடித்தாய்!
செந்தில் குமரா! செகம் காத்தாய்!!
இச்சையுடன் பச்சை வயல் ஏகி வள்ளி கண்டாய்!
பாசமிகு தெய்வானை கொண்டாய்!!
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எழிலோடு என் உளம் புகுந்து ஆடுகிறாய்!
உன் வழிதானே எனை என்றும் போக்குகின்றாய்!
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
வண்ண மலர் உண்டு !!வருடும் காற்றும் உண்டு!!
வெள்ளி அலை மேவும் வேலவனே!!
எங்கும் "இசை" ஒங்க எழுதுகிறேன்!!
தங்கும் என் பாடல் தரணி எங்கும்!!
உனைப்பாடும் தமிழ் பாட்டில் வலிமை வரும்! அது
ஏகத்தின் பெருமை சொல்லும்!! அகத்தின் அழுக்ககலும்!
முகத்தில் ஒளி பெருக்கும்!!
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எங்கும் உனைப்பாடி நான் உயர்வேன்!
தங்கும் உணர்வோடு என் உளம் புகுவாய் !!
கந்தா! கடம்பா! தணிகாசலனே! தாங்கி
எனை உயர்த்தி சிவம் சேர்ப்பாய்!!
தமிழ் இருக்கும் காலம் வரை நான்
கவி எழுதி புகழ் பெறவே .....
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?

Thursday, December 2, 2010

"கவனம் தேவை ", எண்ணங்களாலே பாலம்!!,உள்ளம் உணராயோ?? ,எதற்கு? எதற்கு?

"கவனம் தேவை "
-----------------------
சாலையில் குறியீடு...மஞ்சள்!!
கவனத்தோடு பக்கம் உணர்ந்து செயல்பட....!!!
எனது கவிதைகள் தரும் சில கருத்துக்களுக்கும்
மஞ்சள்தான் குறியீடு..!!
நாகரீக மாற்றங்களால் மாறிப்போய் இருக்கும்
இளைய சமுதாயம்!! நல்லதும் உண்டு!! தீயதும் உண்டு!!
நம்மையும் நம்மை சுற்றி உள்ள அனைத்தையும்...
ஆழமாக சிந்தித்து.....உணர்ந்து....செயல்பட .......!!
கவனம் கொள்வீர் தோழமைகளே!!
-------------------------------
எண்ணங்களாலே பாலம்!!
 ----------------------------------
எண்ணங்களாலே பாலம்!!
தினம் அதை தாண்ட முடியாத மன ஓலம்!!
காதல் கடலில் விழுந்து விட்டேன்!!
கரை காண முடியவில்லை!!
கனவுகளில் அவன் !! வந்தான் !!சென்றது ஏன்?
காத்திருந்த மனம் நோக ...போனானே !!
என்னவன் எங்கே என் தோழி!!
தெளிவும் இல்லாமல் தேற்றவும் முடியாமல்
மயங்குது என் மனம் தோழி!!
இந்நிலை மாறுமா? இல்லறம் காணுமா?
ஏங்குகிறேன் தோழி!! ஏங்குகிறேன் தோழி!!
எண்ணங்களாலே பாலம்!!
தினம் அதை தாண்ட முடியாத மன ஓலம்!!
ஊரை தெரிந்தும் ..உறவை தெரிந்தும்..
அவனை தெரியலியே!!
பந்த பாசம்..வெளி வேஷம்!!
கறிவேப்பிலை நானோ?
தீ காயத்தில் ஆசிட் விடுகிறான்!!
ஏங்குகிறேன் தோழி!!
எண்ணங்களாலே பாலம்!!
தினம் அதை தாண்ட முடியாத மன ஓலம்!!
--------------------
உள்ளம் உணராயோ??
 --------------------------

கரை பிரிந்து அழுமா அலைகள்?
விண்ணை பிரிந்து அழுமா மேகம்?
நீ அனலாய் வார்த்தையில் சுட்டாலும்
கோபத்தணல் கொட்டினாலும் ...
என் நெஞ்சம் நிறையுமே!!பேசுவது நீ அன்றோ!!
திசை மாறா காதலுடன் உன் பாத சுவடை பின்பற்றி
உருகும் உயிரோடு நான்...என்றும்! என் கவிதையுடன் ...
மனம் மாறாதா??? ஏங்கி..தவிக்கும் உள்ளம் உணராயோ??
---------------
"காதலின் தீண்டலால் ஒவ்வொருவரும் கவிஞராகிறோம்."

- பிளாட்டோ

"நான் அழகாக இருப்பதால் நீ காதலித்தாயா அல்லது நீ காதலித்ததால் நான் அழகானேனா?"

- சிண்டரெல்லா

"காதலுக்கு காரணம் உண்டு. ஆனால், அந்தக் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாது."

- பிலாசே பாஸ்கல்

"காதல்... பெண்ணுக்கு வாழ்க்கை வரலாறு; ஆணுக்கு ஓர் அத்தியாயம்."

- ஜெர்மியின் டி ஸ்டீல்

"காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் மட்டுமே வாழ்க்கையின் ஒரே மகிழ்ச்சி!"

- ஜார்ஜ் சாண்ட்

"காதலர்களின் உதடுகளில் ஆன்மாவைச் சந்திக்கிறது ஆன்மா"
- ஷெல்லி

"போரைப் போன்றது காதல். தொடங்குவது சுலபம்; முடிப்பது கடினம்"
- யாரோ

என் கணவரை சந்திப்பதற்கு முன்பு நான் காதலில் விழுந்ததே இல்லை; ஆயினும் சில முறை நுழைந்திருக்கிறேன்.

- ரிடா ருட்னர்

காதலுக்கு கண்ணில்லை; அந்தக் கண்ணை திறப்பது திருமணம்!
- பவுலின் தாம்ஸன்

"உண்மையான காதல் கதைகளுக்கு முடிவுகளே கிடையாது."
- ரிச்சர்ட் பாச்
----------------------------
எங்கள் தமிழ்!
--------------------------

என் அன்னை தந்த தமிழ்!!
மகேசன் தந்த தமிழ் – விண் அளந்த தமிழ்!!
சிவ வேலன் தந்த செந்தமிழ்!!சிந்தை நிறைந்த தமிழ்!!
பிள்ளைத் தமிழ்!! பேசும் தமிழ்!!
அகத்தியன் கண்ட தமிழ்!!
கங்கையாய்.. காவிரியாய் விரிந்த தமிழ்!
தொல்காப்பியன் தந்த தமிழ்!!
தொல்லுலகம் போற்றும் எங்கள் தமிழ்!!
அவ்வைக்கும் மூத்த தமிழ் !!
அவணி போற்றும் முத்தமிழ்!!
வள்ளுவன் தந்த தமிழ்!!வாழ்வு தந்த தமிழ்!!
மக்கள் மனம் நிறைந்த தமிழ்!!
வீறு கொண்ட வீரத்தமிழ்!!
காதல் பேசும் தமிழ் !! கன்னியரை பாடும் தமிழ்!!
தென்றலாய் வீசும் தமிழ்!!தேனருவி பாயும் தமிழ்!!
வளங்களை சேர்த்த தமிழ்!!

பாரதி தந்த தமிழ்!! சுதந்திரம் கண்ட தமிழ்!!
புரட்சி கண்ட தமிழ் !! புதுமைகள் படைத்த தமிழ்!!
கண்ணதாசன் கண்ட தமிழ்!!
கண்ணன் கீதமெல்லாம் தமிழ்! தமிழ்!!
கலைஞன் கண்ட கோபாலபுரத் தமிழ்!!
என்றும் வாழும் நின்று நிலைக்கும்
எங்கள் தமிழ்! எங்கள் தமிழ்!
--------------------------

எதற்கு? எதற்கு?
-------------------
பொறுமை இல்லா "அறிவு" எதற்கு?
திருமணம் வேண்டாத ஆண் பெண் எதற்கு?
பயன் இன்றி பொழுதை கழிக்கும் இளமை எதற்கு?
படி இல்லாத குளம் எதற்கு?
முதுமையை பேணாத பாசமில்லா பிள்ளைகள் எதற்கு?
நறு மணம் இல்லாத பூ மாலை எதற்கு?
கல்வி இல்லாத "புலமை" எதற்கு?
குழந்தை இல்லாத "செல்வம்" எதற்கு?
அழகாய் இருக்கும் "ஆடை" இல்லாத பெண் எதற்கு?
சேவை மனம் இல்லாத துறவு எதற்கு?
பருக முடியாத நீர் எதற்கு? --------------------------
I am Kavithai.Sasikala, MSC, PGDCA, DTT,(M.PHIL), kavithaisasikala2000@gmail.com
http://kavithaisasikala2000.blogspot.com/ wish to have your firendship.accept.