எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
ஆறு தாய் வளர்த்த சிவன் மகனே!
தந்தையும் சிலம்பாட வரும் அழகே!!
உன் புகழ் பாட உருவெடுத்தேன்!
மருளாது ஒருமனமாய் கவி எழுத
தனி தமிழ் தருவாய்!! நீ
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
அம்மையப்பன் ஆசியுடன்
அழகு மயில் ஏறி ஆடி வந்தாய் !
ஞான பழமாக நீ உயர்ந்தாய்!
தகப்பன் சாமி என பெயர் எடுத்தாய்!!
குன்று ஏறி ஆண்டிஎன தனித்து நின்றாய்!
சரவணபவ குக ஷண்முகா வா!
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
அறுபடை வீடேறி ஆளுகிறாய்!
கூர் வடிவேல் எடுத்து ஆணவ மலை பொடித்தாய்!
செந்தில் குமரா! செகம் காத்தாய்!!
இச்சையுடன் பச்சை வயல் ஏகி வள்ளி கண்டாய்!
பாசமிகு தெய்வானை கொண்டாய்!!
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எழிலோடு என் உளம் புகுந்து ஆடுகிறாய்!
உன் வழிதானே எனை என்றும் போக்குகின்றாய்!
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
வண்ண மலர் உண்டு !!வருடும் காற்றும் உண்டு!!
வெள்ளி அலை மேவும் வேலவனே!!
எங்கும் "இசை" ஒங்க எழுதுகிறேன்!!
தங்கும் என் பாடல் தரணி எங்கும்!!
உனைப்பாடும் தமிழ் பாட்டில் வலிமை வரும்! அது
ஏகத்தின் பெருமை சொல்லும்!! அகத்தின் அழுக்ககலும்!
முகத்தில் ஒளி பெருக்கும்!!
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எங்கும் உனைப்பாடி நான் உயர்வேன்!
தங்கும் உணர்வோடு என் உளம் புகுவாய் !!
கந்தா! கடம்பா! தணிகாசலனே! தாங்கி
எனை உயர்த்தி சிவம் சேர்ப்பாய்!!
தமிழ் இருக்கும் காலம் வரை நான்
கவி எழுதி புகழ் பெறவே .....
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
எனை என்ன செய்தாய் ஆறுமுகா?
No comments:
Post a Comment