எனக்கான பாதை எது ?
இருளா? ஒளியா? எது அதிகம்?
எனக்கான பாதை எது?
என் மனதிற்குள் வலிகள் அதிகம்!!ஆதிக்கம் அதிகம்!!
வலிக்கு மருந்து இல்லை!!
நானாக அமைக்கவில்லை !!
தானாக வந்ததா? தெரியவில்லையே!
யாரை நம்பி நான் ? என்னை நம்பி யார்?
யாரை அழைப்பது? இது எனக்கான பாதை!!
வாழ்ந்து முடிக்க வேண்டும் !! வலிய மனதோடு!!
எனது வழியில் உறுதியோடு!!உண்மையோடு!!
-------------------------
உயிரும் உயிரும் ஒன்றாகி உருகும் நேரம் இது !!
ஆசை ..பசித்திருக்க...சூடும் எண்ணம் இல்லையா?
இதழும் இதழும் பாடும் பாடல் எது?
உரிமையில் பழகி ..தவிப்பது தொடர் கதையா??
உன் குறும்புகள் வளர...எனை மறந்தேன்!!
பகலிலும் கனவு..!! உன் நினைவினில் நாளும் போகுதடா!!
தந்தன தந்தன தாளம் வருமா?
இருபதில் தொடங்கி அறுபதில் வளரும் நம் காதலடா!!
கண்மூடி தூங்கினாலும் தீயாக நீ!!
பெண் இன்றி ஏது வாழ்க்கை?? எல்லாம் பெண்தானே!!
புரியாதா!!??
என்காதலை நான் பாடவா?
நெஞ்சினில் ஆயிரம் தாளம்!!
உயிரும் உயிரும் ஒன்றாகி உருகும் நேரம் இது !!
அருகில் வந்து என்னை அள்ளிக்கொள்ள ஆசை இல்லையா ??
உன் நினைவில் உலகே வெறுக்குதடா!!
------------------------------------
நாளும் மறந்தேன்!! உன்னை தேடி அலைந்தேன்!!
நினைவெல்லாம் நீயாக!!
உன் அன்பை ரசித்து...சொல்லை ரசித்து
செயல் எல்லாம் ரசித்து ..ரசித்து..என்னை மறந்தேன்!!
காலிலே சிறகு இல்லை..பறந்துவர..
உயிர் தீயை உணர்ந்தேன்!! என் உருகும் உள்ளம் நீ
உணரவில்லை !!
முத்தமிட துடிக்கும் உதடும் உலருதே!!
கனவுகள் சுமந்த இமைகள் ..
உன் கையேடு கை சேர காத்து நிற்க ..
மனம் வாழும் மல்லிகையே வா!! வா!!
தென்றலாகி எனை தாலாட்ட வா! வா!!
உன் மடியில் எனை மறப்பேன் நானே!!
கற்பனையில் நான் சஞ்சரிக்க...
ஒப்பனையில் நீ இருக்க...
நாளும் மறந்தேன்!!பெண்ணே!
இன்னும் விடியவில்லை!! கனவுதானோ ??
---------------------------------
நான் பார்த்தவுடன்..இதயத்தில் நுழைந்து விட்டாய்!!
நீ பார்த்தவுடன்...என் இதயம் காணவில்லை!!
கொடுத்துவிடு!! மனதில் நிலைத்துவிடு!!
உன் பெயரும் தெரியாது..!! கவிதையோ நீ !!??
நீயும் என் கவிதையும் என்றும் கற்பனையில்!!
----------------------------------------
No comments:
Post a Comment