Thursday, March 31, 2011

01 04 2011 thokuppu

http://kavithaisasikala2000.blogspot.com/

எண்ணத்தில் வந்த கவிதை எல்லாம்
புன்னகைக்கும் பொய்யோடு!!
இல்லாததை சேர்த்து சொல்லி அழகாக்கும்!!
கார்முகில் குளிர்ந்து மழையாக
வருவதுபோல !!
-------------------------


பூ வொன்று பூத்தது!!
மொட்டுக்கள் யாவும்
இதழ் விரித்துச் சிரித்து
மணம் வீசி வாழ்த்து சொல்லுதாம்!!
------------------------------

நீ வரும் வரை காத்திருந்து
நனைவேன்!!மழையே!!
உன் ஜோடி பெண்ணோ?
அவளோடு சேர்ந்து நனைய ஆசை !!
அனுப்பேன்!!
---------------------------

விழியால் வருடி
விரலால்தீண்ட மாட்டாயா?
விலகி சென்று என்ன கண்டாய்!!
நீ தொடுவாய் என்றால் நானும் சிலையாய்
நிற்பேனே!!
------------------------

தாயின் கருவில் உயிராகஉதித்து ,
பிறந்து .. மழலையாக.. சகோதரியாக..
தோழியாக.. இல்லறம் காணும் மனைவியாக..
கணவனுடன் மகிழ்ந்து தாயாகி ....மாமியாகி ...
எத்தனை... கோலங்கள் போடுகிறாய் பெண்ணே!
----------------------

இதயத்தை திறந்து வைத்தேன் ..அதில்
இனிமையை கொட்டி வைத்தேன்!!
கடுமையை குறைத்து விட்டேன் !
என் கவலை குறைந்ததடி தோழி !!
உதயத்தை தேடுகிறேன் !! அவன்
உள்ளத்தை நாடுகிறேன் !!
கவிதைகள் பெருகுதடி !! என்
கற்பனை விரியுதடி ..தோழி!!
காணவும் முடியவில்லை ! பேசவோ துணிவும் இல்லை !
என் நிலை எடுத்துரைக்க யாரும் இல்லை! ! யாரும் இல்லை!!
என்னவன் மனம் அறிவேன் !! அதில் நான் உண்டு …
பேசி களிக்க மனம் துடித்தாலும்
தயக்கம் தான் கொல்லுதடி தோழி!!
இதயத்தை திறந்து வைத்தேன்..அதில்
இனிமையை சேர்த்து வைத்தேன்!!
படுத்தாலும் தூக்கம் இல்லை!!
உணவு எடுக்க மனமும் இல்லை!!
“திமிர் அழகி ” என்றானே !! கோபமா ? சாபமா ?
அமாவாசைக்கு மாடிக்கு போகாதே !!
பௌர்ணமி வந்ததோ என மக்கள் ஏமாந்து போவார்கள் என்றானே!! என்னை பார்த்து!!
நல்ல செயலும் சிந்தனையும் தான்
உண்மை அழகு .. புரியாதா ???
---------------------------------

பிறந்த குழந்தையின்,
உடலுக்கு உயிரையும்,
மனதிற்கு அன்பையும்,
தன் ரத்தத்தை பாலாக்கி
இரு "தனம்" தந்தாய்!!
பண்பையும் படிப்பையும் உணவோடு
சேர்த்து தந்தாய் .. தருகிறாய்!
ஊன்றுகோலாய் இருந்து,
வெற்றி கிட்ட சொல்லி தருகிறாய் !!
பலன் ஏதும் வேண்டாது நீ இருக்க
படித்து பட்டம் வாங்கி கை நிறைய
சம்பாதித்தும் உனக்கு என்ன செய்வேன் அம்மா?
உனக்கு சமம் கடவுளும் இல்லை !!
-------------------------------

சிருமுகிலாய் சிகை ஆட –அதில்
சிறு முல்லை சிரித்தாட …
சிறு பொட்டும் சேர்ந்தாட
கண்களிலே கயல் ஆட
முன் அழகில் இரு முயலாட ..
அவள் சிற்றிடையும் சேர்ந்தாட
முகம் பார்த்து மூவுலகும் ஆட
இள நகையில் நான் ஆட
தளுக்கி மினுக்கி தளிராக
தங்க சிலை வந்தாளே !!
கண்டதும் எனை மறந்தேன் ! இழந்தேன் !!
ஆடும் மனம் அவள் பின்னால் ..
எனை கொன்றாள் தன்னாலே !!
என்ன சொல்வேன் ? என்ன செய்வேன் ?
---------------------------

எங்கும் கவிதை...எதிலும் கவிதை
என் சொற்பூக்கள் நெஞ்சில் பதிந்து
மனதில் நிறைந்து ... லயித்து
கருத்தில் புதைந்து... படிக்கும்போது
கிடைக்கும் ஓசைதான்
என் எழுத்தோசை!!
--------------------------------

தேவதை எங்கே என் தேவதை எங்கே?
கண்களை மூடினாலும் நீ!!
கனவிலும் நீ! விழித்து
காணும் பொருள் எல்லாம் நீ!
தேவதை எங்கே என் தேவதை எங்கே?
மனமும் உடலும் குளுர்ச்சியாக்குவது நீ!
என் உயிராகி உறவாகி நின்றவளே!!
நீ பேசாத ஒவ்வொரு நொடியும் நரகமாக ...
என் உலகே நீ தானே!
தேவதை எங்கே என் தேவதை எங்கே? எங்கே ?
என் ஆன்மா மௌனமாய் ...உன் நினைவோ சுனாமியாய்!!
மண்புழுவாய்த் துடிக்கும் என் மனம் "மணம்" நாடுதே!!
நிர்மல மனம் ....நிம்மதி இன்றி மரண வலி இது தானோ?
----------------------
படுக்க மட்டும் பெண் இல்லை !!
பிள்ளை பெரும் மிசின் இல்லை பெண்!!
டௌரி கேட்டு கேவலபடுத்தும் ஆண் வர்க்கம் ...
அதற்க்கு துணை போகும் அம்மா வர்க்கம்!!
பணம் சேர்க்கும் மனசுக்கு திருமணம் எதுக்கு?
காதலிக்க ஒருத்தி!! கல்யாணம் செய்ய ஒருத்தி!!
இளம் மனம் ஏலம் போகிறதே!!
என்று திருந்தும் இந்த மனம்?
இன்று மனைவி...நாளை தாய் ..பின் மாமியார்..
.பெண்ணுக்கு பெண் தான் எதிரி!!
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று அழியும் இந்த பெண் அடிமை மோகம்?
------------------------------------------
பெண்களின் பார்வைக்கு அர்த்தம் புரிந்தால்
ஆண்கள் வேலை மிச்சமாகி விடும் !! ம்ம்ம் …
ஆண்களின் பேச்சும் பார்வையும் நேர்மையா?
அதிகம் இல்லை !!?? பெண் மனம் படும் பாடு
யாருக்கு புரியும் ??
குணா குன்றாம் ஆண்கள்…ஐயோ ….!!
இருமனம் ஒன்றினால் தான் அன்பு , நட்பு , காதல்
எல்லாம் ?? கனவுகள் இல்லாத கண்களும் இல்லை....
உறவுகள் இல்லாத உயிரும் இல்லை...
பிரிவுகள் இல்லாத உறவுகள் இல்லை...
இதயமும் இல்லை...!!!!
உன்னிடம் சொல்ல முடியவில்லை
என் காதலை...என்ன செய்வேன்??
புரியாமல் பெண்ணை பேசி என்ன பயன் ?
மல்லிகை மணக்கவில்லை !! நீ என்னிடம்
இருந்தால் காகித பூவும் மணக்குமே!!
----------------------------------------------

1 comment: