Friday, January 28, 2011

thoughts 28 01 2011

வயலுக்கு களைகள் கேடு !!
மனிதனுக்கு ஆசைகள் கேடு !!
துருவே இரும்பை அரிக்கும்!!
தப்பான செயல்தான் மனிதை அழிக்கும்!!
நாம் செல்ல வேண்டிய வழியை முதலில்
அறிய வேண்டும்!! முயல்வோமே!!
----------------------------

பெண் தேவதைகளே..வளர்ந்த கண்களே
ஆள் பாதி!! ஆடை பாதி !! உங்கள் பார்வையில் வீழ்வது ஆண்தானே!!
அசத்தும் அங்கம் தெரிய குறைந்த உடைகள் !!
சுடியும் ஜீன்சும் கை இல்லா டாப்சும்...
எடுப்பாய் இடுப்பு!! திமிரும் முன்னழகு!!
கண்களுக்கு விருந்து வைத்துவிட்டு காதலுக்கு கதவடைப்பு
செய்வது நியாயமா!! ஆண்கள் என்ன பாவம் செய்தோம்??
பழுதடைந்த நெஞ்சமுடன் பரிதவித்து காத்து நிற்போம்!!
----------------------
 
கண்ணே!! காகிதத்தில் உன்னை எழுதிய கவிதை
கரையானுக்கு!!
என் கையில் உன் பெயர்!!நான் இறக்கும் போது மண்ணோடு..!!
கண்ணே!!நீ காட்சி பொருள் அல்ல !!
தோன்றிய இடத்தில் எழுதி வைக்க!
என் உயிரோடு கலந்து நிற்கும் நீ
நான்
இறக்கும் வரையாவது என்னோடு இருப்பாயே!!
அது போதும்..அது போதும்!!
------------------------
 
பிறர் கேலி செய்தபோது முறைத்து..
பார்க்காதது போல் செல்கிறாய் !! தடயமின்றி..
ஆனால் என் இதயம் மட்டும் எக்ஸ்பிரஸ் வேகத்தில்
துடிக்கிறதே ...அது ஏன்? உன்னிடம் என் இதயம் இருப்பதாலா!!
சொல்லிவிட்டு போயேன் !!கல் மனது கடன்காரி!!
--------------
வெளித்தோற்றத்தில் வரும் காதல் சில நாளே!!
உள் மனதில் குடிகொண்ட காதல் சாகும் வரை தொடரும் !
மோகத்தில் வளர்ந்து முத்தத்தில் தொடர்ந்து..
கணவன் மனைவி என தொடர்ந்து..வாழும் காதல்!!
---------------------
 
பசியோடு வந்தவர் பசியாறி போவார்!!
பகையோடு வந்தவர் உறவோடு சேர மாட்டார்!!
அன்புக்கு தலை வணங்குவோம் !! அதிகாரத்திற்கு அல்ல !!
சிங்கம் என்றும் சிங்கம் தான் !! அறிவை வளர்ப்போம்!!
ஆறுதல் தருவோம்!! ஆதிக்கம் அல்ல !!
இணைந்து நிற்போம் நட்போடு!!
இறந்த பின்பும் புகழோடு வாழ இப்போதே முயல்வோம் !!
வாரீர் தோழர்களே!! தோழிகளே!!
----------------
நால்வேதம் அறிந்து ஓதும் அறிஞரோடு
நவமோடு ஐம்புலனும் தானடக்கி
நன்மை நாடும் மனதோடு தான்
செய்யும் செயல் யாவும் சிறந்திட
முயல்வோர் தம் மூளையாக நடம் புரியும் நா மகளே!!
நீ எனை நீங்காதிரு!! உன் பாதம் அடைக்கலமே !!
------------------------
 
விண்ணில் விளையாடும் நிலவோ? வருடும் தென்றலோ?
கள்ளிருக்கும் இதழோ? என் உள்ளிருக்கும் உயிரோ ?
உன் விழி மலரோ? எழில் நளினமோ ? காதல் மழையோ ?
உறவென நீ வாராயோ? சிறகென என் நெஞ்சம் பறக்க ..
எனதாசைகள் என்றும் உன்னிடமே !!
என் வாழ்க்கை என்றும் உனதுதான்!
உரைக்க ஏதும் இல்லை என்னிடமே!!
என்றும் பவுர்ணமிதான் நீ வந்து விட்டால்!!
உனக்காக சேமிக்கும் முத்தங்களை...என்று வாங்க வருவாய்??
இப்படியே..வர மாட்டாயா? ஏங்குதடி என் உள்ளம்!!
--------------------------
 
என்பு தோல் ஊணொடு நரம்பும் செவ்விள நீரும் காற்றும்
பண்பு இல மனமும் தேவை தேவை என தேடி தேடி சேர்த்ததெல்லாம்
நமன் வருங்கால் நமை நாடுமோ? இதை எல்லாம் எண்ணி துணிந்து ஏற்றம் கண்டு அன்போடு அன்னம் பிறர்ர்க்கு அளித்து அமைதி கொள் மனமே!!
-------------------
என் பேச்சு எல்லாம் இசை!!
நடந்தாலும் இசை...
அசைந்தாலும் இசை!!
விழித்தாலும் இசை! விழுந்தாலும் இசை!!
பேச்சு எல்லாம் இசை ...என்றானே...எதற்கு?
இசைவதற்கா??
தலை முதல் கால்வரை எல்லாமே அழகு..அழகு
என சொன்னானே!! அதுவும் பொய்தானே!! அழகு நிலைக்குமா?
நிலையா ஒன்றை அழகு என்றால் அது நிஜமா??
பாசமா? வேசமா? ஆசையா? ஆர்வமா? என்னை அறிந்து கொள்ளும் வேகமா? இது விவேகமா?
----------------
உன் அழகு நீ நிற்கும் போது காட்டும் கண்ணாடி உருவம் அல்ல!!
உணர்ச்சி கவி நான் சொல்வேன் மலை அளவு !! நீ தரும் இம்சைகளை!!
--------------------
மகளே!! ஒரே நாளில் பிறந்து மலர்ந்து மனம் பரப்பி
சிகைக்கும் சீருக்கும் சிறப்பளிக்கும் மலர் என்ன சொல்கிறது??
போராடி போராடி முன்னேறு!! புகழ் சேர்த்து விண் ஏறு !!
நம்பி செய்தால் நலம் வருமே!!
தூங்கி வழிந்தால் துயர் மிகுமே!!
துணிந்து விடு!! பணிந்து நட!! பாரெல்லாம் உன் பக்கம் வரும் !!
தாயின் கதகதப்பில் இருக்கும் குழந்தை போல்
உன் நினைவின் கதகதப்பில்
வாழ்கிறேன் என்றும்..என் மகளே!!
--------------------------
ஆவணி மாசம் அக்கா பொண்ணு தாவணி போட்டா தகதகன்னு!!
ஏணி போட்டு ஏறிபுட்டா பரணி மேல!!
இறக்கி விட ஏங்குதடா என் மனமே!!
மேலிருந்து ஒரு சாக்கு மூட்டை எடுத்து போட்டா என் மேல தான் ..
அதிலிருந்த மொளகா விதை கொட்டி போச்சுடா!!
ஆசை வச்சு அண்ணாந்து நின்னேன்!!ஐயோ!! கண்ணெல்லாம் எரியுதடா!!
கலைவாணி பய புள்ள!! கண்டுக்காம போறாடா!!
இவள கட்டிக்க மனசு வச்சேன்!! ரெண்டு வருஷம் சுத்தி சுத்தி வந்தேன்..
என்ன ஏமாத்தி பூவாலா?? என் மனசு வேகுதடா!!
குச்சி கட்டி கூட நின்னேன்!!குறும்புக்காரி மண்டையிலே கொட்டி புட்டா!!மச்சு வீடு கட்டி உள்ளே அவளோடு குடித்தனம் செய்ய ஆசை பட்டேன்!!
மாமான்னு சொன்னாளே!! என் மனச புடிங்கிட்டாலே !!
எம்மக பத்தரை மாத்து தங்கம்னு அக்கா சொன்னா!!
அதான் ஒரசி பாக்க வந்தேண்டா!!
கண்ணுக்கு மொளகா வித தூவிட்டாலே!!
ஆவணி மாசம் அக்கா பொண்ணு தாவணி போட்டா தகதகன்னு!!
இழுத்து வச்சு முத்தம் தர வந்தேனே!! கண்டுக்காம போறாளே!போறாளே!
-------------------------------
 
இரு மனமும் இரு உடலும் உறவாகி
ஒன்று ஆகும் ஓர் நாளே திருமணம்!!
நட்போடு சுற்றம் எல்லாம் சேர்ந்து வாழ்த்துரைக்க
பெற்றோரின் பெருங்கனவும் திருமணம்!!
வளர்த்து எடுத்து ...வாழ்க்கை பாதை
தொகுத்து அளித்து களிக்கும் பெற்ற
இருமனம் !!அந்தநாளே திருமணம்!!
இரு மனதின் சங்கமம்!! அதற்கான
"கனி" தினம் தான் திருமணம்!!
எங்கோ பிறந்து..எங்கோ வளர்ந்து
உடலோடு ..உள்ளம் சேர்க்கும்
உல்லாச உயர் தினம்!!
தனக்கு என்று தமக்கு என்று
"தனி உலகம்" வார்க்கும் அந்த
மன தினம்!! மண தினம் !!
திருமணம்!!திருமணம்!!
-------
உதிரத்தை உணவாக்கி ஊட்டி தினம் வளர்த்த அன்னை!!
கல்வி..கேள்வி சிறந்திடவே காலமெல்லாம் "வேள்வி" கண்ட பாசமிகு தந்தை!!
வளர்ந்து " வருமானம்" பார்த்த பின்னே ...
தனக்கென்று தனி கணக்கு!!
பாசமும் பங்காச்சு !! நினைவாச்சு!!
கண்டபோது...தனி பேச்சு!!
இருக்கமுடன் இடைவெளியும் பெரிதாக ...
மடை உடைந்த வெள்ளமென மனக் கவலை
பெற்றோருக்கு!!
இதுதான் விதிப்பயனோ?????
-----------




அடிக்கரும்பு எனக்கு என்றும் என்னவளே நீ தானே !!............
சொல்லாடி...சொல்லாடி 2+1 சுவை சேர்த்தான்!!
இடிக்கரும்பும் இன்பம் தான் ...இழுத்தெடுத்தாள் !!
இன்பம் சேர்க்கும் காலம் இது!!
விலகாதே!! விலகாதே!!
ஒருவருக்குள் ஒருவராகி ....ஒவ்வொரு நாளும்
போராட்டம்! போராட்டம்!! தேரோட்டம்!!
தெவிட்டாத "தேன்" ஆட்டம்!!
தன் வீடு!! தன் குடும்பம் !! தனி மகிழ்ச்சி!!
தன் பிள்ளை !! அவர் வளர்ச்சி!! அது என்றும் மனக்குளிர்ச்சி!!

No comments:

Post a Comment