முள்ளாய் குத்தும் தடைகள் எல்லாம் முட்டி எறிவேன்!!
ஜோடிக்கிளி சொல்லாமல் போக ...
ஆடி களித்திடுமோ அசந்த என் மனம்??
செம்மொழிதான் என் காதல்!! வள்ளுவன் குறள் போல் ..
வாழ்வு வேண்டி தினம் தினம் தேடி தேடி
உன்னை சேர்ந்தேன் என் உறவே!!
விடிய விடிய உன் "உண்மை மனம்" காண ..வந்தேன்..
சொல்லித்தரும் பாடம் அல்ல!! சொந்தம் இது!! சொர்க்கம் இது!!
கெட்டிமேளம்..நாதஸ்வரம்..கேட்கும் நேரம் என்று வரும்??
பக்கம் நின்று பவனி வரும் பந்தம் என்று என் சொந்தமாகும்??
விடியும் போதுதான் என் மனசு தூங்கும்!!
இன்பம் என்பது நம் இருவர் உரிமை!!
சந்தோசம் பொங்க சங்கீத வானில் மிதப்போமா?
ராத்திரிகள் வந்துவிட ..சாத்திரங்கள் ஓடி விடும்!!
நளினம் ..ரசனை.. ஓங்க ஓங்க.. தூக்கமும் வருமோ??
பெண்களின் முல்லை சிரிப்பாலே ஆண்களின் மூர்க்கம் தீர்ந்ததா?
செல்போன் பேச்சும் sms தொடரும் "காதல்" வழிதான்!!
அதுவும் திருமணம் வரை தான்!!
அதன் பின் அவனுக்கு தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தாய் சொல்லை தட்டாதே!!வேதமாகிவிடும் ...
டாவ்ரிக்கு மட்டும்!!அவன் குடும்ப வளமைக்கு மட்டும்!!
இதில் சமத்துவம் ஏது?? ஏது??
தென்றல் என என்கவிதையாலே உள்ளம் திறந்தேன்!!
என்னில் உன்னை கண்டு என் உயிர் வளர்த்தேன்!!
என் மௌனம் உன் "ஒரு வார்த்தக்கு" அலைகிறதே!!
இது உட்சவமா? உதாசீனமா?
ரோஜா பூ தோட்டம் !காதல் வாசம்!!
எல்லாம் மௌன ராகம் ஆகுமா!!
என் விழி அசைவில்.. இதழ் அசைவில்.. இடை அசைவில் ..
வியந்து வியந்து வீழ்ந்த உன் மனம் பொய்யோ??!!காதலோ இது!?
இரவும் பகலும் உன் விழியில் கண்டு என் காதல் வளர்ந்ததா?
உறவுகள் கடந்து.. உரிமைகள் விட்டு..சாதி மதம் கடந்து..
உயிர் என நம்பிய என் காதல் வளருமா? வாழுமா??
உடல் உழைப்பு இல்லை! மூளை உழைப்பில்
உயர்ந்தோமா? தாழ்ந்தோமா?
நாற்பது வயதுக்குள் நான்கு ஆயிரம் உபாதைகள் !!
ஹார்மோன் வேகமா? காதல்? நழுவலும்..
கை கழுவலும் ஏன்? ஏன்?? எது காதல்? வர்ண கனவா?
ஒருவரி ஒருவர் தேடி தெளிந்தொமா? தேர்ந்தோமா ?
வாழ்வோமா? வளர்வோமா? மயங்குதே என் மனம்!!
No comments:
Post a Comment