Wednesday, January 19, 2011

மனதில் உள்ளது one

மலர்ந்த முகமும் குளிர்ந்த பார்வையும்
உணரும் ஞானமும் சிறந்த சொல்லும்
பரந்த நோக்கமும் அகலாது இருக்க
அருள் சேய் அருவே! குருவே !
என்னுள் உரை ..ஆணை !!!


நல்லாரும் நயந்தாரும் நன்மை சொல்ல வல்லாரும் வளர்தாரும் எல்லாரும் நீயே!!
என்னுடையது என்பது எதுவும் இல்லை!!
ஆணவ கர்ம மாயை ஐம் புலன் அதனின் சேர்க்கை..நன்று தீது என்று வேறு எங்கும்
இல்லை !! உணர்வு உருவாகி உள்ளம் செம்மை பேரின் நீயே நானாய் நானே நீயாய்
மாறுதல் எக்காலம் ?காதல்
உன்னிடம் அழகில்லை என்றால் என்ன
உன் பார்வையில் அழகிருக்கும்,
உன் பேச்சில் அழகிருக்கும்,
உன் அறிவில் அழகிருக்கும்,
உன் நடையில் அழகிருக்கும்,
உன் பண்பில் அழகிருக்கும்,
உன் பணிவில் அழகிருக்கும்,
உன் பாசத்தில் அழகிருக்கும்,
உன் நேசத்தில் அழகிருக்கும்,
உன் காதலில் அழகிருக்கும்,
உன் அன்பில் அழகிருக்கும்,

இதில் வராத காதல்....
அழகில் வந்தால்,அது காதலில்லை!!



உன்னுடன் பழகிய சிறிது நாட்களில்
நீ ஏன் போனாய்?நட்பில் என்றும் வரிசை கிடையாது .....சகித்து கொள்!!!வேறு வழி இல்லை
பொய் யாகிலும் எனக்கென சொல்
நீ தான் முதல் நட்பு என்று
அது போதும்
என் கண்ணீர் காய்ந்து விடும் !!! உன்னை உணர்ந்தாயா? உட்பகை அறிந்தாயா?
"தான் என தருக்கி நில்லாதார் யார்? ஆனவும் அதுவே !
நன்றும் தீதும் நும் செயல் கர்மம் ! நில்லா உலகில் நிலைப்பது எது? புரியா
வாழ்க்கை "மாயை" தானே? தனக்கென சேர்த்து தன்னுடன் கொண்டு சென்றார்
உண்டோ? ஐம்புலன் ஆட்சி ...அனைவர்க்கும் வீழ்ச்சி !! உணர்ந்தவர் மீள்வரோ?
ஒன்பது வாசல் மூடுமோ? ஆளுமோ? ஏலுமோ? உணர்சியும் புணர்ச்சியும் உலகத்து
இயற்கை இயற்கை !எது சரி? உணர்வது உன் கடன்!!!!
வயசுக்குள் வுன்முறை....வருவதும் போவதும் யார் அறிவார்?
பிரேமானந்தா.!?நித்யானந்தா ?! அந்நாளில் விச்வாமித்திர!!!...
யாருக்கு இல்லை மூவாசை??? காவிக்குள் கலங்கும் மனம்!!!!! உணர்வுகள் உந்த
உள்ளதெல்லாம் போச்சே !!!சந்திரனில் சதிர் ஆட்டம் !!விஞ்ஞான உயர் ஆட்டம்
!! இதுவும் இங்கே ...!!! எது சதம்? ஏன்? எதற்கு? எடுத்து உரைப்பார்
யாரும் உண்டோ?
மனம் பட்ட காயம் மாறாது ...உடை அல்ல மாற்றுதற்கு .....இளமை உள்ளம் உணரட்டும் !!!


வழுக்கையும் நரையும் மூப்பும் பல் இழப்பும் BP, Sugar ம்
வாழ்வு முடிவு வரும் ..என்ற .எச்சரிக்கையோ?
நில்லா உடலை நிலை என்று எண்ணாதே மனமே!!
நாணயம், நேர்மை, இரக்கம், கருணை வளர்ந்து
வாழ்ந்து பார்க்க ஆசை வருமோ??
தமக்கென சேர்த்தது எங்கே ??
அளவோடு..நியாயம்..தர்மம் என பகிர்ந்து அனுபக்க மனம் வருமா?
செத்தாரை போல் திரி என்றான் பட்டினத்தான்!!
ஒன்பது வாசல் தோல் உடலை சதம் என நாம் அலைய
கழுகு தமதென்று சுற்றுவதோ??
எத்தனையோ நாள் சேர்ந்து நம் பெற்றோர் எடுத்த
அழகு சரீரம் இது !!
இருப்பது பொய்...போவது மெய்..உணராயோ??
காது அற்ற ஊசியும் வாறது கான் கடை வெளிக்கே!!
உணர்ந்து விடு...உன்னை உணர்ந்துவிடு..மனமே!!


"காதலின் தீண்டலால் ஒவ்வொருவரும் கவிஞராகிறோம்."

- பிளாட்டோ

"நான் அழகாக இருப்பதால் நீ காதலித்தாயா அல்லது நீ காதலித்ததால் நான்
அழகானேனா?"

- சிண்டரெல்லா

"காதலுக்கு காரணம் உண்டு. ஆனால், அந்தக் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாது."

- பிலாசே பாஸ்கல்

"காதல்... பெண்ணுக்கு வாழ்க்கை வரலாறு; ஆணுக்கு ஓர் அத்தியாயம்."

- ஜெர்மியின் டி ஸ்டீல்

"காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் மட்டுமே வாழ்க்கையின் ஒரே மகிழ்ச்சி!"

- ஜார்ஜ் சாண்ட்

"காதலர்களின் உதடுகளில் ஆன்மாவைச் சந்திக்கிறது ஆன்மா"
- ஷெல்லி

"போரைப் போன்றது காதல். தொடங்குவது சுலபம்; முடிப்பது கடினம்"
- யாரோ

என் கணவரை சந்திப்பதற்கு முன்பு நான் காதலில் விழுந்ததே இல்லை; ஆயினும் சில
முறை நுழைந்திருக்கிறேன்.

- ரிடா ருட்னர்

காதலுக்கு கண்ணில்லை; அந்தக் கண்ணை திறப்பது திருமணம்!
- பவுலின் தாம்ஸன்

"உண்மையான காதல் கதைகளுக்கு முடிவுகளே கிடையாது."
- ரிச்சர்ட் பாச்

No comments:

Post a Comment