Wednesday, January 19, 2011

ninaivukal 2 19 01 2011

மலர்ந்த முகமும் குளிர்ந்த பார்வையும்
உணரும் ஞானமும் சிறந்த சொல்லும்
பரந்த நோக்கமும் அகலாது இருக்க
அருள் சேய் அருவே! குருவே !
என்னுள் உரை ..ஆணை !!!


நல்லாரும் நயந்தாரும் நன்மை சொல்ல வல்லாரும் வளர்தாரும் எல்லாரும் நீயே!!
என்னுடையது என்பது எதுவும் இல்லை!!
ஆணவ கர்ம மாயை ஐம் புலன் அதனின் சேர்க்கை..நன்று தீது என்று வேறு எங்கும்
இல்லை !! உணர்வு உருவாகி உள்ளம் செம்மை பேரின் நீயே நானாய் நானே நீயாய்
மாறுதல் எக்காலம் ?காதல்
உன்னிடம் அழகில்லை என்றால் என்ன
உன் பார்வையில் அழகிருக்கும்,
உன் பேச்சில் அழகிருக்கும்,
உன் அறிவில் அழகிருக்கும்,
உன் நடையில் அழகிருக்கும்,
உன் பண்பில் அழகிருக்கும்,
உன் பணிவில் அழகிருக்கும்,
உன் பாசத்தில் அழகிருக்கும்,
உன் நேசத்தில் அழகிருக்கும்,
உன் காதலில் அழகிருக்கும்,
உன் அன்பில் அழகிருக்கும்,

இதில் வராத காதல்....
அழகில் வந்தால்,அது காதலில்லை!!



உன்னுடன் பழகிய சிறிது நாட்களில்
நீ ஏன் போனாய்?நட்பில் என்றும் வரிசை கிடையாது .....சகித்து கொள்!!!வேறு வழி இல்லை
பொய் யாகிலும் எனக்கென சொல்
நீ தான் முதல் நட்பு என்று
அது போதும்
என் கண்ணீர் காய்ந்து விடும் !!! உன்னை உணர்ந்தாயா? உட்பகை அறிந்தாயா?
"தான் என தருக்கி நில்லாதார் யார்? ஆனவும் அதுவே !
நன்றும் தீதும் நும் செயல் கர்மம் ! நில்லா உலகில் நிலைப்பது எது? புரியா
வாழ்க்கை "மாயை" தானே? தனக்கென சேர்த்து தன்னுடன் கொண்டு சென்றார்
உண்டோ? ஐம்புலன் ஆட்சி ...அனைவர்க்கும் வீழ்ச்சி !! உணர்ந்தவர் மீள்வரோ?
ஒன்பது வாசல் மூடுமோ? ஆளுமோ? ஏலுமோ? உணர்சியும் புணர்ச்சியும் உலகத்து
இயற்கை இயற்கை !எது சரி? உணர்வது உன் கடன்!!!!
வயசுக்குள் வுன்முறை....வருவதும் போவதும் யார் அறிவார்?
பிரேமானந்தா.!?நித்யானந்தா ?! அந்நாளில் விச்வாமித்திர!!!...
யாருக்கு இல்லை மூவாசை??? காவிக்குள் கலங்கும் மனம்!!!!! உணர்வுகள் உந்த
உள்ளதெல்லாம் போச்சே !!!சந்திரனில் சதிர் ஆட்டம் !!விஞ்ஞான உயர் ஆட்டம்
!! இதுவும் இங்கே ...!!! எது சதம்? ஏன்? எதற்கு? எடுத்து உரைப்பார்
யாரும் உண்டோ?
மனம் பட்ட காயம் மாறாது ...உடை அல்ல மாற்றுதற்கு .....இளமை உள்ளம் உணரட்டும் !!!


வழுக்கையும் நரையும் மூப்பும் பல் இழப்பும் BP, Sugar ம்
வாழ்வு முடிவு வரும் ..என்ற .எச்சரிக்கையோ?
நில்லா உடலை நிலை என்று எண்ணாதே மனமே!!
நாணயம், நேர்மை, இரக்கம், கருணை வளர்ந்து
வாழ்ந்து பார்க்க ஆசை வருமோ??
தமக்கென சேர்த்தது எங்கே ??
அளவோடு..நியாயம்..தர்மம் என பகிர்ந்து அனுபக்க மனம் வருமா?
செத்தாரை போல் திரி என்றான் பட்டினத்தான்!!
ஒன்பது வாசல் தோல் உடலை சதம் என நாம் அலைய
கழுகு தமதென்று சுற்றுவதோ??
எத்தனையோ நாள் சேர்ந்து நம் பெற்றோர் எடுத்த
அழகு சரீரம் இது !!
இருப்பது பொய்...போவது மெய்..உணராயோ??
காது அற்ற ஊசியும் வாறது கான் கடை வெளிக்கே!!
உணர்ந்து விடு...உன்னை உணர்ந்துவிடு..மனமே!!


"காதலின் தீண்டலால் ஒவ்வொருவரும் கவிஞராகிறோம்."

- பிளாட்டோ

"நான் அழகாக இருப்பதால் நீ காதலித்தாயா அல்லது நீ காதலித்ததால் நான்
அழகானேனா?"

- சிண்டரெல்லா

"காதலுக்கு காரணம் உண்டு. ஆனால், அந்தக் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாது."

- பிலாசே பாஸ்கல்

"காதல்... பெண்ணுக்கு வாழ்க்கை வரலாறு; ஆணுக்கு ஓர் அத்தியாயம்."

- ஜெர்மியின் டி ஸ்டீல்

"காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் மட்டுமே வாழ்க்கையின் ஒரே மகிழ்ச்சி!"

- ஜார்ஜ் சாண்ட்

"காதலர்களின் உதடுகளில் ஆன்மாவைச் சந்திக்கிறது ஆன்மா"
- ஷெல்லி

"போரைப் போன்றது காதல். தொடங்குவது சுலபம்; முடிப்பது கடினம்"
- யாரோ

என் கணவரை சந்திப்பதற்கு முன்பு நான் காதலில் விழுந்ததே இல்லை; ஆயினும் சில
முறை நுழைந்திருக்கிறேன்.

- ரிடா ருட்னர்

காதலுக்கு கண்ணில்லை; அந்தக் கண்ணை திறப்பது திருமணம்!
- பவுலின் தாம்ஸன்

"உண்மையான காதல் கதைகளுக்கு முடிவுகளே கிடையாது."
- ரிச்சர்ட் பாச்


அறிவோடு அழகோடு புதுமை யோடு

பதினாறு செல்வங்கள் தை நாளில் சேரட்டும்!!

முனைப்போடு முயலும் முறையான முயற்சி எல்லாம்

வெற்றியில் ஆடட்டும் !!

விட்டு கொடுத்து..ஒருவரை மற்றவர் புரிந்து..

இணைந்து ..இன்பமுடன் "நட்பு " என்றும் சிறக்கட்டும்!!

குறுகிய மனம் விரியட்டும்!!குற்றங்கள் குறையட்டும்!!

பொன்னாக ..பொலிவாக பொங்கல் முதல்

நிறைவான வாழ்வு என்றும் நிம்மதியை சேர்க்கட்டும்!!

இரும்பு மனம் இளகட்டும்!!கரும்பாக இனிக்கட்டும்!!

வளமோடு நலமோடு அன்போடு அருளோடு

பண்போடு பலகாலம் வாழ்திருக்க தை திருநாள் மலரட்டும்!!

பெண்களின் பெருமை விண் முட்ட பெருகட்டும்!!

வீடுயர நாடுயரும் !!நாடுயர நலம் பெருகும்!!

மனம் உணர்ந்து வாழ்க !! வாழ்க !!

சங்கரன் பொங்கல் சரியான பாதை வகுக்கட்டும்!!

வாழ்க!! வாழ்க!!

------------------------------
--------------------------

பழையன கழித்து புதியன புகுத்தி "போகி" கண்டு

தை தை தை தை என தை மகள் வந்தாள்!!

உவந்து உழுது ஊருக்கே சோறு போடும் உழவர்தம் திருநாள்!!

சேறு ஆடி நடந்து உழைத்து களைத்த கால்நடைக்கும் திருநாள்!!

காதலும் வீரமும் காளையர்க்கே!!

காலை அடக்கி வீரம் கட்டும் வீரர்க்கும் ஓர் நாள்!!

புதுப்பானை..புத்தரிசி.. பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி

ஊரோடு உறவோடு மனையோடு மக்களோடு மகிழ்ந்திருக்கும்

மங்கையர்க்கும் ஓர் நாள்!!

அரசு ஊழியர் அகம் மகிழ ஒரு மாத ஊதியம் அரசு தரும் இன்ப திருநாள்!!

சங்கரன் இன்றி எப்பயிர் வளரும் ??

நன்றி சொல்ல நாமெல்லாம் ஓர்நாள் சேர்ந்து கொண்டாடும்

"சங்கரன் பொங்கல்" திருநாள்!!

உலகளந்த தமிழ் வளர்த்த உத்தம தமிழனுக்கு

பெருமை சேர்த்த தமிழர் தம் திருநாள்!! பொங்கல் தானே!!


அன்புடன் என்றும் ....

சசிகலா
kavithaisasikala2000@gmail.com
-------------------------------
கடலின் ஆழம் ! ஊமையின் கனவு !! ஆகாய விரிவு!! மகளிர் மனம்!!
அறுதி இட்டு கண்டவர் உண்டோ? தீயினுள் சென்றது சாம்பல்!!
நல்வினையும் தீவினையும் வேறு வேறு எதுவும் வேண்டாதவருக்கு !!
நரை..திரை ..மூப்பு எல்லாம் நாறும் நம் உடல் அதற்கே!!
மூன்றும் ஐந்தும் நவமும் ஆட்டுவிக்க ...தன்னை உணர்ந்தவர்
யாரும் இன்று உண்டோ?
உடல்..பொறி..மனம் கடந்து "தன்னை உணரும்" ...உண்மை
உணரும் காலமும் வருமோ??
இவ்வுலகில் ஜனித்தன யாவும் சிவம் எனில் ஆண் பெண் பேதம் ஏது?
பக்குவமே பரமன் !!மன பக்குவமே பரமன்!! தேர்ந்து தெளிந்து விடு!!
சிவம் ஆகு!!
--------------------------------

அடர் பிடரி சிங்கம் !அழகு மயில் கொஞ்சும்!
யானைக்கு தந்தம் !! காளைக்கு திமில்!
குயிலுக்கு குரல்! சேவல் கூவி விடியும் உலகு!
அழகாக ஆண் இருக்க ...பெண் என்றும் குலம் பெருக்க....

சோம்பேறி இனம் என்றும் ஆண்தானே !!
உண்டுறங்கி ஆண் சிங்கம்!!
வேட்டை ஆடி வருவதென்றும் பெண் சிங்கம்!!
பேணி வளர்க்கும் "மனம்" என்றும் பெண் தானே!! தாய்மை தானே!!
உணர்ந்து போற்றும் மனமில்லா ஆரறிவே! ஆண் மகனே!
"அழகில்ல" பெண்களை என் தொடர்ந்தாய்??
வர்ணிக்க வார்த்தை இல்லை என சொன்னதும் நீ தானே!!
ஆண் என்ன? பெண் என்ன? இரு மனம் இணைந்தால் தான் வாழ்க்கை!! விலங்கும் அப்படியே!!
புரியாமல் பேசிவிட்டு காது வரை சிரிப்பதென்ன??

வம்பாடி சேர்த்து அணைக்க வந்து நின்றேன் பெண்ணே! கண்ணே!
குலம் காக்கும் பேரினம்தான்..பெண்மை !! அன்பே!
நீ இன்றி நான் இல்லை!!

போதும்... போதும் ...வார்த்தையாலே சாடி விட்டு ...
வழிவதென்ன? வண்டலூரா?!!
பெண் இன்றி ஆண் இல்லை...ஏன்? எதுவுமில்லை!!!

ஹி! ஹி! ஹி! ஹி! ஹி! ஹி!
வம்பு வேண்டாம் வா கண்ணே!!
----------------------------
மாமன் மாமி ....உனக்கு தாய் தந்தை ஆகணும்!!
அது உன் வீடு! உன் குடும்பம்!!
அவுங்க பொண்ணு நீ ஆகணும் !!
அறியாக் குழந்தை என வளர்த்தோம் !!
அன்பு என்றும் உண்டு ..உணர்வாய் !!
உன் தாய் உனக்கு முதல் தோழி கண்ணே !!
தயங்காமல் சொல்லிவிடு முன்னே!!
எது சரியோ செய்து விடு!!அரவணைத்து அன்னமிடு!!
தயங்காமல் விட்டு கொடு!!! தாய் ஆகு ...தாயாகு !!
தனி சிறப்பு அது தானே!!
உன் கணவன் மனம் அறிந்து நடந்து விடு!!
உன் வாழ்வின் முதல் படிதான் "திருமணம்"!!
இணைந்து என்றும் கழிக்கத்தான் இரு மனம் !!
உணர்ந்து ஒன்றாய் ஆன பின்னே கனி மனம் !!
மரணம் வரை தொடர்ந்து வரும் "காதல் " தினம்!!
வாழ்க என்றும் அன்போடு!! வளம் பெருக்கி நட்போடு!!
--------------------------
உயிரோடு பிறந்தது மரிக்கும்!!
அறிவினில் பிறந்தது நிலைக்கும்!!
புதிதாய் வளர்வது அறிவியல் முயற்சி !!
நிலை இல்லா உலகில் அவை எல்லாம்
நிலைத்து நிற்பதென்ன?
மலைத்து.....மனம் மறக்க மறுப்பதென்ன ??
நேற்று---முடிந்த ஒன்று...
நாளை---நம் கையில் இல்லை!!
இன்று -- வாழும் சொர்க்கம் !!!
நிஜமும் கலையும் நம் நிலையை உயர்த்தும்!!
பழையன கழித்து புதியன புகுத்து!!
நிலைப்பது புகழே!! நீ உழைப்பது அழகே!!
-------------------------------
உலகெல்லாம் சுற்றும் !! உன்னதம் கக்கும்!!
உறவும் கூட்டும்!...முறிக்கும்!!?
வளமும் சேர்க்கும்...வாழ்த்தும் சொல்லும்!!
இன்பமும் துன்பமும் தரும்..!!!
ஆற்றலும் அருளும் !!!விண்ணும் சேர்க்கும்..
.மண்ணும் தள்ளும் !!!
ஒற்றை சிறகான "எங்கள் நாவே"!!!

தனக்கென சேர்த்தது எங்கே ? சேர்த்து மகிழ்ந்த உறவு எங்கே ??
பல்சுவை கண்ட உடலுமெங்கே ? உடன் வருமோ? உயிர் போன பின்னே?? வீடு வரை
உறவு!வாசலோடு மனைவி!
காடு வரை பிள்ளை!! உயிர் உடலுக்க? மனதுக்கா?
உருவம் இல்லா "உயிர் தான்" மனமா? எது உண்மை?
பிறந்தோம் ....இறப்போம் .....மீண்டும் பிறப்போமா??
நினைக்கும் மனம் எங்கே? உயிர் எங்கே??
சசிகலா----------------------
மண்ணில் பிறந்ததெல்லாம் மைந்தர் தாம்
விண் செல்லும் நாள் வரையில்!!
கண்ணில் கண்டதெல்லாம் சொந்தம்தான்
காடு செல்லும் நாள் வரையில்!!
வேறு என்று வெறுப்போமா ?
"குப்பை" குழந்தை தனை??!!!
சேர்த்து எடுத்து வளர்க்கும்
மனம் விண் தொடுமே!!!
குழந்தை தினம் கொஞ்சிடுமே!!
ஈடாய் ஏதும் எஞ்சிடுமோ?
--------------------------------------

சின்னஞ்சிறு கிளியே!! சிங்கார பூங்குயிலே!!
பொங்கும் சிரிப்பழகே! காந்த கண் அழகே!!
ஏழிசை சொல்லழகே !! முத்தே! முழு மதியே!!
கரம் பற்றி அணைத்திடவோ? முத்தாடி மகிழ்ந்திடவோ?
கனி இதழ் தேன் பருகி...காலமெல்லாம் உன் மடியில்
கண்னயர்வேன்!! அப்பா என அழைத்து ஆசை முத்தம் தாராயோ?
அம்மா அருகிருக்க அனைத்தும் மறந்தாயோ? என் நெஞ்சில் மிதித்தென்னை மழை என
உமிழ்நீர் பொழிவாயே !!
உலகம் மறந்தேனே என் கண்ணே!!
-------------------------------

“ஹார்ட் அட்டக்க்ன என்ன தெரியுமா?
ஒரு அழகான பொண்ணு உன்ன பார்த்த -உன் blood heat ஆகும்.
அவள் சிரித்தால் - உன் bp increace ஆகும்.
அவள் உன் பக்கதுல வந்தால் -உன் heart beat raise ஆகும்,
face வேர்க்கும் , நாக்கு உலர்ந்து போகும்.
அவள் தன்னோட அழகான lipச open பண்ணி……
“Anna , Ghandi Parkuku எந்த busla போகணும்னு
கேக்கும்போது உன் heartla “Dum” nu ஒரு satham கேக்கும்பார் ,
அதுக்குபேர் தான் heart attack.
-------------------------

சொர்க்கம் எனும் இடத்தில் நான் உன்னை சந்திக்காவிட்டால் அந்த இடம்
சொர்கமாக இருக்க முடியாது.....

எங்கோ பிறந்த உரமும், நிலமும், கலக்கின்றன வேளாண்மையில்...
எங்கோ பிறந்த நதிகள், கலக்கின்றன கடலில்...........
எங்கோ பிறந்த தங்கமும், பித்தளையும், கலக்கின்றன நகைகளில்...
எங்கோ பிறந்த பட்டும், நூலும், கலக்கின்றன புடவைகளில்...
எங்கோ பிறந்த கவிஞனும், தமிழும், கலக்கின்றன கவிதைகளில்...
எங்கோ பிறந்த நானும், நீயும், கலக்கின்றோம் நம் திருமணத்தில்...
----------------------------------------------
தென்றலே ஜாதியை மிக மேடையில் - உன் நாட்டியம் அரங்கேறும் ;
ரகசிய வாழ்கையை ரசிக்க வைக்கும் ;
மாதத்தில் ஒரு முறை மட்டும் முகம் காட்டிவிட்டு
முறையாகுமா.......வெண்ணிலவே ......
--------------------------------

உன் நிழலும் உனக்கு முன்னே !! உணர்ந்து விடு! "உயர்வுப்பாதை முயன்று எடு!!
நிழலாக நினைவுகள் உறங்காது!? உயிர் உள்ள வரை...
சில்லென்று இருப்பதும் சீறிசுனாமியாய் சினப்பதும் கடல் தான்!?

தனக்கு என தனி கூடு ...தானே கட்டும் இளம் குருவி!!
உனக்கு என சேர்த்து விடு...!!இல்லை எனில் உன்னை விட உயர்ந்து விடும் இளம் குருவி!!!


இலக்கு நோக்கி எங்கிருந்தோ மாறாமல் வரும் பறவை இனம்..இணை தேடி ..குளம்
பெருக்கி குதுகலமாய் சிலகாலம்!!!
சென்று...மீண்டும் வந்து...தொடர் கதைதான் !! இதை உணராமல் "பறவைகள்"
அழகென்று அகம் மகிழும் ஆரறிவே ..வேடந்தாங்களில்..
----------------------------


ஆண் என்றும் பெண் என்றும் இரு சாதி !!
இவ்வெண்ணம் வளர்ந்தாலே நீதி !!
மனித நேயம் ! மனிதன் மனிதனாக வாழ நம் முன்னோர் கண்ட முன்மொழிவுதான் "சாதி சமயம்!!
அடித்து சாதல் அறிவீனம்!
சாடிக்களித்தால் மதிஈனம் !!
நல்லதை ஏற்று அல்லதை நீக்கு!
உள்ளதை சொல்லி நல்லதை பேருக்கு..
வெட்டி சண்டை ...வீண் பேச்சு !!
விண்ணை தொடுமோ உன் பேச்சு?
அன்பாய் சொல்லி அரவணைப்போம்!
அனைவரும் ஒன்றே..!!!
மனம் வளர்ப்போம் வா!!
-----------------------------------


காதல் போதனை....வேதனையா? பூசித்த பூக்கள் சிரிக்க ...யாசித்தேன்...காதல்
வரம்... ? உன்னை பார்த்ததும் காணாமல் போகிறேனே ஏன்? கருத்து அழிந்ததா ஏன்
காதல்? ஏன் கவிதைக்கு கரு...தந்து விட்டாய்..
முத்தம் குடுத்தா குத்தாது ...
அரும்பு மீசை குறும்பு ஆகும்...அதிக மீசை முகம் குத்தும்...!!
மீசையில் வீரம் வராது!!..ஆண்மை மனதில் இருக்கும் ...மீசை அடையாளம் தான்..!!
மீசை இல்லா ஆணும் அழகு தான்..என்னைபோல !!
முத்தம் குடுத்தா குத்தாது .....
-------------------------------

"காதல்"
"காதல்"

காற்று வரத்தான் ஜன்னல் !! வானமாக நீ நிலவாக நான்!!
வான வில்லாக வந்தால் கைகோர்த்து நீ !! கனவில் தான்....
மழை என் கண்களில்...
"புயல்" வந்து ஜன்னல் உடைய.. முகாரியில் நான்...
"காதல்" கவிதையா? காவியமா? நீ தானே என் எழுத்தின் கரு!!
காற்றில் பறக்கும் சருகு அல்ல என் காதல்!!
இன்னொரு தாஜ் மகால்!!!
மனம் "பிரிந்து" உயிர் வாழ்தல் வேண்டுமோ? ஏலுமோ?
இனம் பழிக்க சேர்ந்தோம். குலம் சிறக்க வாழ்வோம் வா!!

ஊர எல்லாம் ஒளி .. இருட்டின் மிச்சமோடு நிலவாக மனம்.!!...
இரவுக்கு இருட்டும் இருட்டுக்கு இரவும் துணை..
மேகம் எல்லாம் தாகமாக..
மின்னல் கண்களில் களவு...
இடி ஒலியால் நிலவுக்குள் தீக்கோளம் !!
மனசாயம் வெளுத்ததோ? மண் மேல் மழை !!
மருண்ட மேகம் வெகுண்டு ஓடும்...காதலோ அதற்க்கு?

----------------------------------
வாழ்க்கை!!

அவன் : முழு மதியே! மனம் அமர்ந்த ரதியே! உன் கரு விழிகள் கவர்ந்து இழுக்க
"முன்னழகில்" மூர்ச்சை ஆனேன்..சிங்கார சிரிப்பழகி! அலுக்காத நடை அழகி
!!ஆசையோடு அள்ளி தினம் உன் மலர் "தனம்" வருடி..இதழ் தேன் பருகி வீணை என
உன் உடல் மீட்டி ...அழுந்த அணைத்து "அடி" வருடி -நகமாடி ..இதழ் பதித்து
..நாவாலே தேன் குடித்து .."இன்ப நிலை" ஏற வைத்து... ஏற வைத்து.....

காதல் என்பது தனித்த முடிவல்ல..!
குலையா மனமும் குலைந்ததடி...
அசையா மனமும் அசைந்ததடி !!
சொந்த பந்த நட்பு எல்லாம்
தூர நின்று சிரிக்குதடி.. காதலியே!
உன் பாதமெல்லாம் முத்தமிட துடிக்குதடி ...
கொள்ளாமல் கொஞ்சம் கொஞ்சமாய் வாட்டுகிறாய்..
காதல் என்பது தனித்த முடிவல்ல..
முடிவெடுத்து முழக்கி விடு..இளமையிலும் " கிழவனாக"
காத்திருக்கிறேன்......
தூக்கம் வராது ...ஏதேனும் படிப்பேன்..உனை மறக்க...
அதிலும் நீயா?
கண்களுக்கு ஓய்வு தூக்கம் ..கனவிலும் நீ வந்தால் உன்னை மறப்பது எப்போ? மரணம் தான்!!

என் இலக்கு நீ! இலக்கியமும் நீ !!
"இலக்கு இல்லா" வாழ்வினிலே...
இணை இல்லா துணை ஆவோம் !!!
ஈடேற்ற வருவாயோ?

நீ விரும்பி நின்றால் - என்னை நீ விரும்பி நின்றால்..
இமயமும் எனக்கு அடுத்த வீடு !!
பாராமுகமாய் நீ சென்றால் --விலகி சென்றால்
அடுத்த வீடும் எனக்கு அயல் நாடே!!

நாம் எந்தவித எதிர் பார்ப்பும் இன்றி அடுத்தவர் சந்தோசத்திற்காக விட்டு
கொடுத்து அன்போடு செய்யும் நல்ல செயல்களினால் வரும் புகழ்
நிலைக்கும்....அன்பே கடவுள்..அன்புதான் நிலைக்கும்..!!!

1 comment: