Friday, January 21, 2011

முகமூடி!! 21.01.2011

முகமூடி!!
---------
அம்மா தன குழந்தைகளை கண்டிக்க காட்டும்
கோபம் ஒரு முகமூடி!!
தனக்கு வேண்டியதை வாங்கிவிட வரும் குழந்தை
கொஞ்சி கெஞ்சல் முகமூடி!! அது அறியாமல் தாங்கி நிற்கும் முகமூடி !!
திருமணத்தில் அள்ளிகொட்டி ஆர்ப்பரிக்கும்
வறட்டு கௌரவமும் முகமூடி !!
BP ..SUGAR.. இருப்பவர்கள் உண்ணாமல் தட்டி களிப்பதும் முகமூடி!!
வாங்க காசு இன்றி வாய் திறந்து ஏங்கி நிற்கும் ஏழைக்கு வறுமை என்றும் முகமூடி!
தன் குலம் விளங்க வளம் சேர்க்க வாய்ப்பு தரும் அரசியலும் முகமூடி !!
ஓட்டளிக்க காசு வாங்கும் குடிமக்கள் "மனக்குறைகள்" என்றும் முகமூடி!!
படிக்காமல் பாஸ் பண்ண முயல்வோர்க்கு பல வழிகள் முகமூடி!!
விலை நிலங்கள் குறைந்துவிட உணவுப்  பொருளுக்கு  "விலை ஏற்றம்" முகமூடி!!
கோவிலுக்குள்  பக்கம்  வரும்  பெண்ணை  இடிக்க  ஆண்கள்  போடும்  பக்தி  வேஷம்  முகமூடி!!
காமத்திற்கு காதல் என்னும் முகமூடி!!ஆண் என்ன..? பெண் என்ன?
காம களியாட்ட சந்நியாசி தளிராக போட்டு உலவும்
" காவி" என்றும் முகமூடி!!
வயது வந்த பெண்கள் வீட்டில் இருக்க..
அம்மா என்றும் விலகி போதல் முகமூடி!!
தன மன ஆசைக்கும் அவள் வைத்த வேட்டு!!
வெளித்தெரியா குமுறலோடு உலவி வரும்
அப்பா அடக்க முடியா ஆசையுடன் ...!!??
"அன்பு" என்றும் இவர்களுக்கு முகமூடி!!
இதை எல்லாம் பார்த்தான் இறைவன்!! கல்லாகி போனான்!!
வேண்டி நிற்கும் பக்தர்க்கு எல்லாம் எந்த தெய்வம் தந்ததடி தோழி??
வேண்டுதலும் "முறையாய்" இருந்தால் மூடிய "இறை" கண்ணும் திறவாதோ?  பாராதோ? இந்த "இறுக்க மனம்" இறைவனுக்கும் முகமூடியோ ?? சொல்லடி ..தோழி...!!
SASIKALA
21.01.2011

No comments:

Post a Comment