Sunday, February 13, 2011

காதல் காவியம் 14 02 2011 என் காலம் ஓடும்!!

அவள் :
நீ இன்றி வாழ்வது லேசில்லை !! கண் முடி படித்தாலும்
கனவெல்லாம் நீ தானே கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!
தூங்காமல் நாள் எல்லாம் பாழாக .....
உன் நினைவு மட்டும் என்னை சிதைக்கிறதே!!
நீ இன்றி வாழ்வது லேசில்லை !! கண் முடி படித்தாலும்
கனவெல்லாம் நீ தானே கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!
உடல் சேர்ந்து உளம் காணும் உன்னத திருமணம் தான் எப்போது??
நம் மனம் சேர்ந்து "திருமணம்" காண
உறவெலாம் வருமே! வாழ்த்துமே !!
நீ இன்றி வாழ்வது லேசில்லை !! கண் முடி படித்தாலும்
கனவெல்லாம் நீ தானே கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!
அவன்:
உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனே!!
பெண்ணே! உன்னை பார்த்ததும் என்னை இழந்தேனே !!
தேனாட்டம் இனிக்கும் உன் இதழும் கள்ளாய் போனதோ?
போதை ஏறி என் சொல்லும் ஆடுதே!!
அப்படி இப்படி இடுப்பை ஆட்டி என்னை கொல்லாதே!
குனிஞ்சு நிமிர்ந்து "குளிர்ச்சி" காட்டுற!!
என் மனமும் உடலும் குளிர்ந்து போனதே!!
நீ இன்றி வாழ்வது லேசில்லை !! கண் மூடி படுத்தாலும்
கனவெல்லாம் நீ தானே கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!
நம் கண்ணுக்குள் நெஞ்சுக்குள் மாற்றம்!!
கனவில் காதலில் ஏற்றம்!!
சொந்தமாக நீ வந்து விட்டால் கொஞ்சி மகிழ்வேனே !!
உடலில் உணர்வில் ஏக்கம் !! இதான் காதலா?
100 ஆண்டுகள் வாழ்வோமே நாமே!!
நீ இன்றி வாழ்வது லேசில்லை !! கண் முடி படித்தாலும்
கனவெல்லாம் நீ தானே கண்ணாமூச்சி ஆடுகிறாய்!!
அவனும் இல்லை அவளும் இல்லை ஆனால்
காதல் காவியமாய் நிற்கிறது தாஜ் மஹால் !!
காதலுக்கு மரியாதை !! காதலர் தினத்துக்கு இன்னொரு மறையா நினைவு!!
நாமும்  இன்னொரு காதல் காவியம் படைப்போம் வா வா!!

---------------
உனை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்!!
உன் விழி பார்த்து என் காலம் ஓடும்!!
ஆயிரம் நினைவோடு கனவோடு என் மனம் ஆட
பாயிரம் பல்லாயிரம் கல்யாண ராகம் பாட
உலகம் உறங்க தூங்காமல் என் மனம் மட்டும் வாட
நீ இன்றி நான் இல்லை!! இதை என்று உணர்வாய் நீயே??
உனை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்!!
உன் விழி பார்த்து என் காலம் ஓடும்!!
மனம் நினைக்க சுகம் வந்தது!!
உன் கவி என்றும் எனக்கு பூபாளம்!!
என் ராகம் என்றும் சோகம் அல்ல!!
மணி ஓசையாய் உனை பாடுவேன்!!
என்னை சுற்றும் ஆவியடி நீ!!
காதல் சோதனை !! என் மனதில் வேதனை!!
அன்பு பூ மாலை சூடி நிழலாக உன் வாழ்வெல்லாம் தொடர்வேன் உன் நாமம் என் மந்திரம் !! உணராயோ தோழி !!
உனை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்!!
உன் விழி பார்த்து என் காலம் ஓடும்!!
ஆசைகள் கோடி அனுதினம் பெருக... நிறைவேற
அருள் தா என் தேவி என் அருகமர்ந்து !!
இரு மனம் வேண்டாம் ! மயங்காமல் ஏங்காமல்
ஒரு மனமாய் என் உயிர் கலப்பாய்!!
உன் தேவை முடிக்க மண்ணுக்கு மழை என வருவேனே!!
விண்ணெல்லாம் சுற்றி வருவோம்!! வா! வா!!
மேற்கில் உதயம் வராது !! நீ இன்றி எனக்கு வாழ்வு அமையாது !!
உனை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்!!
உன் விழி பார்த்து என் காலம் ஓடும்!!
கை கோர்த்து வாழும் நாள் வரை இணைவோம் !!இணைவோம்!!
உன்னவனாய் உன் மடியில் உயிர் விடுவேன்!!அதுவரை
உனை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்!!
உன் விழி பார்த்து என் காலம் ஓடும்!!
------------------------

உடலும் உயிரும் இயங்க மனம் பிறந்தது !!
மனம் என்றும் நம் உயிரின் அலை!!
வாழ்வின் இன்பங்கள் யாவும் முழு வேகத்தில்
முடிக்க முயலும் நம் இளமை மனம்!!
உரியவரிடம் உதவி பெற்றாலும் ஏற்காமல் தடுமாறும் மனம்!!
தன்னை மதிப்பதில்லை அது அங்கீகாரம் இல்லை என ஏங்கும்!!
தாயின் காலடி தான் சொர்க்கம்!!தாய்க்கு பின் தாரமா?
தாரம் வந்தபின் தாய் ஓரமா? எது உண்மை??
தாயை போற்ற தந்தையை பேண நலம் மேவும் ...
சங்கட பாம்புகள் துரத்தினாலும்!!
மற்றவரை நாடி மனம் சலித்து ..கஷ்டங்களில் வீழ்ந்து..
முன்னேற முயல்வோம்!!
--------------------------
நட்பு என்றும் வழிகாட்டி...
இன்பமா? துன்பமா? தயக்கமா?
உண்மை நட்பு தோள் கொடுக்கும் !!
தேர்ந்து நட்பை எடு!!
எதையும் எதிர்பாராதது நட்பு!!
புகழ் ...வெறுப்பு கடந்து சுயநலம் காணாதது நட்பு!!
தலைக்கனம் இல்லாதது நட்பு
குழந்தையாக .. இளம் பெண்ணாக,
இளமை குறும்புக்கு ..நட்பு!!
முதுமையிலும் மனம் விட்டு பேசிட உறவாக...உறு துணையாக ..
மனிதனாக்குவதும் எல்லாம் உணரவைப்பதும் நட்பு!!,
உயர்த்துவதும் ..சிரித்து, அலுத்து, அழுது..அடம் பிடித்து ..உடன் இருந்து உயிர் காக்கும் நட்பு!!துன்பமும் இன்பமும் பெரிதல்ல உண்மை நட்பு இருக்கும் வரை !!
உணர்ந்து விடு நட்பின் பெருமை! அருமை!!
----------------------------------
கொல்லாதே அழகே!! என் கண்ணை கிள்ளாதே!!
மெல்லிடை..மேலழகு மின்னலாய் வந்து கொல்லுகிறாய்!!
மேகத்தை மெத்தையிட்டு பனித்துளி நீ நீராட சேர்த்து வைத்து..
நாம் கை கோர்த்து வெண்ணிலவில் வீடு கட்டி குடி புகுவோம் தொல்லை இன்றி!! வா அன்பே!!
ஆகைய உயரம் அம்மா அன்பு!! அடுத்தது நீதானே!!
அரைத்த மாவை அரிக்காமல் கலப்பு இல்லா கற்பனையில் புதிய வடிவம் சேர்த்து..காலமும் நேரமும் வாய்ப்பும் பார்த்து வழமை சேர்ப்போம் !! பொலிவான புதுமை காண்போம்!! வாழ்வது ஒரு முறை!! வாழ்த்தட்டும் தலைமுறை!! என்னவளே!!வா! வா!!
-------------------------
sasikala
kavithaisasikala2000@gmail.com




No comments:

Post a Comment