Thursday, November 25, 2010

காந்தக்கண்ணே ! அடிமையின் மோகம்!! சரித்திரக்காதல்!! ஏன் கண்ணே!!

காந்தக்கண்ணே ! பார்த்து பேச முடியவில்லை!!
விழி விலங்கில் வீழ்ந்த நானும் மீண்டு எழ எண்ண வில்லை !!
சஞ்சலமாக்கி விட்டு  போன சிங்கார சுனாமி நீ!!
தடுக்கி விழுந்து விட்டேன் !! கை பிடித்து தூக்கி விடு!!
நான் சாகும் வரை  என் துணையாய் மாறி விடு!!
காந்தக்கண்ணே ! வந்து விடு!! உன்னை எனக்கு தந்து விடு!!
-----------------------------


அடிமையின் மோகம்
-----------------------------------------
கல்யாண கனவு!! சுகம் தான்!!
ஏகந்தமா!!?ஏமாற்றமா? எது அதிகம் ??
மங்கையாக பிறக்காததால் ...
பெண்ணாய் பிறக்க பெரும் தவம் வேண்டும்
என்றார் அன்று!! பேச்சளவில் தெய்வமாக்கி
பேணவில்லை சமுதாயம்!!
கலாம் கனவு காண சொன்னார்!
கனவில் நிறைவேறுமா ஆசை எல்லாம்???
கண்ணீரால் நனைக்கத்தான் தலையணையா!!??
மனம் விட்டு அழுதால் குறை தீருமா?? பல
மணமான பெண்களும் அழாமல் மனதில் அழுத்தி.....
ஆழக்கடல் போல் ...அமைதியாக...
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ?
என்று அழியும் எங்கள் அடிமையின் மோகம் ??
----------------------------

சரித்திரக்காதல்!!

காதலுக்கு கண் இல்லையா? உண்டு! உண்டு!!
உன்னை பார்த்த பின்பு தானே காதல் வந்தது !!
கவர்ச்சியில் வந்த காம காதல் அல்ல!!
முதுமையிலும் உன் மடியில் உயிர் விடும்
உத்தம சரித்திரக்காதல்!!


ஏன் கண்ணே!!
உன் விழியில் பார்க்கும் போது மட்டும்
நான் அழகாக !! ஏன் கண்ணே!!

நிலைக்கும்!!
திருமணத்துக்கு பின் காதல்...கணவனுடன் !! இன்பம் ! இன்பம்!!
இதயத்தில் ஆனால் தூரமாக!! இது நட்பு!! நிலைக்கும்!!

செருப்பே!
காலுக்கு அழகு !! கவர்ச்சி !! அதிக விலை!!
வீட்டினுள் போக முடியாது!! கோவிலிலும்!!
செருப்பே! உன் கதி என்ன!!??

இதயம் கனத்து விட்டதே !
சின்ன இதயத்தில் டன் டன்னாய் நினைவுகள்!!!
அன்பு வைத்து ....ஆசை பெற்றேன் !!
இதயம் வெற்றி பெற நான் தோற்றேன்!!
இதயம் கனத்து விட்டதே !

இரவில் உண்டா?
கண்ணில் உறக்கம் இன்றி ..
மறக்க முடியா நினைவுகள் மருட்டுகிறது !!
சாதனை இல்லை !! துன்பம் தொடர ....இன்பம் எதிர்பார்த்து!!
இருட்டை போல் என் மனமும்!!
அழகு பெண்ணே ...என்றால் எல்லாம் வருமா?
சீரும் சிறப்பும் இரவில் உண்டா?
---------------------------------


அழகை ரசி !! அன்பு வைக்காதே!!
வாடி விடும் மலர் அது !!
பணம்!! கண்ணாடி அது!!
நிலைத்த நட்பு வேர் விடும் விருட்சமாக !!


  உண்டோ?
கண்ணில் உறக்கம் இன்றி கவிதை தொடர ....
மறக்க முடியா நினைவுகள் மருட்டுகிறது !!
நித்தம் வேதனை ! சுமந்து விடு!! மனமே!!
சோதனைகள் ஆயிரம் !! சாதனை இல்லை !!
துன்பம் தொடர ....இன்பம் எதிர்பார்த்து!!
அன்புக்கு ..அன்னையை போல் யாரும உண்டோ?
25.11.2010
SASIKALA

No comments:

Post a Comment