வான் நோக்கி அனல் பெருகும்!! சிறு காற்றும் சீண்டி விடும்!!
உள் மனதில் வெப்பம் உண்டு!! உணர்ந்து விட்டால் உயர்ந்து விடும்!!
பார் போற்ற போராடு!! புகழ் நெருப்பு உனை சூழும்!!
-----------------------------------
வருமான வறட்சி!! தேவைகள் அதிகம்!! தீபாவளி!!
பட்டாடை! பலகாரம்!! பட்டாசு!! அயல் வீடெல்லாம் மகிழ்ந்திருக்க
என் மனமோ அலைகிறதே!!கேட்ட கடன் கிடைத்து விட்டால் ...
என் வீட்டில் தீபாவளிதான்!! குழந்தைகள் சந்தோசம் ...
அதற்கு ஈடோ எதுவும் இங்கே!!
புரிந்து ..வாழ்ந்தோமா ? வாழ்ந்து புரிந்தோமா?
எது உண்மை???
---------------------------------
ஆழப்பதியா வேர்கள் மரம் சாய்க்கும் !!
ஆழ்ந்து உணரா காதல் "மனம்" சாய்க்கும்!!
மிஞ்சும் சுவடோ சிறு பள்ளம்!!
அஞ்சும் உறவோ பெரும் துன்பம்!!
உன் நினைவில் ஆடும் மனம் கெஞ்சும்!!
உணர்வில் பாட்டோ தினம் கொஞ்சும்!!
உணர்ந்தே வாராய் என் உயிரே!!
------------------------------
உடல் பசியை காதல் என்றால் கருவறையும் கழிப்பிடமே!!
தேடி சேர்ந்த உள்ளங்கள்!! நாடி ஓடும் இல்லங்கள்!!
மனம் நாடும் மார்க்கம் என்றும் காதல் தானே!!
மனைவியோடு சேரும் நாளும் இன்பம் தானே!!
இனி உனக்கும் எனக்கும் வேறில்லை!!
என் உயிரே!! வரும் ஒவ்வொரு நாளும் திருநாளே!!
-------------------------------
சுனாமியாய் உன் நினைவு ..என்னை வாரிச்செல்ல...
மனைவியாய் எனை ஏற்க வருவாய்
என மௌனமாய் என் மனம்!!
எப்படி புரியவைப்பேன் மன்னவனே!! என்னவனே!!
காதல் தீயில் பனித்துளியாய் நான் !!
கரையும் காக்கை குரல் கேட்டு என விழி திறந்தேன்!!
அலைமோதும் என மனம் யார் அறிவார்?
அள்ளி எடுத்து ஆசைதீர எனக்கு முத்தம்
தருவதெல்லாம் கனவில்தானோ?
காதல் இதோ? கடி மனமே!!
----------------------------
முன் சேரும் மழைத்துளியை கை ஏந்தி நீ நிற்க ...
பளபளப்பாய் சிறு மின்னல்!! உன் கையில் மத்தாப்பு !!
இல்லை! இல்லை!! உன் முக ஒளியில் மழைத்துளி
ஜொலிக்கிறதே என் மனம் போல!! அதிர்ஷ்டக்காரன் இவன் என்று
மேகமெல்லாம் சிரிக்கிறதே !! உண்மையா???
பளபளப்பாய் சிறு மின்னல்!! உன் கையில் மத்தாப்பு !!
இல்லை! இல்லை!! உன் முக ஒளியில் மழைத்துளி
ஜொலிக்கிறதே என் மனம் போல!! அதிர்ஷ்டக்காரன் இவன் என்று
மேகமெல்லாம் சிரிக்கிறதே !! உண்மையா???
--------------------------------------
தீப ஒளி நேரம்!! சரவெடியாய் உன் நினைவு!!
புத்தாடை போட்ட என் தேவதையை காண
அலையும் மனதோடு நான் வந்தேன்!!
வர்ணஜால மத்தாப்பு!! அதன் நடுவே
என் மனம் சாய்த்த "பூ" கண்டேன்!!
பார்த்து மறைந்து மறைந்து பார்த்து
ரசித்தாள்..சிரித்தாள்!!புசித்தாள்!!
நானும்தான் கண்களால் அவளை!!
வெடிசத்தம்..விண்முட்ட..அஞ்சி என் வஞ்சி வர..
என் மனதிற்குள் வெடி சத்தம் !! தீபாவளிதான்!!
சாக்காய் இதை வைத்துஅவள் கைப்பற்ற சென்றேன்!!
அந்தோ!! ஓடிவிட்டாள்!!ஓரப்பார்வையுடன்!!
அவள் உச்சி முகர்ந்து ஒரு முத்தம் தர..பெற ஆசை !!
மருண்ட முகத்தோடு ...அவள் வீட்டு வாசலிலே!!
என்னவளை கண்டு விட்டேன்!! இன்பம் இதுதானோ?
புத்தாடை போட்ட என் தேவதையை காண
அலையும் மனதோடு நான் வந்தேன்!!
வர்ணஜால மத்தாப்பு!! அதன் நடுவே
என் மனம் சாய்த்த "பூ" கண்டேன்!!
பார்த்து மறைந்து மறைந்து பார்த்து
ரசித்தாள்..சிரித்தாள்!!புசித்தாள்!!
நானும்தான் கண்களால் அவளை!!
வெடிசத்தம்..விண்முட்ட..அஞ்சி என் வஞ்சி வர..
என் மனதிற்குள் வெடி சத்தம் !! தீபாவளிதான்!!
சாக்காய் இதை வைத்துஅவள் கைப்பற்ற சென்றேன்!!
அந்தோ!! ஓடிவிட்டாள்!!ஓரப்பார்வையுடன்!!
அவள் உச்சி முகர்ந்து ஒரு முத்தம் தர..பெற ஆசை !!
மருண்ட முகத்தோடு ...அவள் வீட்டு வாசலிலே!!
என்னவளை கண்டு விட்டேன்!! இன்பம் இதுதானோ?
---------------------------------
குடும்பத்தார் மனம் சோர தனம் சேர்த்து என்ன லாபம்?
அன்பும் அருளும் அரவணைப்பும் அக்கறையும் அன்யோன்யம்
பெருக்கும்!! ஆண்டவனும் அங்கேதான்!! உணர்ந்து விடு!!
வாழ்வு எல்லாம் வசந்தம் தான்!!
அன்பும் அருளும் அரவணைப்பும் அக்கறையும் அன்யோன்யம்
பெருக்கும்!! ஆண்டவனும் அங்கேதான்!! உணர்ந்து விடு!!
வாழ்வு எல்லாம் வசந்தம் தான்!!
---------------------------------------
குளிர் காற்று தாலாட்ட வேம்பு மர நிழலில்
கட்டிலிலே கண் அயர்தல் சுகம்தானே!!
ஏன் என்று எதற்குஎன்று கேளாமல்
தான் உண்டு தன் வழி உண்டு என
பார்த்தாலும் பழகாத பக்கத்து வீடுகள் !!
புழுங்கி தவழும் நகர வாழ்வு!!
பறக்கும் பறவை ஆனந்தமாய்!! சுதந்திரமாய்!!
கண்டு மனம் ஏங்குதடி தனிமையிலே!!
குளிர் காற்று தாலாட்ட வேம்பு மர நிழலில்
கட்டிலிலே கண் அயர்தல் சுகம்தானே!!
கட்டிலிலே கண் அயர்தல் சுகம்தானே!!
ஏன் என்று எதற்குஎன்று கேளாமல்
தான் உண்டு தன் வழி உண்டு என
பார்த்தாலும் பழகாத பக்கத்து வீடுகள் !!
புழுங்கி தவழும் நகர வாழ்வு!!
பறக்கும் பறவை ஆனந்தமாய்!! சுதந்திரமாய்!!
கண்டு மனம் ஏங்குதடி தனிமையிலே!!
குளிர் காற்று தாலாட்ட வேம்பு மர நிழலில்
கட்டிலிலே கண் அயர்தல் சுகம்தானே!!
--------------------------
மெல்லினம் வல்லினம் சேர "ஆசை" தூறல் வருமா?
அன்பா? ஆசையா? இரு மனமும் ஒன்றா?
காதலும் கவிதையும் போல் ஒன்று சேருமா ?
பேச காத்திருந்து குழப்பமாய் நாள் கடக்க ....
வேர் விட்ட பாச செடி செழித்து திருமண பூ
மலர்ந்ததிங்கே!! எனை மறந்தேன்...இது சொர்க்கம்!!
அன்பா? ஆசையா? இரு மனமும் ஒன்றா?
காதலும் கவிதையும் போல் ஒன்று சேருமா ?
பேச காத்திருந்து குழப்பமாய் நாள் கடக்க ....
வேர் விட்ட பாச செடி செழித்து திருமண பூ
மலர்ந்ததிங்கே!! எனை மறந்தேன்...இது சொர்க்கம்!!
-----------------------
நீ இருக்க நேரம் போதாத பஞ்சம்!
நீ சென்றால் காணத்துடிக்கும் நெஞ்சம்!!
காலம் நீளாதா என் இதயம் கெஞ்சும்!!
தனிமையின் வெறுமை!! மனம் துடித்து அஞ்சும்!!
எப்படி நீ அறிவாய்? மேகம் சூழ்ந்த நிலவும் விண்மீன்களும்
அழகுதான்... உன்னை காணும் வரை!!
கவிதை சிறகுகள் அணைக்க
நல்ல நட்பு ஆகி ...காதலி ஆகி ..மனைவி ஆகி ...
என்றும் பிரியாது கை சேர்ப்போம்!!
காவியம் படைப்போம் வா கண்ணே!!
நீ சென்றால் காணத்துடிக்கும் நெஞ்சம்!!
காலம் நீளாதா என் இதயம் கெஞ்சும்!!
தனிமையின் வெறுமை!! மனம் துடித்து அஞ்சும்!!
எப்படி நீ அறிவாய்? மேகம் சூழ்ந்த நிலவும் விண்மீன்களும்
அழகுதான்... உன்னை காணும் வரை!!
கவிதை சிறகுகள் அணைக்க
நல்ல நட்பு ஆகி ...காதலி ஆகி ..மனைவி ஆகி ...
என்றும் பிரியாது கை சேர்ப்போம்!!
காவியம் படைப்போம் வா கண்ணே!!
No comments:
Post a Comment