Saturday, March 19, 2011

ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் மின்னும் கண்கள்!!...படுத்துறங்கும் உன் மனமே !!!!

ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் மின்னும் கண்கள்!!
இதயம் இழந்தேன்!! ஒளிர் நிலவாய்...குளிர் நிலவாய் நீ வந்தாய்!!

உன் ஏவுகணை கண்களில் வீழ்ந்தேன்!!
எழவில்லை....என் ஜன்னல் அழகியே !!

-----------------------

வந்தேன் காதலுடன் ..உன்னை பார்க்க

கண்டேன் உன்னை கைக் குழந்தையுடன் ?!

வடிந்தது கண்ணீர் இல்லை ரத்தம்!!

சத்தமின்றி மனதிற்குள் யுத்தம் !!.

வாழும் நாள் முழுவதும் உன்னோடு ...
இருக்க நினைத்தேனே!!

பணம் சேர்க்க பயணம் செய்தேன்!!

சேர்த்து வந்தேன்!! சேர்த்து வந்தேன்!!

என்னவளே!! சொல்லாமல் சென்ற

என் குற்றம் புரிய வர ....

நடை பிணமானேன் இன்று!!

ஆயிரம் கதை பேசும் உன் கண்கள் எங்கே??

பூமி பிளந்து- உயிரோடு சமாதி ஆக வேண்டும்

நான் இங்கே!! நான் இங்கே!!

----------------------------------------

உன்னை பிரிந்தேன்!! நரகத்தில் வாழ்கிறேன்!!

உன்னை நினைத்து நாளும் சாகிறேன்!!

காதல் இனிக்கும் கரும்பா? எரிக்கும் நெருப்பா ?
காதல் அமிர்தமா? நஞ்சா?
காதல் தென்றலா? புயலா? புதிரா??

தெரியவில்லை!!...

எதையும் ஆக்கும் சக்தி பெண்ணுக்குத்தானே!

உன் காதல் வரம் தந்து விடு!!

----------------------------------------



உயிருக்குள் மனித இனம் அழகு!!அதற்குள் பெண் அழகு!!

பெண்ணுக்குள் நீ அழகு!!
உனக்குள் எல்லாமே அழகு!! அழகு!!.

----------------------------------

சாரி சொல்ல வேண்டாம்!! சரியும் சொல்ல வேண்டாம்!!
பார்வை ஒன்றே போதும்!! ஆயிரம் கதை அது பேசுமே!!
நன்றி சொல்ல வேண்டாம்!! நகைத்தால் அது போதுமே!!

எனக்குள் நீயும் உனக்குள் நானும் சேர்ந்தபின்னே ....

சொல்லித்தெரிய வேண்டாமே!! உடல் இன்றி உயிரா?

உன்னிடம் இதயத்தை தந்துவிட்டு...தனிமையில் வாடுகிறேன்!!

நினைவெல்லாம் நீ இருக்க..பனி நிலவும் பாகற்காய் ஆனதென்ன?

மதி இழந்தேன் ரதியே!!

சொல் இழந்தேன் நிலவே!!

காக்க வைத்து கதவை சாத்தும் காதலியே!

காதலை வரமாக கொடு!!

மனதில் என்னை வைத்து

வெளியில் அறியாதது போல்

நடக்கும் மாமயிலே!! எனக்குள் நீயும் உனக்குள் நானும் சேர்ந்தபின்னே ....நடிப்பெதற்க்கு? இதயத்தை கடனாக கொடு!!



என்னை உன்னிடம் தொலைத்தேன்!!

தேடி சொல்லிவிடு!! எங்கே இருக்கிறேன்?







அவளுக்கு ரோஜா பூ கொடுத்தேன்!!

வெட்கத்தில் என்னவள் சிரித்து சிவக்க

ரோஜா நிறம் தோற்றது!!



அருகே வரவிடாத நீ

உன்னை சேர்ந்த என் காதலை

என்ன செய்வாய்?



துடிப்பதை விட உன் நடிப்பை ரசிக்க

அதிக நேரமாகிறது என் இதயத்திற்கு!!

என் தொலை பேசியில் சத்தம் தான் வருகிறது !!

உன் முத்தம் அல்ல!! நேரில் தாயேன்!!

குறைந்தா போவாய்?

வெயிலில் வெளியே போகாதே அன்பே!!

உன் நிழலை யாரும் மிதிக்க வேண்டாமே!!

நீ என் உலகமா? நீ மட்டுமே என் உலகமா?

எதுசரி?? நீயே சொல் அன்பான ராட்சசியே!!



காதல் எது? உடல் இருந்தும் உணர்வு இல்லாத நான்

எப்படி சொல்வேன்? காதலித்து விட்டேனே!!



கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!
எடுத்தவர் கொடுப்பதில்லை!!

மறைத்தவர் தருவதில்லை !!
நீதி என்றும் சாகாது !!

கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!

நீதியும் நெருப்பும் ஒன்றானால் …
நெருங்கிடும்போதே சுட்டு விடும் !!

சுட்டாலும் தங்கத்தின் நிறம் போமோ?
தொட்டாலும் மலர்களின் மணம் போமோ?
கற்றவர் கலங்குதல் அழகாமோ?

கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!

நாவுக்கும் மனதுக்கும் உறவுண்டா ?
சொல்லுக்கும் செயலுக்கும் உறவுண்டா ?
சுற்றமும் சுகமும் நீராமோ ?

இருப்பதர்க்கெல்லாம் பொருள் உண்டு
வருவதில் வெற்றி நமக்கு உண்டு
இரவுக்கு பின்னே பகல் உண்டு
நீதியும் ஒரு நாள் நமக்கு உண்டு !!
கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!

பசிகளில் ஆயிரம் வகை உண்டு
பார்ப்போம் அதற்கும் முடிவுண்டு

வந்ததில் எல்லாம் பொருளுண்டு
வருவதில் வெற்றியும் வரலாமே !!
கவலைகள் என்றும் மறையாது …
காரியம் முடிக்க துணியாமல் !!



காணும் பொருள் எல்லாம் நீயாக..

எண்ணமெல்லாம் முத்தாக!!

நீங்காத நினைவாக நீ தானே!!

திரும்பும் திசை எல்லாம் நீயாகவே!!

என் மனம் பித்தானதோ?

நான் உனக்கு கொடுத்த பூ கீழே !?

தடுக்கி விழுந்தேன்!!? ஓ!! பூவும் கல்லானதோ?







சுமப்பதிலும் சுகம் கண்டாள்!! பரிமாறி பசி மறந்தாள்!!

பாசத்தின் சாட்சியடா!! நடமாடும் வேள்வியடா !!

மனசு போற்றும் மகராசி!! எங்கள் தலை வணங்கும் அவள் ஆட்சி!!

அம்மா! அம்மா!! அம்மா!! இறையும் அவளுக்கு ஈடில்லையடா!!



தொலைவினில் அவள் முகம் பார்த்தேன்!!

தடுமாறி தொலைந்தேன் நானே!!

அவள் பேசும் தருணமெல்லாம் இனிப்பு மழை!!

என் இதயம் நீராய் கரைந்திட

"ஈர்த்தவள்" மனதினுள் சென்றாள்!! அங்கு நின்றாள்!!



நீருக்குள்ளே நின்றாலும் நீதி சாவதில்லை!!

நிலத்தடியில் நிறுத்தினாலும் நினைவு போவதில்லை!!
வீசும் காற்று விளக்கணைக்கும்!! வெண்ணிலவை தொட்டிடுமா?

நிலம் நனைக்கும் மழையாலே வானம் ஈரமாவதுண்டா??

முக்கு முட்ட தின்னு மருந்துக்கடையில் நின்னு

வாழவில்லை கண்ணே!!எனது கையை நம்பி

உன்னை தொட்டேன் பெண்ணே!!

எனக்கு நீயும் உனக்கு நானும் விதியடி!!

உனக்கு கீழே உலகடி!! எனக்கு மதி நீ தான்!!

நீ சொல்ல ஏழுலகும் பிடித்துவரும்

மன பலம் வருமே!! வாடி என் தங்கமே!!



காற்றாட போனாலும் கதை பேசி போவோம் வா!!

என் இதயக்குட்டை சேர்ந்தவளே!!

கண்ணாலே கலகம் செஞ்சு உன் காலடியில் சேர்த்துவிட்டாய்!!

புது வசந்தம் தேடும் பூவே வா!! உன் வாசம் எங்கிருந்து??

"விதி" ஆற்றில் மிதக்கும் துரும்பாக நானிருக்க..என்

"மதி" இழுத்த கரும்பே!! மங்கலமாய் வா வா வா

அருகிருக்கும் தண்டவாளம் தொடுவதில்லை நம்மை போல!!

வானிருந்து மழை வரலாம்!! வானுக்கு சொந்தமில்லை!!

பூமியில் மழை விழலாம்!! பூமியில் நிலைப்பதில்லை!!

இதுபோல இருந்தது போதும்!!

இடைவெளி இல்லாத நிலை வரணும்!!

உன் மடியில் தலை சாய்த்து தூங்க வேணும்!

மனமிரங்கி சரி சொல்வாய்!! வாழ்வேனே!!





சுமப்பதிலும் சுகம் கண்டாள்!! பரிமாறி பசி மறந்தாள்!!

பாசத்தின் சாட்சியடா!! நடமாடும் வேள்வியடா !!

மனசு போற்றும் மகராசி!! எங்கள் தலை வணங்கும் அவள் ஆட்சி!!

அம்மா! அம்மா!! அம்மா!! இறையும் அவளுக்கு ஈடில்லையடா!!





தொலைவினில் அவள் முகம் பார்த்தேன்!!

தடுமாறி தொலைந்தேன் நானே!!

அவள் பேசும் தருணமெல்லாம் இனிப்பு மழை!!

என் இதயம் நீராய் கரைந்திட

"ஈர்த்தவள்" மனதினுள் சென்றாள்!! அங்கு நின்றாள்!!



நீருக்குள்ளே நின்றாலும் நீதி சாவதில்லை!!

நிலத்தடியில் நிறுத்தினாலும் நினைவு போவதில்லை!!
வீசும் காற்று விளக்கணைக்கும்!! வெண்ணிலவை தொட்டிடுமா?

நிலம் நனைக்கும் மழையாலே வானம் ஈரமாவதுண்டா??

முக்கு முட்ட தின்னு மருந்துக்கடையில் நின்னு

வாழவில்லை கண்ணே!!எனது கையை நம்பி

உன்னை தொட்டேன் பெண்ணே!!

எனக்கு நீயும் உனக்கு நானும் விதியடி!!

உனக்கு கீழே உலகடி!! எனக்கு மதி நீ தான்!!

நீ சொல்ல ஏழுலகும் பிடித்துவரும்

மன பலம் வருமே!! வாடி என் தங்கமே!!



காற்றாட போனாலும் கதை பேசி போவோம் வா!!

என் இதயக்குட்டை சேர்ந்தவளே!!

கண்ணாலே கலகம் செஞ்சு உன் காலடியில் சேர்த்துவிட்டாய்!!

புது வசந்தம் தேடும் பூவே வா!! உன் வாசம் எங்கிருந்து??

"விதி" ஆற்றில் மிதக்கும் துரும்பாக நானிருக்க..என்

"மதி" இழுத்த கரும்பே!! மங்கலமாய் வா வா வா

அருகிருக்கும் தண்டவாளம் தொடுவதில்லை

நம்மை போல!!

வானிருந்து மழை வரலாம்!! வானுக்கு சொந்தமில்லை!!

பூமியில் மழை விழலாம்!! பூமியில் நிலைப்பதில்லை!!

இதுபோல இருந்தது போதும்!!

இடைவெளி இல்லாத நிலை வரணும்!!

உன் மடியில் தலை சாய்த்து தூங்க வேணும்!

மனமிரங்கி சரி சொல்வாய்!! வாழ்வேனே!!





ஹாய் !! உன்னை நினைத்தேன் என்றேன் !!

நினைப்பதற்கு முன் மறந்தாயோ என வெடித்தாள்..விலகினாள்!!

நீ அழகு என்றேன்!!

யாரோடு ஒப்பிட்டாய்.. என சீறினாள்!! சிணுங்கினாள்!!

என்மீது தப்பில்லை தவறில்லை என்றாலும்

கோபித்து விலகி நின்றால் தான் அன்பு அதிகமாகும் என்பாள்!!

வீம்புக்கு பெயர் பிணக்கோ? வம்புக்கு பெயர் அணங்கோ?

ஐயோ!! என்ன செய்வேன்? எப்படித்தான் சமாளிப்பேன்?



தேவதை நான் இங்கு வந்தேன்! இந்த

மாப்பிள்ளை கை பற்றிட வந்தது வேளை!! சுபவேளை!!

பூச்சூடவும் புகழ் சேர்க்கவும் தேவதை நான் இங்கு வந்தேன்!

மாப்பிள்ளை கை பற்றிட வந்தது வேளை!! சுபவேளை!!

இது நல்ல ஜோடி என தேவாதி தேவரும் சூழ்ந்து நலம் பாட
மூன்று முடி போட என் வாழ்வு தான் நலமானது!! வளமானது!!

மன நிறைவானது!!

தேவதை நான் இங்கு வந்தேன்! இந்த

மாப்பிள்ளை கை பற்றிட வந்தது வேளை!! சுபவேளை!!





என்னவரை கண்டபோது அவர் குறைகள் தெரியவில்லை!!

அவர் இல்லாதபோது அவர் குற்றம் குறைகள் மட்டும்

விண் தொடும் மாயமென்ன?

-

தாய் தந்தை கணவன் மனைவி பிள்ளைகள்

நலம் காக்க நல்ல வழியில் அயராது முயன்று சேர்த்து

அன்போடு பகிர்ந்து உண்பதுதானே இல்லறம்?

இதில் ஆண் என்ன? பெண் என்ன? பாகுபாடு?

விட்டுக்கொடுத்து புரிந்து நடந்தால் முதுமையாகி

சாகும் வரை காதல் தொடருமே!!

--

அன்பு காட்ட நீ அன்பு காட்ட அன்பு காட்ட

அடிமைகொள்ளும் அகம்பாவம் ஓடிவிடும்!!

என்பு போர்த்திய சதை தோலும் எத்தனை நாள்?

அழகென்று நம்பும் புற கவர்ச்சி எத்தனை நாள்?

கணவன் மனைவி என ஆகுமுன்னே "ஆசை வலை"

ஆட்டுவித்தால்......தடம் மாறி போகுமோ மனம்?

ஈரினமும் ஈர்க்கலாம்!! எது சரி அவர் மனம் தானறியும்!!

அறிவியலின் வளர்ச்சி அதை "ஆன" வழி பயன் படுத்த

அஞ்சாமல் துணிந்து நின்றால் "நிறைவு" என்றும் வந்திடுமோ?

உனக்கு நீயே நீதிபதி!! உண்மை என்றும் உன் உள்ளம் அறியும்!!

தவறென்றால் உடன்படாது !! இடித்துரைக்கும்!!

மீறி சென்றால் படுத்துறங்கும் உன் மனமே !!!!


No comments:

Post a Comment