கண்ணுடன் கலந்ததும் பரவசம்தான்! கலவரம்தான் !!
தன நிலை மறந்து உலவுதே என் மனமே!!
அறியா குழந்தை பருவம் நீங்கி ஆவலுடன்
உன்னை அறிய வந்தேனே!!
நிலவின் ஒலியினில் வீசும் தென்றலில் அலைகளின் இடையே
படகில் சென்று தன்னை மறந்து நாம் செல்வோமா?
தனி உலகம் காண்போமா? அது நமதல்லவா?
குவலயம் முழுதும் குதுகலமே..உன்னுடன் சேர்ந்த பின்னே உறவே!!
உன் கண்ணுடன் கலந்ததும் பரவசம்தான்! கலவரம்தான் !!
தன நிலை மறந்து உலவுதே என் மனமே!!
-----------------------
நாடி உன்னை சரணடைந்தேன் அம்மா புதுகாளி!!
வேண்டியதை செய்து உவக்கும் "உன்" காலடியே தஞ்சம் அம்மா!!
பட்ட துயர் போதும் இனி தொடராமல் தடுத்து விடு !!
எங்கும் எதிலும் நீ ஆனால் என் உயிரும் உனதன்றோ?
எது வரினும் நான் எது செய்யினும் அது உன்னருளே!
என் தேவை நீ அறிவாய்!! எனை கேட்க வைக்காதே!!

உறங்கும் மனம் எழுப்பி விடு!! உற்ற வழி காட்டி விடு!!
என்னை உணர வைத்து உன்னில் கரைத்து விடு!!
நான் எக்குற்றம் புரிந்தாலும் மறந்தென்னை ஏற்று விடு!!

அன்பையும் காதல் என்பார்! ஆசைமனம் காதல் என்பார்!!
இன்பம் அதே காதல் என்பார்!!
இசையும் உள்ளம் காதல் என்பார்!!
உடல்பசியும் காதலாமோ? உளம் தேடல் காதலாமோ?
உணர்வு நாடல் காதலாமோ ?
உயிர் உள்ளவரை உறவு வேண்டல் காதலாமோ?
நட்பும் காதலாமோ? களவு மனம் காதலாமோ?
உடல் அழகில் ஆரம்பித்து உணர்ந்து கூடல் காதலாமோ?
இன கவர்ச்சி இரு பக்கம்!!
ஆணும் பெண்ணும் இன்றி வாழ்வு இல்லை!!
மனம் கவர்ந்தால் அது காதல் ஆமோ?
எது காதல்? எது காதல்? எது காதல்?
விளக்கை தேடும் விட்டில் என வீழ்ந்து அழுதல் வீண் அன்றோ?
தன்னை அடக்க முடியாமல் தவிக்கும் இந்த இளமை வேகம்...
கொண்டதே கோலம்! வந்ததே வாழ்வு!!
சிந்திக்க மறந்து ஐந்து அறிவாய் வாழ்வு ஒடிந்து போனாரே!!
காதலிதா? காதலிதா? காதலிதா?முக அழகா ? புன்சிரிப்பழகா ? பேச்சழகா ? குரல் அழகா? கண் அழகா?
சங்கு கழுத்து அழகா? முட்டும் முன் அழகா? இடை அழகா?
தண்டு கால் அழகா? உடை அழகா? உடுத்தும் விதம் அழகா?
அறிவு அழகா? அது தரும் ஆற்றல் தான் அழகா?
குணம் அழகா? அன்பு அழகா? பண்பு அழகா?
செயல் அழகா? செய்முறை அழகா?
அன்பறிவு ஆற்றலுடன் திட்டமிட்டு முயன்று முன்னேறல் அழகா?
எது அழகு? எது அழகு? சொல் நட்பே!!சிந்தா மனமுடன் சிந்தனை செய்து
பொறுமைக்கு பெருமை சேர்த்து
தாய்மை என்றும் எளிமை என
வாய்மையோடு வாஞ்சையோடு
வாழ்ந்திருக்கும் அம்மா!! உனக்கு இணை எது? ஏது?ஆணவம் அகற்றி ஆசை விலக்கி பண்பை வளர்த்து
படிப்பை தொடந்து உண்மையாய் நின்று உறுதியாய் உழைத்து
அன்போடு யாவர்க்கும் அன்னமிட்டு
சொல்லாலும் செயலாலும் ஒன்றாகி உடல் வலிமை பேணி வர
உயர்வும் நிம்மதியும் என்றும் உன் பக்கம்!!
அயராது முயன்றால் !!!
ஆசைக்கும் அழகுக்கும் மலர் தொடுத்தார்!!
அன்பு கொண்ட பெண்ணும் மலர் என்றார்!!
சூடி எறிவது மலர் ஆனால் ஆதிக்க ஆண்மகன்
தான் அடைந்த பெண்ணையும் மறுப்பானோ?
மன்னவன் என்னவன் என்றாளே!!மனதுக்குள் அழுவதற்கோ !?
பற்பல மலர்கள் பாந்தமாய் வாசம் தர ...
பெண்ணும் அதுபோல் என எண்ணலாமோ?
மனம் போல் வாழும் மன்மத மனம் "மணம்"
என்ற போர்வையிலே சிதைக்கலாமோ?
மனைவி அன்றோ?
காலம் கடந்து "குணம்" கண்ட பெண்ணும் கொதித்து எழாமல்
குமைந்து இழப்பது அவள் வாழ்வு தானே!! குல விளக்கோ?
அமைதியும் ஆற்றலும் இழந்து பொய் நகை முகம் கொண்டாளே!!
போலி வாழ்க்கை !! பொய் அன்பு!!அதை காதல் என வீழ்ந்தாளே!
காதல் மணம் மோதலுடன் வாழுதிங்கே!!
பணம் பரிசு பகட்டு என்று பட்டறிந்து அழுவதோ
புண்பட்ட காதல் மனம்??
உண்மை அன்பு காதல் என்றால்
அதற்கு ஏன் "காதலர் தினம்"??
சாகும் வரை இணைந்து வாழ்வதுதான் காதல் !!
உன்மத்த மோகம் எல்லாம் காதல் ஆமோ????
உணராது போனால்...உள்ளவரை துன்பம் தானே!!
ஆசைக்கும் அழகுக்கும் மலர் தொடுத்தார்!!
அன்பு கொண்ட பெண்ணும் மலர் என்றார்!!"கண்ணோடு கலந்திருந்தால் கண்ணீரோடு விட்டிருப்பேன் என் உயிரோடு நீ கலந்திருப்பதால் உன்னை பிரிவது எப்படி கண்ணே!!."
கட்டி அணைத்து தலை முதல் கால் வரை என் முத்தத்தால் நனைத்து வருடி பகல் இரவு பாராமல் உள்ளமும் உடலும் கலந்து
எனக்கு நீ உனக்கு நான் என உலா வருவோம் வா கண்ணே!!
சிரிக்கும் சிங்காரி!!சங்கு கழுத்தும் குத்தும் முன் அழகும்
அழகு சின்ன இடையும் பித்தம் ஏற்றுதடி!! வாழை தண்டு கால் அழகும்
வடிவும் உன்னை அள்ள துடிக்குதடி!!

-----------------------------------