"கவனம் தேவை "
-----------------------
சாலையில் குறியீடு...மஞ்சள்!!
கவனத்தோடு பக்கம் உணர்ந்து செயல்பட....!!!
எனது கவிதைகள் தரும் சில கருத்துக்களுக்கும்
மஞ்சள்தான் குறியீடு..!!
நாகரீக மாற்றங்களால் மாறிப்போய் இருக்கும்
இளைய சமுதாயம்!! நல்லதும் உண்டு!! தீயதும் உண்டு!!
நம்மையும் நம்மை சுற்றி உள்ள அனைத்தையும்...
ஆழமாக சிந்தித்து.....உணர்ந்து....செயல்பட .......!!
கவனம் கொள்வீர் தோழமைகளே!!
-------------------------------
எண்ணங்களாலே பாலம்!!
----------------------------------
எண்ணங்களாலே பாலம்!!
தினம் அதை தாண்ட முடியாத மன ஓலம்!!
காதல் கடலில் விழுந்து விட்டேன்!!
கரை காண முடியவில்லை!!
கனவுகளில் அவன் !! வந்தான் !!சென்றது ஏன்?
காத்திருந்த மனம் நோக ...போனானே !!
என்னவன் எங்கே என் தோழி!!
தெளிவும் இல்லாமல் தேற்றவும் முடியாமல்
மயங்குது என் மனம் தோழி!!
இந்நிலை மாறுமா? இல்லறம் காணுமா?
ஏங்குகிறேன் தோழி!! ஏங்குகிறேன் தோழி!!
எண்ணங்களாலே பாலம்!!
தினம் அதை தாண்ட முடியாத மன ஓலம்!!
ஊரை தெரிந்தும் ..உறவை தெரிந்தும்..
அவனை தெரியலியே!!
பந்த பாசம்..வெளி வேஷம்!!
கறிவேப்பிலை நானோ?
தீ காயத்தில் ஆசிட் விடுகிறான்!!
ஏங்குகிறேன் தோழி!!
எண்ணங்களாலே பாலம்!!
தினம் அதை தாண்ட முடியாத மன ஓலம்!!
--------------------
உள்ளம் உணராயோ??
--------------------------
கரை பிரிந்து அழுமா அலைகள்?
விண்ணை பிரிந்து அழுமா மேகம்?
நீ அனலாய் வார்த்தையில் சுட்டாலும்
கோபத்தணல் கொட்டினாலும் ...
என் நெஞ்சம் நிறையுமே!!பேசுவது நீ அன்றோ!!
திசை மாறா காதலுடன் உன் பாத சுவடை பின்பற்றி
உருகும் உயிரோடு நான்...என்றும்! என் கவிதையுடன் ...
மனம் மாறாதா??? ஏங்கி..தவிக்கும் உள்ளம் உணராயோ??
---------------
"காதலின் தீண்டலால் ஒவ்வொருவரும் கவிஞராகிறோம்."
- பிளாட்டோ
"நான் அழகாக இருப்பதால் நீ காதலித்தாயா அல்லது நீ காதலித்ததால் நான் அழகானேனா?"
- சிண்டரெல்லா
"காதலுக்கு காரணம் உண்டு. ஆனால், அந்தக் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாது."
- பிலாசே பாஸ்கல்
"காதல்... பெண்ணுக்கு வாழ்க்கை வரலாறு; ஆணுக்கு ஓர் அத்தியாயம்."
- ஜெர்மியின் டி ஸ்டீல்
"காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் மட்டுமே வாழ்க்கையின் ஒரே மகிழ்ச்சி!"
- ஜார்ஜ் சாண்ட்
"காதலர்களின் உதடுகளில் ஆன்மாவைச் சந்திக்கிறது ஆன்மா"
- ஷெல்லி
"போரைப் போன்றது காதல். தொடங்குவது சுலபம்; முடிப்பது கடினம்"
- யாரோ
என் கணவரை சந்திப்பதற்கு முன்பு நான் காதலில் விழுந்ததே இல்லை; ஆயினும் சில முறை நுழைந்திருக்கிறேன்.
- ரிடா ருட்னர்
காதலுக்கு கண்ணில்லை; அந்தக் கண்ணை திறப்பது திருமணம்!
- பவுலின் தாம்ஸன்
"உண்மையான காதல் கதைகளுக்கு முடிவுகளே கிடையாது."
- ரிச்சர்ட் பாச்
----------------------------
எங்கள் தமிழ்!
--------------------------
என் அன்னை தந்த தமிழ்!!
மகேசன் தந்த தமிழ் – விண் அளந்த தமிழ்!!
சிவ வேலன் தந்த செந்தமிழ்!!சிந்தை நிறைந்த தமிழ்!!
பிள்ளைத் தமிழ்!! பேசும் தமிழ்!!
அகத்தியன் கண்ட தமிழ்!!
கங்கையாய்.. காவிரியாய் விரிந்த தமிழ்!
தொல்காப்பியன் தந்த தமிழ்!!
தொல்லுலகம் போற்றும் எங்கள் தமிழ்!!
அவ்வைக்கும் மூத்த தமிழ் !!
அவணி போற்றும் முத்தமிழ்!!
வள்ளுவன் தந்த தமிழ்!!வாழ்வு தந்த தமிழ்!!
மக்கள் மனம் நிறைந்த தமிழ்!!
வீறு கொண்ட வீரத்தமிழ்!!
காதல் பேசும் தமிழ் !! கன்னியரை பாடும் தமிழ்!!
தென்றலாய் வீசும் தமிழ்!!தேனருவி பாயும் தமிழ்!!
வளங்களை சேர்த்த தமிழ்!!
பாரதி தந்த தமிழ்!! சுதந்திரம் கண்ட தமிழ்!!
புரட்சி கண்ட தமிழ் !! புதுமைகள் படைத்த தமிழ்!!
கண்ணதாசன் கண்ட தமிழ்!!
கண்ணன் கீதமெல்லாம் தமிழ்! தமிழ்!!
கலைஞன் கண்ட கோபாலபுரத் தமிழ்!!
என்றும் வாழும் நின்று நிலைக்கும்
எங்கள் தமிழ்! எங்கள் தமிழ்!
--------------------------
எதற்கு? எதற்கு?
-------------------
பொறுமை இல்லா "அறிவு" எதற்கு?
திருமணம் வேண்டாத ஆண் பெண் எதற்கு?
பயன் இன்றி பொழுதை கழிக்கும் இளமை எதற்கு?
படி இல்லாத குளம் எதற்கு?
முதுமையை பேணாத பாசமில்லா பிள்ளைகள் எதற்கு?
நறு மணம் இல்லாத பூ மாலை எதற்கு?
கல்வி இல்லாத "புலமை" எதற்கு?
குழந்தை இல்லாத "செல்வம்" எதற்கு?
அழகாய் இருக்கும் "ஆடை" இல்லாத பெண் எதற்கு?
சேவை மனம் இல்லாத துறவு எதற்கு?
பருக முடியாத நீர் எதற்கு? --------------------------
I am Kavithai.Sasikala, MSC, PGDCA, DTT,(M.PHIL), kavithaisasikala2000@gmail.com
http://kavithaisasikala2000.blogspot.com/ wish to have your firendship.accept.